45+ ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் | Jawaharlal Nehru Quotes In Tamil

Updated On

ஜவஹர்லால் நேரு சமுதாயத்திற்கும், குழந்தைகளுக்கும் கூறிய ஊக்கமூட்டும் பொன்மொழிகளை இந்த பதிவில் பார்ப்போம்.

நேருவின் பொன்மொழிகள் | Famous Quotes of Jawaharlal Nehru in Tamil

பண்டிட் ஜவஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவர். இவர் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த உலகத் தலைவர்களாகப் புகழ் பெற்றவர். இவரது பிறந்த நாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

நேருவின் எண்ணங்கள், தத்துவம், தொலைநோக்கு பார்வை மற்றும் நேரு மேற்கோள்கள் ஆகியவை, அவருக்கு “ஆசிய ஜோதி” என்ற சிறப்பு பெயரை பெற்றுத்தந்தது.

பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் புரட்சிகர பொன்மொழிகள் உலகின் சிறந்த பொன்மொழிகளுள் ஒன்றாகும். அதை இந்த பதிவில் பார்ப்போம்.

நேருவின் சிறந்த பொன்மொழிகள் | Best Quotes of Jawaharlal Nehru in Tamil

மிகச்சிறந்த பொன்மொழிகள்

 • உங்கள் உடல் நலனை எப்படிப் பாதுகாக்கிறீர்களோ, அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.
 • உலக வரலாற்றைப் படிப்பதைவிட, உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
 • ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில்வாழ்க்கையைத் தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.
 • நாம் பலவீனமாய் இருக்கும் போது தான் பலாத்காரத்தை பற்றி சிந்திக்கிறோம்.
 • தோல்வி ஏற்படுவது அடுத்த காரியத்தை கவனமாக செய்.. என்பதற்கான எச்சரிக்கை.
 • பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது.
 • உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவருக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்துவிடும்.
 • செயலுக்கு முன்பே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு, வெற்றி என்பது வெகுதூரம்.
 • ஒரு நாட்டின் உண்மை வலிமை அதன் மக்களின் கட்டுப்பாடு நிறைந்த உழைக்கும் ஆற்றலிலேயே காணப்படுகிறது. கடுமையான உழைப்பே நமக்கு செல்வத்தைத் தரும், நமது வறுமையை ஒழிக்கும். எனவே நாம் அனைவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.

குழந்தைகள் தின பொன்மொழிகள் | Jawahar Lal Nehru Quotes for Childrens Day in Tamil

 • என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
 • கழிந்ததை கணக்கெடுத்து கொண்டே இருந்தால் இருப்பதையும் காணாமல் தொலைத்து விடுவோம்.
 • சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே, உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.
 • வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே.
 • இதயத்தைப் பொறுத்தே இனிய சுதந்திரம்.
 • அச்சம் போன்று மிக மோசமான ஆபத்து ஒன்றும் இல்லை.
 • அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.
 • அடக்கம் நல்லதுதான். ஆனால், அது அடிமைத்தனமாக இருக்கக்கூடாது.
 • அறநெறியை மறந்துவிடில் அழிவொன்றே விளைவாகும்.
 • திட்டமிடாத செயல், துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது.

Children’s Day Quotes by Nehru in Tamil

happy birthday quotes for nehru in tamil

 • உண்மையை சில சமயங்களில் அடக்கிவைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது.
 • நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது, அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.
 • புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், எந்தக் கொள்கையை நீங்கள் பின்பற்றிய போதிலும் மிகவும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.
 • விளைவுகளை வைத்து தான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.
 • செயலில்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது, எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.
 • நம்முடைய முக்கியக் குறைபாடு எதுவென்றால், நாம் காரியங்களைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான்!
 • மனிதனைவிட சக்திவாய்ந்தது சூழ்நிலையே.
 • வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.
 • கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தைத்தான் நாடுவார்கள்.
 • அச்சம் அறிவுக்கு ஆரம்பம் பொய்மையின் மிக நெருங்கிய நண்பன்.

ரோஜாவின் ராஜா நேரு கவிதைகள் | Pandit Jawaharlal Nehru Quotes

childrens quotes in tamil with nehru image

 • முயற்சியுடன் செயல்படுகிறவர்களையே வெற்றி தழுவும்.
 • கடப்பதற்கு தடைகளும் தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லை என்றால் வாழ்க்கை சலிப்பாகிவிடும்.
 • மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.
 • கோபமாகப் பேசும்போது அறிவு தன் முகத்திற்கு திரையிட்டுக்கொள்கிறது.
 • துணிந்து செயல்படுகிறவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். கோழைகளின் பக்கம் வெற்றி தலை வைத்துப் படுப்பதில்லை.
 • கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தை தான் நாடுவார்கள்.
 • பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது.
 • ஒன்றை அடைவதற்கு தேவையானவை: நல்ல குணம் ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore