தமிழ் நகைச்சுவை | Tamil Jokes

Updated On

Kadi Jokes in tamil | தமிழ் கடி ஜோக்ஸ்

நகைச்சுவை என்றாலே நமது மனது மகிழ ஆரம்பித்து விடும், அந்த அளவிற்க்கு ஜோக்ஸ் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாம் சற்று சோகமாக இருக்கும் போது நண்பர்களிடம் நகைச்சுவை ஏதாவது சொல்லு என்று கேட்பதுண்டு. ஏனென்றால் வாய் விட்டு சிரித்தாலே பல நோய்கள் வராது. உங்களுக்கு பிடித்தமான பல நகைச்சுவை தொகுப்புகள் கீழே உள்ளது. படித்து சிரித்து மகிழுங்கள்.

Best Jokes in Tamil

  1. தூங்குவதற்கு முன்னாடி ஏன் குட்நைட் சொல்றோம்??

விடை:  தூங்குனதுக்கு அப்பறம் சொல்லமுடியாது அதனால

2. ஒரு ஆண் B ஒரு பெண் B டீ குடிக்குது அப்ப ஒரு ஈ விழுந்திருச்சு
அப்ப ஆண் B பெண் B கிட்ட என்ன சொல்லியிருக்கும்?
விடை: AB CD E .
( A (ஏ) B CD (பாருடி ) E (ஈ) )

Tamil kadi jokes

3. கிணற்றில் கல்லை போட்டால் ஏன் முழிகிறது?

விடை: ஏன்னா அதுக்கு நீட்சல் தெரியாது..

சிறந்த நகைச்சுவை | Best tamil Joke

4. ஒரு ரூம்ல ஒரு கார்னர்ல ஒரு பூனை இருக்கு.
வலது மூலைல ஒரு எலி.
இடது மூலைல ஒரு கப் பால்.
பூனையின் கண்ணு எதில் இருக்கும் ?
பூனையின் கண்ணு அதோட முகத்தில்தான் இருக்கும்

மாணவர் நகைச்சுவை | வகுப்பறை நகைச்சுவை (Jokes in tamil for students)

5. ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!

குழந்தைகள் நகைச்சுவை

6. டீச்சர் : ஏன் லேட்?

சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்

டீச்சர் : போர்டுக்கும் லேட்டா வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?

சிறுவன் : பள்ளிப்பகுதி மெதுவாகச் செல்லவும்னு போர்டு வச்சுருந்தாங்க.

உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?

தெரியாது

Smiles

எப்படி?

முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.

Mokka Jokes in tamil

7. Coffee ஏன் உடம்புக்கு நல்லது இல்ல?

ஏன்னா அதுல 2 “e” இருக்கு

8. குரைக்கிற நாய் கடிக்காது

ஏன்?

ஒரே சமயத்தில் இரண்டு வேலையை  செய்ய முடியாது..அதனால தான்.

Funny jokes | Tamil funny joke

9. மாடு ஏன் எல்லாருக்கும் பால் கொடுக்குது?
விடை: ஏன்னா மாடுனால டீ காப்பி கொடுக்க முடியாதுல அதனால்தான் பால கொடுக்குதாம்.

Tamil Jokes Questions

10. உலகத்திலேயே பெரிய trouser எது?
விடை: அதுதான் bulltrouser

ஆசிரியர் மாணவர் நகைச்சுவை

11. டீச்சர்: “கண்ணகி மதுரையை எரித்தாள் ” இது என்ன காலம்?

மாணவர்: “FIRE SERVICE” இல்லாத காலம் Sir !

டீச்சர்: ????

12. மனைவி: பணம்‌ வந்தா கூடவே கஷ்டமும்‌ வந்துடும்‌.

கணவன்‌ : நான்‌ வரதட்சணை வாங்கி உன்னைக்‌ கல்யாணம்‌ பண்ணிக்கிட்டதைத்‌ தானே சொல்றே?

Doctor Jokes in Tamil

13. நோயாளி – ஏன் டாக்டர், இதைக் கொடுத்தபோது சுகர் மாத்திரைன்னுதானே சொன்னீங்க

டாக்டர் – ஆமா.. சொன்னேன்.. அதுக்கென்ன இப்போ

நோயாளி – இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பார்த்தேன்.. இனிப்பாவே இல்லையே.. கசந்துச்சே.. அதான் வந்தேன்

டாக்டர்– !!!!

14. மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
டான்ஸ் மாஸ்டர் டான்ஸ் போடறாங்க

நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…

நண்பர்கள் நகைச்சுவை | Friends Jokes

15. ந‌ண்ப‌ர் 1: ந‌டிக‌ருக்கும் ம‌ருத்துவ‌ருக்கும் என்ன‌ ஒற்றுமை ?
ந‌ண்ப‌ர் 2: தெரிய‌லையேடா?
ந‌ண்ப‌ர் 1:இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்ட‌ர்ல‌ யாரையாவ‌து போட்டு அறுத்துகிட்டு இருப்பாங்க‌.

16. தோழி 1 : என்ன‌டி இது அனியாய‌மா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்கார‌ரும் லீவு போட‌றாரா?
தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவ‌ரை லீவு போட‌ வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன‌ வேலையை யாரு செய்ற‌து.

Tamil kadi jokes question and answer

17. ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!

18. ஒரு சிறுவனை திருடர்கள் கடத்தினார்கள்
“உன் வீட்டில் இருக்கும் தங்கம், வைரம் எல்லாம் எங்கே இருக்கு” என்று கேட்டு மிரட்டினார்கள்.
“சாக்லேட், ஐஸ்க்ரீம் வாங்கி தந்தால் சொல்வேன் என்றான் சிறுவன்”
அவன் கேட்டதை வாங்கி கொடுத்து விட்டு
“இப்போ சொல்லு”
“எல்லாம் அடகு கடையில் இருக்கு”

Tamil Jokes

19. ஒரு டிராபிக் போலிஸ், பைக் ஓட்டி வந்தவனை நிறுத்தி கேட்டார்.

“என்னப்பா தொப்பி போட்டுட்டு வண்டி ஓட்டிட்டு வர்ற, ஹெல்மெட் எங்க?……”

“ஹெல்மெட்ட விட தொப்பிதான் சார் சேப்டி, அதான் சார்”……

“இன்னா ஜோக்கா?….என்கிட்டயேவா?……..”

“சார்..நெசமாத்தான் சொல்றேன்…பத்தாவது மாடியில இருந்து ஹெல்மெட்ட போட்டு பார்த்தேன். துண்டு துண்டா ஒடஞ்சிச்சு. …..

அப்புறம் தொப்பிய போட்டு பார்த்தேன் உடையவே இல்லை……

அப்ப தொப்பிதானே சேப்டி……..”!!!!!!!!!!!!!

 

20. கடைக்காரர்: சார், இந்த பேண்ட் 10 வருஷமானாலும் சாயம் போகாது, கிழியாது.

வாடிக்கையாளர்: அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

கடைக்காரர்: 10 வருஷமா நம்ம கடைலதான இருக்கு.

21. “உங்க மனைவிய செல்லமா எப்படி கூப்பிடுவிங்க?”
“கூகிள் ன்னு”
“ஏன்?”
“நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா”

Mokka jokes questions and answers in tamil

22. உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

23. செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா, நம்ம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

அப்பா மகன் நகைச்சுவை | Dad Jokes

24. ம‌க‌ன் அப்பாவிட‌ம்: அப்பா உன‌க்கு இருட்டில‌ எழுத‌ முடியுமா?
அப்பா : ஓ முடியுமே.
ம‌க‌ன் : அப்ப‌டின்ன‌ என்னோட‌ ரேங்க் கார்டுல‌ இப்ப‌ கையெளுத்து போடுங்க‌.

25. அப்பா: உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.

மகன்: ஏன் கடன் வாங்கலாமே!

தீபாவளி நகைச்சுவை | Diwali Jokes tamil

26. சார் புதுசா போ‌ட்ட ஸ்வீட் பாக்கெட் ஒ‌ண்ணு குடு‌ங்க

கடை‌க்கா‌ரர‌் ஒரு பா‌க்கெ‌ட்டை கொடு‌க்‌கிறா‌ர்

இ‌ந்த பா‌க்கெ‌ட் எ‌ப்போ போ‌ட்டது?

பாக்கெட் இப்ப போட்டதுதான் சார்…

ஒரே நா‌த்த‌ம் அடி‌க்குதே

ஸ்வீட்தான்சா‌ர் போன தீபாவளிக்கு போட்டது.

Maths Jokes | நகைச்சுவை புதிர்கள்

27. “103க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு?”
“104”
அதான் இல்ல, நடுவுல “0” தான் இருக்கு.

28. ஆசிரியர்: ஒரு தட்டுல பத்து லட்டு இருக்கு
அதுல 5 லட்டுவா உன் தம்பிய எடுத்துக்க சொல்ற
தட்டுல மீதி எத்தன லட்டு இருக்கும்?
மாணவன்: ஒண்ணுமே இருக்காது..
ஆசிரியர்: மக்கு, உனக்கு கணக்கே தெரியல
மாணவன்: உங்களுக்கு தான் என் தம்பிய பத்தி தெரியல…

காதல் நகைச்சுவை | Kadhal Jokes in Tamil

29. காத‌ல‌ன் : உங்க‌ அப்பாக்கு க‌ட‌ன் த‌ர்ற‌தும் உன‌க்கு முத்த‌ம் த‌ர்ற‌தும் ஒன்னுதான்?
காத‌லி : எதனால‌ அப்ப‌டி சொல்றீங்க‌?
காத‌ல‌ன் : ரெண்டு பேருமே திருப்பிக் கொடுக்க‌ற‌து இல்ல‌யே.

Jokes in tamil with Answer

30. செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.

 திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore