கங் பாவ் சிக்கன் | Kung Pao Chicken In Tamil

Updated On 25/11/2021

கங் பாவ் சிக்கன் செய்வது எப்படி??

கங் பாவ் சிக்கன் சீன உணவு வகைகளில் மிகவும் முக்கியமான உணவாகும். இது காரம் மற்றும் இனிப்பு கலந்த சுவையில் இருக்கும் அதுமட்டுமல்லாது இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த சைனீஸ் கங் பாவ் சிக்கனை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். அதற்க்கான செய்முறைகளை கீழே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 1. 500 கிராம் எலும்பு இல்லாத கோழிக்கறி
 2. 2 தேக்கரண்டி சீன ரைஸ் ஒயின்
 3. 2 டீஸ்பூன் சோள மாவு
 4. 3 முதல் 4 டீஸ்பூன் எண்ணெய்
 5. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
 6. 1/2 கப் சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய் நறுக்கியது
 7. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 8. 16 முதல் 20 காய்ந்த மிளகாய் நறுக்கியது
 9. 2 ஸ்பிரிங் வெங்காயம் நறுக்கியது
 10. 1/4 கப் வறுத்த வேர்க்கடலை

சாஸுக்கு:

 1. 1 தேக்கரண்டி டார்க் சோயா சாஸ்
 2. 3 டீஸ்பூன் சோயா சாஸ்
 3. 2 தேக்கரண்டி பால்சாமிக் வினிகர்
 4. 1 தேக்கரண்டி சீன ரைஸ் ஒயின் அல்லது உலர் ஷெர்ரி
 5. 2 தேக்கரண்டி சர்க்கரை
 6. 1 தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
 7. 1/4 கப் தண்ணீர்
 8. 2 தேக்கரண்டி சோள மாவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் அனைத்து சாஸ் பொருட்களையும் கலந்து தனியாக வைக்கவும்.
  • சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு பெரிய பாத்திரத்தில் வைக்கவும்.
  • அதனுடன் சீன ரைஸ் ஒயின் மற்றும் சோள மாவு சேரத்து மாரினேட் செய்யவும்.
  • நன்றாக கலந்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும் .
  • ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும்.
  • மாரினேட் செய்த சிக்கன் துண்டுகளை பாதி வேகும் வரை வதக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும்.
  • மீதமுள்ள அனைத்து எண்ணெயையும் வாணலியில் சேர்க்கவும்.
  • மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • சிவப்பு மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • அதனுடன் சிக்கன் துண்டுகள், கேப்சிகம் மற்றும் சாஸ் சேர்க்கவும். அனைத்தும் நன்றாக மிக்ஸ் ஆகும்வரை கிளறவும்.
  • சிக்கனை அலங்கரிப்பதற்கு வெங்காயத்தாள் மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும்.
  • இப்போது குங் பாவ் சிக்கன் தயார்.
  • இதை வைத்த சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.