சிறந்த தமிழ் கவிதைகள் | Best Tamil Kavithaigal

Updated On

அழகான கவிதை வரிகள் | Kavithaigal in Tamil

வாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம். அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புதுப்புது அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. நாம் வாழ்க்கையில் துவண்டு விழும் போது, சில ஊக்கமளிக்கும் கவிதைககளை படித்தால் அது நமக்கு உற்சாகம் அளிக்கும்.

நமது வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் சில கவிதை வரிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் கவிதை வரிகள் | Tamil Kavithaigal

 

உன் பாதையில்  வேகத்தடைகள் இருக்கலாம்.

ஆனால் உன் லட்சியத்தின் மேல் கொண்ட நம்பிக்கையில் சிறிதும்

மனத்தடை இருக்கக் கூடாது.

 

உனக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை நோக்கி செல்,

வழிகள் வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம்.

முற்றும் இடம் முற்றிலும் உனதாகவே  இருக்கும்.

 

தோல்வி அடைந்தவனுக்கு தான் வெற்றியின் அருமை தெரியும். 

எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் கொண்டு வெற்றிக்காக போராடு.

 

கடிகார முள் போல வாழ்வது வாழ்க்கை அல்ல 

காலத்திற்கு ஏற்றார் போல் வாழ்வது தான் வாழ்க்கை.

 

வந்ததை எண்ணி வருந்தாதே

 வரப்போவதை எண்ணி கலங்காதே

 போனதை எண்ணி புலம்பாதே

இதுதான் வாழ்க்கை 

இதை என்றும் நீ மறவாதே.

 

தமிழ் கவிதைகள் வாழ்க்கை | Life Tamil Kavithaigal

motivational quotes in tamil

 

ஒவ்வொரு நாளும் தரும் இன்பமும் துன்பமும்

இரண்டற கலந்து வந்து உணர்த்தும் அனுபவம் தான் வாழ்க்கை.

 

மலர்களின் மதிப்பு அது தரும் வாசனையில்…

மனிதனின் மதிப்பு அவன் பேசும் பேச்சினில்…

 

புதுமை என்றும் புரியாதது..

புரிந்தால் அது புதியதோர் வாழ்க்கை..

 

உலகில் கொடுக்க கொடுக்க குறையாத செல்வங்கள் அன்பும் அறிவும் தான்

அன்பால் மனதை வெல்வோம்.

அறிவால் உலகை வெல்வோம்.

 

வீழ்ந்துவிட்டான், இனி எழ மாட்டான் என்ற எண்ணத்தை எதிரிக்கு கொடுத்துவிடாதே..

இவன் எழுந்தா மிரட்டலாக வருவான் என்ற பயத்தை எதிரிக்கு கொடு.

தமிழ் கவிதைகள் இயற்கை | Tamil Kavithaigal about Nature

tamil motivational quotes

 

நீ எவ்வாறு பேசக் கற்றுக்கொண்டயோ, 

அதே போல் மௌனத்தையும் கற்றுக்கொள். 

பேச்சு உனக்கு வழி காட்டலாம், 

ஆனால் மௌனம் நிறைய சந்தர்ப்பங்களில் உன்னை பாதுகாக்கும்.

 

பிறந்தேன் எதுவும் இல்லாமல்.. 

அலைந்தேன் எல்லாம் வேண்டுமென்று.. 

அறிந்தேன் எதுவும் நிரந்தரம் இல்லை என்று.. 

உணர்ந்தேன் உயிரும் சொந்தமில்லை என்று.. 

கடந்தேன் நொடி மட்டுமே சொந்தம் என்று.. 

புரிந்தேன் இதுதான் வாழ்க்கை என்று.

 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டு வழிகள் உண்டு.

 ஒன்று சூழ்நிலையை நமக்கு ஏற்றவாறு மாற்றுவது.. 

இன்னொன்று சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறுவது.

 

எந்த சூழ்நிலையிலும் நம் அன்பை இழந்துவிடக் கூடாது என்று நினைக்கும் ஒரு இதயம், 

தான் செய்யாத தவறுக்கு கூட மன்னிப்பு கேட்கும்.

 

வாழ்வில் அனுபவம் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்.

 ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றும்.

தாய்மொழி தமிழ் கவிதை | Kavithaigal Tamil

tamil kavithaigal about life

 

வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை.. 

தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே வராது.

 

ஒருவரை நம்புவதாக இருந்தால், அவர் சொல்லை கேட்டு நம்பாதே. 

அவர் செயலை பார்த்து பின் நம்பு.

 

இறைவனால் நமக்காக படைக்கப்பட்டது எதுவாயினும், 

அது நிச்சயமாக நம்மை வந்து சேரும்.

 

ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே. 

அவன் அதிஷ்டத்தை நம்புவது  இல்லை. 

மனதில் துணிவு வேண்டும்.

 

தோல்வி மட்டுமே உன்னை துரத்துகிறது என்றால்,

 ஒரு மிகப்பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கிறது.

Tamil Heart Touching Kavithaigal | தமிழ் கவிதைகள்

tamil thathuva kavithaigal images

 

புரிந்து நடக்க ஒரு துணையிருந்தல், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம்!!

வாழ்க்கை முழுவதும்.

 

இந்த உலகில் தானாக நிகழ்வது நீ பிறப்பதும் இறப்பதும் மட்டுமே. 

மற்ற அனைத்தையும் மாற்றுவது உன்னுடைய செயல்களே..

 

மலரின் மதிப்பு அதன் வாசனையில்..

மனிதனின் மதிப்பு பேசும் வார்த்தையில்…

 

சந்தோஷமாக வாழ பணம் தேவை இல்லை

சந்தோஷமாக வாழ்கிறோம் என்று காட்டிக்கொள்ள தான் பணம் தேவை.

 

மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி.

வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகி விட்டால்,

யாருடைய மாறுதலும் நம்மை பாதிக்காது.

 

உலகின் சிறந்த கவிதைகள் | Latest Tamil Kavithaigal Images

 

வாழ்க்கையில் உங்களிடம் இருப்பதைப் பார்த்தால், உங்களுக்கு எப்போதும் அதிகமாக இருக்கும். 

வாழ்க்கையில் உங்களிடம் இல்லாததை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு ஒருபோதும் போதுமானதாக இருக்காது.

 

நீ வாழும் வாழ்க்கையை நேசி. 

நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழு.

 

பிடித்த மனிதரோடு சிரித்து பேசு 

பிடிக்காத மனிதரோடு சிந்தித்து பேசு 

வாழ்க்கை அழகாகும்…!!திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore