அப்துல் கலாம் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes in Tamil

Updated On

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ் | APJ Abdul Kalam Quotes in Tamil

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியலுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகள் பலவற்றை கூறியுள்ளார். அவர் கூறிய ஒவ்வொன்றும் நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

அப்துல் கலாம் கூறிய பழமொழிகள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

அப்துல் கலாம் சிந்தனைகள்

abdul kalam quotes about dream in tamil

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

அப்துல் கலாம் இந்த மேற்கோளில் திறமை மற்றும் வாய்ப்புகளைப் பற்றி மிக எளிதாக விளக்கியுள்ளார். அதாவது இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருப்பதில்லை, அந்த திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகிறது. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நாம் நமக்கு இல்லாத திறமைகளை வளர்த்து நம் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் இந்த சமூகத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று இந்த சிந்தனையில் தெரிவிக்கிறார்.

Abdul Kalam Life Quotes in  Tamil | அப்துல் கலாம் Valkai பொன்மொழிகள் தமிழ்

abdul kalam quotes in tamil lyrics

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல…
உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் இவ்வாறு கூறுவார் அதாவது “ஆண்டவன் நல்லவங்களை ரொம்ப சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான்.  கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்”.

அதேபோல் அப்துல் கலாம் இந்த பொன்மொழியில்  கூறுவது, படித்து உயர்கல்வியைப் பெற்று புத்திசாலிகளாக உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்கள். அந்த கல்வியை பெறும் போது பல சோதனைகள் உங்களுக்கு வரலாம். ஆனால் அதை வென்று காட்டி நீங்கள் வாழ்க்கையில் உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அப்துல் கலாம் கவிதை தமிழ் | Quotes of Abdul Kalam in tamil

success abdul kalam quotes in tamil

ஒரு முறை வந்தால் அது கனவு.

இரு முறை வந்தால் அது ஆசை,

பல முறை வந்தால் அது லட்சியம்.

மேற்கூறிய பொன்மொழியில் அவர் கூற வருவது, உங்களை தூங்கவிடாமல், உங்கள் சிந்தனையிலேயே எப்பொழுதும் இருக்கும், நீங்கள் சாதிக்கத் துடிக்கும் அந்த ஒன்று கனவல்ல, அதுவே உங்கள் வாழ்க்கையின் லட்சியமாகும். அதை அடைவதற்கு தொடர்ந்து போராடுங்கள் எப்பொழுதும் விட்டுக் கொடுக்காதீர்கள், அதை நீங்கள் ஒருநாள் அடைந்தே தீருவீர்கள்.

உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே…

ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

அப்துல் கலாமின் இந்த சிந்தனை எவ்வளவு உன்னதமானது. ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு ஜாதகத்திலும், ஜாதகம் சொல்பவரிடமும் விட்டுவிட்டு வாழ்க்கையை  தொலைத்து விடாமல் இருங்கள் என்பதை எவ்வளவு எளிமையாக ஒரு வரியில் கூறியுள்ளார்.

அப்துல் கலாம் தத்துவங்கள் | excerpts of APJ Abdul Kalam in Tamil

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,

எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

ஒரு மனிதனுக்கு தன்மானம் என்பது மிகவும் முக்கியம் இல்லையா? ஒருவன் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றால் அவனுக்கு தன்னம்பிக்கையும் மிக மிக முக்கியம் அந்த தன்னம்பிக்கை வேண்டும் என்றால் ஒருவனுக்கு கல்வி அவசியம். சிறந்த கல்வியை கற்றவன் எவனும் யாரிடமும் எதற்காகவும் மண்டியிட வேண்டியது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

abdul kalam quotes in tamil hd images

அழகை பற்றி கனவு காணாதீர்கள்!

அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.

கடமையை பற்றி கனவு காணுங்கள்,

அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்!

இந்த உலகம் மிகவும் அழகானது அதில் வாழும் ஒவ்வொரு உயிர்களும் மிக அழகானவையே. இந்த நவநாகரிக யுகத்தில் தற்பொழுது ஒவ்வொருவரும் தன் கடமையை மறந்து தங்களை அழகாக்கி கொள்வதிலேயே பல மணி நேரங்களை செலவிட்டு தங்கள் உடல் நலனையும், தங்கள் அழகை பற்றி நினைத்து நினைத்தே மன நலனையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

ஆகவே அழகைப் பற்றி பெரிதும் கண்டு கொள்ளாமல் எவன் ஒருவன் தன் கடமையை நோக்கி முன்னேறி செல்கிறானோ அவனே தன் லட்சியத்தை அடைகிறான் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.

ஏ பி ஜே  கலாம் பொன்மொழிகள் | APJ   Kalam Ponmozhigal

abdul kalam quotes in tamil for students

கனவு காணுங்கள்!

ஆனால் கனவு என்பது

நீ தூக்கத்தில் காண்பது அல்ல..

உன்னை தூங்க விடாமல்

செய்வதே (இலட்சிய) கனவு

 

அப்துல் கலாமின் இந்த கனவு பற்றிய சிந்தனை, ஒருவன் சோம்பேறியாக இல்லாமல் தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை கனவு காண வேண்டும் ,அதை அடைய வேண்டும்.  அப்போது  தான் நீங்கள் இந்த சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பீர்கள்.

APJ Abdul Kalam Images with Quotes in Tamil

abdul kalam life quotes in tamil

கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்!

எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்!

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம், அதனைப் பற்றிய கனவு கண்டிப்பாக வேண்டும். அதுவே இந்த வாழ்க்கை பயணத்தை நீங்கள் மிக அழகாகவும் நிம்மதியாகவும் கடப்பதற்கு உறுதுணையாக இருக்கும். அப்துல் கலாம் அதனை இந்த மேற்கோளில் சிறப்பாக விளக்கியுள்ளார்

Motivational Quotes of Abdul Kalam in Tamil | அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழில்

motivational apj abdul kalam quotes in tamil

கஷ்டம் வரும் போது

கண்ணை மூடாதே,

அது உன்னை கொன்றுவிடும்.

கண்ணை திறந்து பார்,

அதை வென்றுவிடலாம்.

 

அப்துல் கலாமின் இந்த பொன்மொழிகள் அவர் கூறியிருப்பது, உங்கள் வாழ்க்கையில் எதிரே வரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு பயந்து கண்ணை மூடி விடாமல் உங்கள் கண்களை திறந்து பார்த்து அதை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும் என்பதை கூறியுள்ளார்.

Positive Abdul Kalam Quotes about Success in Tamil | Abdul Kalam Golden Words in Tamil

abdul kalam quotes in tamil download

உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால்

அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்!

அப்துல் கலாம் இந்த வாழ்க்கை தத்துவத்தில் கூற வருவதாவது,
நீங்கள் கிணற்றுத் தண்ணீரை போன்று ஒரே சிந்தனையை வைத்துக் கொள்ளாமல் ஆற்று நீரை போல்  பல சிந்தனைகளை ஓட விட்டுக் கொண்டே இருந்தால் அதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் முயற்சித்து பல புதுமையான விஷயங்களை செய்து வெற்றி பெறலாம் என்பதை கூறுகிறார்.

அப்துல் கலாம் சிந்தனைகள் | Abdul Kalam Thoughts in Tamil

ஒரு மனிதனின் அழகானது அவனது நிறமோ, பணமோ அல்ல!

அவனது அன்பான குணமும் சாந்தமான மனதும் தான் அழகு! – அப்துல் கலாம்

 

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால்

இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

 

அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை.

சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும். – அப்துல் கலாம்

 

அப்துல் கலாம் கல்வி கவிதை | Abdul Kalam Tamil Thathuvam

 

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்

வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே

படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. – அப்துல் கலாம்

 

நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே,

உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்! – அப்துல் கலாம்

 

 Abdul Kalam Motivational Quotes for Students in Tamil

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்,

வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. – அப்துல் கலாம்

நீங்கள் ஒரு தேர்வு எழுதும் பொழுது அல்லது விளையாட்டில் முக்கியமான கட்டத்திலோ எவ்வாறு இதனை செய்து முடிக்க போகிறோமோ என்று அழுத்தத்தை உங்கள் மனதில் ஏற்றாமல் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல்,  ஒரு குழப்பமும் இல்லாமல் செய்ய வேண்டிய செயலை மட்டுமே கவனத்தில் கொண்டு சிறப்பாக செய்தால் அதுவே வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

உனது செயல்களின் பலன் உனக்கே சொந்தம்!

எனது செயல்களின் பலன் எனக்கே சொந்தம்!

எனவே நற்செயலே நன்மை தரும்! – அப்துல் கலாம்

ஒரு முட்டாள் தன்னை முட்டாள்

என்று உணரும் தருணத்தில்

புத்திசாலியாகின்றான்.

ஆனால்,

ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி

என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில்

முட்டாளாகின்றான். – அப்துல் கலாம்

 

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,

கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

வாழ்க்கையில் ஒருவர் கனவு காண வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அந்த கனவை நோக்கிய தன் பயணத்தை ஆரம்பிப்பதிலும் தொடர்ந்து  அந்த கனவை அடைய தன்னை உயர்த்திக் கொள்வதிலும் முக்கியத்துவத்தை செலுத்த வேண்டும்.  அதை விட்டுவிட்டு கனவை மட்டுமே கண்டு கொண்டிருந்தால் நீங்கள் வெறும் கனவு காண்பவர்களாகவே உங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டி வரும்.

ஒரு மாணவரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது.

மாணவர்கள் கேள்விகள் கேட்கட்டும்.

ஏன்? என்ற கேள்வி ஒவ்வொரு மாணவரின் இதயத்திலும் இருக்க வேண்டும் அப்போதுதான் உங்கள் கியூரியாசிட்டியை வளர்த்துக்கொண்டு ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். ள் உங்கள் ஆசிரியரிடம்  கேள்வி கேளுங்க, தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆசிரியருக்கே தெரியவில்லை என்றாலும் அது அவர்களை மேலும் தெரிந்து கொள்வதற்கான உத்வேகத்தை அவர்களுக்கும் அளிக்கும். இந்தக் கருத்தையே இந்த மாணவர்களுக்கான பொன் மொழியாக அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்

குழந்தைகள் தனித்துவமாக இருக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில்,

அவர்களைச் சுற்றியுள்ள உலகம் அவர்களை

எல்லோரையும் போல் காட்ட எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது.

குழந்தைகள் தனித்துவமானவர்கள் அவர்களை குதிரையை கண்ணைக் கட்டிக் கொண்டு ஒரே நேர்கோட்டில் செல்வதைப் போன்று செலுத்தாமல் அவர்களின் கற்பனை திறமைய வளர்க்க உதவுங்கள் அதை அடைவதற்கு ஊக்கம் அளியுங்கள்.

வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் தொடங்கும் என்பதால்

முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்.

அப்துல் கலாம் இந்த மோட்டிவேஷன் Quotes , யார் ஒருவரும் ஒரு செயலை செய்யும் பொழுது அதனுடைய முடிவை பற்றி கவலைப்படாமல் அந்த செயலை எப்படி எவ்வாறு செய்து முடிப்பது என்பதில் கவனம் செலுத்துவோமே ஆனால் வெற்றி நம்மை நிச்சயம் அடைந்தே தீரும்.

ஒருவேளை அதில் நீங்கள் தோல்வியே தழுவி இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் நீங்கள் அந்த செயலை செய்யும் பொழுது கற்றுக் கொண்ட பாடத்தை அனுபவம் ஆக்கிக் கொண்டு மீண்டும் முயற்சி செய்து அதில் வெற்றியை அடைய வேண்டும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore