50+ விடுகதைகள் தமிழ் | Vidukathai in Tamil

Updated On

50 விடுகதைகள் | Vidukathai in Tamil with Answer

 

vidukathaigal in tamil images

தமிழ் புதிர்கள் மூளைக்கு வேலை | Vidukathai in Tamil

பாட்டி விடுகதைகள்

சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
விடை : புறா

வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
விடை : உளுந்து

சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
விடை : பூனை

தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
விடை : முதுகு

இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?
விடை : மின்மினிப் பூச்சி

விடுகதைகள் in tamil

பற்கள் இருக்கும் ஆனால் கடிக்க மாட்டான் அவன் யார்?
விடை : சீப்பு

சங்கீத பாட்டுக்காரன் மழையில் கச்சேரியே செய்வான் அவன் யார்?
விடை : தவளை

காற்றை குடித்து, காற்றில் பறப்பான் அவன் யார்?
விடை : பலூன்

எட்டு கால் ஊன்றி இருகால் பட வட்ட குடை பிடித்து வருவான் அவன் யார்?
விடை : நண்டு

வயதான ஒருவருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
விடை : பொக்கை

கடி விடுகதைகள் | Comedy விடுகதைகள்

கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?
விடை : ஆமை

அம்மா படுத்திருக்க மகள் ஒடிதிரிவாள் அது என்ன?
விடை : அம்மிகுலவி

ஒற்றைக்கால் வெள்ளைச்சாமி நீரோடையில் மீன் பிடிக்கிறான் அவன் யார்?
விடை : கொக்கு

பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசமலே சிவந்த வாய் அவள் யார்?
விடை : கிளி

குடியிருக்க கோட்டை கட்டும் அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும் அது என்ன?
விடை : பட்டாம்பூச்சி

தமிழ் நகைச்சுவை விடுகதைகள் | விடுகதைகள் மற்றும் விடைகள்

வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?
விடை : நாய்

வீட்டிலிரு்ப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்?
விடை : பூட்டும், சாவியும்

உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன?
விடை : பாய்

கழற்றிய சட்டையை மறுபடியும் போட மாட்டான் அவன் யார்?
விடை : பாம்பு

முள்ளுக்குள்ளே முத்துகுவலயம் அது என்ன?
விடை : பலாப்பழம்

தமிழ் விடுகதைகள் | Puzzles in Tamil with Answers

முக்கண்ணன் சந்தைக்கு போகின்றான் அவன் யார்?
விடை : தேங்காய்

பட்டுப்பை நிறைய பவுன் காசு அது என்ன?
விடை : மிளகாய்

தலையை சீவினால் தாளிலே மேய்வான் அவன் யார்?
விடை : பென்சில்

வெள்ளை மாளிகையில் மஞ்சள் ar அது என்ன?
விடை : முட்டை

ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான் அவன் யார்?
விடை : காகம்

சிறந்த விடுகதைகள் | Tamil Puzzles for Whatsapp with Answers

பாலாற்றின் நடுவே கருப்பு மீன் தெரியுது அது என்ன?
விடை : கண்கள்

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியதி பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அவள் யார்?
விடை : நிலா

ஆலமரம் தூங்க அவனியெல்லம் தூங்க, ஶ்ரீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
விடை : இதயம்

ஏற்றி வைத்து அணித்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
விடை : ஊதுபத்தி

மூன்றெழுத்து பெயராகும், முற்றும் வெள்ளை நிறமாகவும் அது என்ன?
விடை : பஞ்சு

Tamil Puzzle Questions | தமிழ் வார்த்தை புதிர்கள்

பிறக்கும் போது வால் உண்டு இறக்கும் போது வால் இல்லை அது என்ன?
விடை : தவளை

ஓடியாடி வேலை செய்த பின் மூலையில் ஒதுங்கி கிடப்பான் அவன் யார்?
விடை : துடைப்பம்

ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
விடை : தேன்கூடு

படுத்து தூங்கினால் கண் முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
விடை : கனவு

விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?
விடை : உலக்கை

விடுகதைகள் with Answer in Tamil

தன் உடல் முழுவதும் கண்ணுடியாள் தன்னிடம் சிக்கியோரைச் சீரழிப்பாள் அவள் யார்?
விடை : மீன்வலை

அரசன் இல்லாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக்காவல்கரன் ஒருவன் அவர்கள் யார்?
விடை : சூரியன், சந்திரன்

நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?
விடை : கண்ணாடி

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரை வர வலைப்பான் அவன் யார்?

அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?
விடை : வெங்காயம்

பாட்டி விடுகதைகள்

கசக்கி பிலிந்தலும் கடைசி வரை இனிப்பான் அவன் யார்?

விடை : கரும்பு

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
விடை : சிரிப்பு

ஏரியில் இல்லாத நீர், தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
விடை : கண்ணீர்

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவான் அவன் யார்?
விடை : மெழுகுவர்த்தி

ஓர் அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன?
விடை : பற்கள்

தமிழ் விடுகதைகள் 400 with Answer | பதில் கொண்டு தமிழ் விடுகதைகள் 400

ஊரெல்லாம் சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்?
விடை : செருப்பு

கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். இது என்ன?

விடை : மஞ்சள் கிழங்கு

பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். இவன் யார்?

விடை :தேன்

நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணி யில்லை இவர் யார்?

விடை : சிலந்தி

குழந்தை விடுகதைகள் with answer

உடம்பெல்லாம் சிவப்பு, இவருடைய குடுமி பச்சை   யார் இவர்?

விடை : தக்காளி

தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான். இவன் யார்?

விடை : நுங்கு

வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. இது என்ன?

விடை : நாணயம்
பூ பூப்பது கண்ணுக்கு தெரியும், காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?

விடை : வேர்க்கடலை
பட்டுப்பை நிறைய பவுன் காசுகள்.  இது என்ன?

விடை : மிளகாய்

அறிவியல் விடுகதைகள்

அள்ள முடியும். ஆனால் கிள்ள முடியாது அது என்ன?

விடை : தண்ணீர்

அதட்டுவான் அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வர மாட்டான் அவன் யார்?

விடை : நாக்கு

வெட்டி கொள்வான் ஆனாலும் ஒட்டிக் கொள்வான் அவன் யார்?

விடை : கத்தரிக்கோல்திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore