முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவது எப்படி? | First Graduate Certificate in online

Updated On

rev-104 முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? |
rev-104 First Graduate Certificate

Muthal Pattathari Sandrithal in Online

முதல் பட்டதாரி திட்டம் என்னவென்றால் ஏழை எளிய மாணவர்களும் பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு முதல் பட்டதாரிகளுக்கு (first graduate certificate in tamilnadu) சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. நீங்கள் உங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால், தமிழக அரசின் சலுகைகள் மற்றும் உதவித்தொகையை பெறமுடியும். உங்கள் தந்தை, தாய் அல்லது தங்கை/சகோதரர்கள் ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்திருந்தால், நீங்கள் இந்தச் சான்றிதழைப் பெறத் தகுதியற்றவர் என்று அர்த்தம்.

முதல் பட்டதாரி சான்றிதழ் பயன்கள் | First Graduate Certificate Benefits in tamil

முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகளை பெற கவுன்சிலிங் (counseling) சென்றிருக்க வேண்டும். கவுன்சிலிங் சென்று கல்லூரியில் சேரும் பொழுது, உங்களிடம் முதல் தலைமுறை பட்டதாரி சான்று இருந்தால் கல்லூரி கட்டணத்தில் சலுகை உண்டு. பொறியியல் படிப்பிற்கு ரூ.10,000 வரையும் நேரடியாக டிப்ளமோ இரண்டாம் வருடம் சேருபவர்களுக்கு ரூ.40,000 வரையும், மருத்துவ படிப்பிற்க்கு ரூ.1.25 வரையும் கட்டண சலுகை உண்டு.

First Graduate Certificate Meaning in Tamil | முதல் பட்டதாரி என்றால் என்ன?

ஒரு குடும்பத்தில் யார் முதன் முதலில் பட்ட படிப்பு படிக்கிறார்களோ அவரே முதல் பட்டதாரி ஆவார். இதற்க்கு முன்பு வேறு யாரும் அந்த குடும்பத்தில் பட்டம் பெற்றிருக்க கூடாது.

First Graduate Certificate in Online

(Muthal pattathari certificate)

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறுவதற்கான எளிய வழிமுறைகள் கீழே உள்ளது.

முதல் பட்டதாரி சான்றிதழ் பெற தகுதிகள் | First Graduate Certificate Eligibility in Tamil

இந்த முதல் பட்டதாரி சான்றிதழைப் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு:

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள் யாரும் பட்டதாரியாக இருக்கக்கூடாது.
உடன்பிறந்தவர்கள் இந்தச் சான்றிதழைப் பெற்றிருக்கக் கூடாது.

How to Apply First Graduate Certificate Online in Tamilnadu

தேவையான ஆவணங்கள் | First Graduate Certificate Details in Tamil

இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரரிடம் பின்வரும் ஆவணங்கள் இருக்க வேண்டும்

  • ரேஷன் கார்டு
  • போட்டோ(Photo)
  • ஆதார் அட்டை
  • TC (மாற்று சான்றிதழ் )
  • 10/12 மதிப்பெண் சான்றிதழ்
  • குடும்ப உறுப்பினர்களில் படித்தவர்களின் TC

முதல் பட்டதாரி சான்றிதழை ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்துக்குள் சென்று, பயனாளர் உள்நுழைவை கிளிக் செய்யவும்.
  • ஏற்கனவே பதிவு செய்திருந்தால் username மற்றும் password கொடுத்து உள்ளே செல்லவும்.
  • புதிதாக பதிவு செய்தால் ‘New user’ option-ஐ கிளிக் செய்து, அதில் இருக்கும் விபரங்களை நிரப்பி Signup செய்யவும்.
  • பின்னர் உள்ளே நுழைந்ததும் ‘Revenue department’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • பிறகு First Graduate Certificate என்பதை தேர்வு செய்யவும்.
  • அதில் ரிஜிஸ்டர் எண் என்பதை கிளிக் செய்யவும் அல்லது உங்கள் பெயர் மற்றும்
  • தந்தை பெயரை கொடுக்கவும்.
  • உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து OTP ஜெனரேட் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு வரும் OTP எண்ணை கொடுத்து Proceed ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பிறகு பின்னர் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பம் (first graduate certificate application form) வரும், அந்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • குடும்ப உறுப்பினர் அனைவரின் விபரங்களும் கேட்கப்படும், அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்னர், மேலே கொடுக்கப்பட்ட ஆவணங்களின் ஒரிஜினலை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். செராக்ஸ் காபியியை ஸ்கேன் செய்ய வேண்டாம்.
  • பிறகு Self Declaration Form உங்களுக்கு கொடுக்கப்படும்.
  • அதை பிரிண்ட் செய்து கையொப்பமிட்டு, அதை Scan செய்து பதிவேற்றவும்.
  • இதற்கான கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்படும்.
  • அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS வரும்.
  • அதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • கடைசியாக ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டவுடன், பட்டதாரி சான்றிதழை இணையத்திலிருந்து பதிவிறக்கம் (first graduate certificate download online) செய்து கொள்ளலாம்.

 



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore