Tamil Christmas Songs Lyrics | கிறிஸ்துமஸ் பாடல் வரிகள்

Updated On

கிறிஸ்துமஸ் பாடல் வரிகள் – New Christmas Song Lyrics 2022 in Tamil

Tamil Christmas Songs Lyrics New

Magilchiyodu Thuthikkindrom | மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்

christmas tamil songs lyrics

மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மன மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா
எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா,சாரோன் ரோஜா

நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினாரே
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே
நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும்
அன்பு தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே

நெருக்கத்திலே இருந்த என்னை
விசலத்திலே வைத்தீரே
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே
இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே

அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதமானாவரே… உயர்ந்தவரே… இருள்
நீக்கும் ஒளிவிலக்கே
உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே

தாயைப்போல் என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ சொல்லப்பிள்ளை அல்லோ
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதமானவரே… உயர்ந்தரே… இருள்
நீக்கும் ஒளிவிளக்கே
உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே

தாயைப்போல் என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் துக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ நல்ல அப்பா அல்லோ
பிள்ளை அல்லோ செல்லப்பிள்ளை அல்லோ

Tamil Christmas Songs

Ponnaana Neram Neer – பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்

பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
பொன்னான நேரம்

நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம்
குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா

நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது

உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
மணவாளன் இயேசுவையே தினம் தேடுது

உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
கடினமான என் இதயம் கரைந்து போகுது

Christmas Songs for Men’s Choir Tamil

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே
மரியாளின் மைந்தனாய் இயேசு
பிறந்தார் பாவங்களைப் போக்கவே
மனுவாய் அவதரித்தாரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலு அல்லேலு
அல்லேலூயா

இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு
வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு
பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட
பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு

மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு
ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு
மேன்மையை வெறுத்தவர்
தாழ்மையை தரித்தவர்
ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

New christmas songs 2021 in tamil

Chrismas Entraal Kondaattam | கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டம்

லா லா லா லா லை லா லா லை
லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

Christmas என்றால் கொண்டாட்டமே
ஆடிப்பாடி மகிழும் நாட்களே
ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே
இயேசுவை கொண்டாடுவாங்களே x2

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
இயேசு இன்று பிறந்த தாலே
நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே
இயேசு இங்க வந்ததினாலே-2

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

கொடிய வியாதி பறந்து போகுமே
யெகோவா ராஃப்பா என்னை தொடுவாரே
விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே-2

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

Tamil Christmas songs lyrics

ஆனந்தம் பேரானந்தம்

ஆனந்தம் பேரானந்தம்
ஆண்டவர் பிறந்தார்
தேவ புதல்வன் தேடி வந்தார்
பாவ உலகின் இரட்சகராய்

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
கர்த்தாதி கர்த்தன் இயேசு ஜெனித்தார்
பக்தர்கள் கூடி மகிழ்ந்து பாடி
கர்த்தருக்கே தொழுகை செய்குவோம்

மன்னவன் இயேசு பிறந்ததாலே
மரண இருள் திசையில் வெளிச்சம்
புதிய ஜீவன் புனித வாழ்வு
பரம ஈவே கண்டடைந்தோம்

சத்திய வேத சாட்சி பகர
சத்திய பரன் இயேசு பிறந்தார்
சத்தியவான்கள் சத்தம் கேளுங்கள்
சத்திய கொடியை ஏற்றிடுங்கள்

கர்த்தரைக் காண காத்து தவிக்கும்
கணக்கில்லா பக்தர்கள் ஆயத்தம்
ஆமென் கர்த்தாவே திரும்பி வாரும்
ஆவிக்குள்ளாகி அழைக்கின்றோம்

இயேசுவின் மூலம் தேவனிடமே
இணைந்து சமாதானம் அடைந்தோம்
மெய் ஜீவ மார்க்கம் மேலோகம் சேர்க்கும்
மாதேவ சமூகம் பேரின்பமே

Chinna Chinna Kanmaniye Christmas song lyrics in tamil

Kanmani Nee Kanvalarai – கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ

Bethlehem song in tamil

Bethlehem Oororam | பெத்லகேம் ஊரோரம்

1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து

3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்

4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ

5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

christmas worship songs tamil

Athigalaiyil Paalanai Thedi | அதிகாலையில் பாலனை தேடி song lyrics

அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
அதிகாலையில் பாலனை தேடி
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க

மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல் காட்சியை கண்டிட நாமே

christmas worship songs tamil

அதிகாலை இயேசு வந்து | Athigalai yesu vanthu

1. அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.

2. உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: நேசரே, அன்பாக
எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்.

3. தினம் எங்களை நடத்தி,
சத்துருக்களைத் துரத்தி,
எங்கள் மனதை எழுப்பி,
நல்ல மேய்ப்பராயிரும்.

4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.

5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பாடல் வரிகள்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

இம்மானுவேல் இம்மானுவேல் | Immanuvel Immanuvel song Lyrics

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

1.பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

2.மகிமை நிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

3. மனிதனாகப் பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர்
நமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் | Piranthar Piranthar Kiristhu Piranthar

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க

அவரே வெளிச்சம் அவரே சத்தியம்
அவரே நித்தியம் அவரே நிச்சயம்

மண்ணில் சமாதானம் விண்ணிலும்
மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க
நம் மன்னன் பிறந்தார்

தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
எந்நாளும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்

மாந்தர் யாவரும் போற்றி பாடுங்கள்
நாதன் இயேசுவை வாழ்த்தி பாடுங்கள்திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore