வெஜிடபுள் கட்லெட் | Vegetable Cutlet Recipe In Tamil

Updated On

Veg cutlet in Tamil | வெஜ் கட்லெட்

பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை என்று சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்படினா இதை ட்ரை பண்ணி பாருங்க.

வெஜ் கட்லட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  1. உருளைக்கிழங்கு – 2 கப்
  2. பீன்ஸ் – 1/2 கப்
  3. கேரட் – 1 கப்
  4. பச்சை பட்டாணி – 1/2 கப்
  5. கொத்தமல்லி இலை – 1/2 கப்
  6. பச்சை மிளகாய் – 2
  7. சீரகம் – 1/2 டீஸ்பூன்
  8. கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  9. இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. பிரெட் கிரம்ஸ் – 1/2 கப்
  12. மைதா மாவு – 4 தேக்கரண்டி
  13. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  • நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், மற்றும் பச்சை பட்டாணி அனைத்தையும் குக்கரில் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். 2 அல்லது 3 விசில் விட்டு இரக்கவும். (இந்த காய் கறிகளை நீராவியிலும் வேகவைக்கலம்).
  • காய்கறிகளில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். தண்ணீர் இருந்தால் வடிகட்டி எடுத்து, பின்னர் மசித்து கொள்ளவும்.
  • அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கரம் மசாலா, இஞ்சி விழுது, உப்பு மற்றும் சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும். பின்னர் 6 தேக்கரண்டி பிரட்கிரம்ப்ஸ்(பிரட் துகள்) சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவை கையில் ஒட்டாமல் இருந்தால் பதம் சரியாக இருக்கும். இதில் எலுமிச்சை அளவு மாவை எடுத்து வட்ட வடிவமாக, வடை போல் தட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி மைதா மாவை சேர்த்து அதில் 7 முதல் 8 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு கிண்ணத்தில் பிரெட் கிரம்ப்ஸ் எடுத்து வைக்கவும்.
  • வடை போல் தட்டிய மாவை முதலில் மைதா கலவையில் நனைத்து எடுத்து பின்பு பிரெட் கிரம்ப்ஸில் பிரட்டி, எல்லா இடத்திலும் படும் படி பிரட்டவும்.
  • எல்லா உருண்டைகளையும் இதேபோல செய்து எடுக்கவும்.
  • ஒரு கடாயில் 3 முதல் 4 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும், பின்னர் கட்லெட் ஒவ்வொன்றையும் எண்ணெயில் போட்டு வேகவைக்கவும். இரண்டு பக்கமும் சிவந்து வந்ததும் அதை வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • இதே போல அனைத்து கட்லெட்டுகளையும் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான வெஜ் கட்லெட் தயார்.
  • புதினா சட்னி அல்லது எதாவுது ஒரு சாஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore