குழந்தைகள் தின பேச்சுப்போட்டி கட்டுரை | Children’s day Speech in Tamil

Updated On

இங்கே ஜவஹர்லால் நேரு பற்றிய குழந்தைகள் தின பேச்சுப்போட்டி கட்டுரை மற்றும் எழுத்துப் போட்டிக்கான சிறப்பு கட்டுரை தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி என்று பல போட்டிகள் நடத்தப்படும். நவம்பர் 14 அன்று, மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் குழந்தைகள் தின வாழ்த்துக்களை கூறி மகிழ்வர்.

Children’s Day Speech about Jawaharlal Nehru in Tamil | Children’s Day Katturai in Tamil

If you are looking for children’s day speech in tamil or children’s day essay in tamil, check out this Article. You can use the below Article in your Children’s Day Essay or Speech competition in your school.

Children’s Day Speech in Tamil for Teachers

Students or Teachers any one can utilise the content for their speeches.

தமிழில் குழந்தைகள் தின உரையையோ அல்லது தமிழில் குழந்தைகள் தினக் கட்டுரையையோ நீங்கள் தேடுகிறீர்களானால், பின்வரும் கட்டுரையைப் பார்க்கவும். உங்கள் பள்ளியில் குழந்தைகள் தின கட்டுரை அல்லது பேச்சுப் போட்டியில் கீழே உள்ள கட்டுரையைப் பயன்படுத்தலாம்.

ஏன் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறோம்?

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குழந்தைகளுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர். குழந்தைகளால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.  எப்போதும் ஒரு ரோஜா பூவை தன் சட்டையில் குத்தி வைத்திருப்பார்.

குழந்தைகளுக்கான மேற்கோள்களையும்,  புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதில் ஒரு புகழ்பெற்ற பொன்மொழி தான், “இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைவர்கள்” என்று ஜவஹர்லால் நேரு கூறியது. அவர் மாணவர்களுக்காக பல கல்லூரிகளையும், பல உயர்கல்வி நிறுவனங்களையும் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு உருவாக்கினார்.

இளைய தலைமுறையே எதிர்கால வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பல நல்ல செயல்களை செய்தார் . இதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஜவகர்லால் நேரு பிறந்த தினமான நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் தினம் விடுமுறையா?

குழந்தைகள் தினம் பொது விடுமுறை கிடையாது. ஆனால் பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள் பேச்சு போட்டிகள், ஓவிய போட்டிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குழந்தைகளுக்கான நேருவின் தொண்டு – Nehru’s Contribution to Education

கல்விக் கொள்கை

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டை முன்னேற்றுப் பாதையில் கொண்டு செல்ல கல்வி முக்கியமானது என்று நேரு புரிந்து கொண்டார். கல்வியே இந்த நாட்டை மேம்படுத்தும் என்று அவர் உறுதியாக நம்பியதால் கற்றலுக்கு ஏதுவாக கல்வி துறையை சீர்படுத்தினார். நேருவின் கல்விக் கொள்கையானது காரல் மார்க்ஸ் மற்றும் மகாத்மா காந்தியின் கொள்கைகளின் படி அமைந்தது.

ஐந்து ஆண்டு திட்டம்

இதனால் இந்திய அரசின் ஐந்து ஆண்டு திட்டங்களை வகுத்த போது இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி இலவசம் மற்றும் கட்டாயமானது என்பதை உறுதிப்படுத்தினார்.

உயர் கல்வி நிறுவனங்கள்

நாட்டின் இளைஞர்களுக்கு நேருவின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தான் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான (ஐஐடி), இந்திய மேலாண்மை நிறுவனங்கள், அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற முக்கிய உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.

இந்தியாவின் முதல் ஐஐடியானது மேற்கு வங்காளத்தின் காரக்பூரில் 1950 ஆவது வருடம் மே மாதம் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர் போன்றவைகள் ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கினார்.

கலை, கலாச்சாரம்

மேலும் நேரு மாமா அவர்கள் லலித் காலா அகாடமி மற்றும் சாகித்திய அகடமையாய் நிறுவ உதவினார். அவரைப் பொறுத்தவரை, கல்வி என்பது கல்வியாளர்கள் மற்றும் அறிவார்ந்த படிப்புகள் மட்டுமல்ல, கலை, கலாச்சாரம் மற்றும் அனைத்து வித கலைகளையும்  பற்றியது.

இதனால்தான் சுதந்திர இந்தியாவின் நவீன கல்வி முறையின் சிற்பியாக திரு பண்டிட் ஜவஹர்லால் நேரு கருதப்படுகிறார்.

குழந்தைகளின் உரிமைகள் என்ன? Children’s Rights in India?

இந்திய அரசியலமைப்பின் படி, குழந்தைகளின் உரிமைகள் பின்வருமாறு:

  • 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமை.
  • எந்தவொரு அபாயகரமான வேலையிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.
  • குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான உரிமை.
  • துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.
  • அவர்களின் வயது அல்லது உடல்  வலிமைக்கு பொருந்தாத தொழில்களை அணுகுவதற்கான பொருளாதாரத் தேவையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை.
  • ஆரோக்கியமான வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள் மற்றும் வசதிகளுக்கான உரிமை.
  • சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான உரிமை மற்றும் சுரண்டலுக்கு எதிராக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

உலக குழந்தைகள் நாள் – International Children’s Day

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 1 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும், உலகளாவிய குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.

Press ctrl + p to download this “children’s day speech in tamil Article”  as PDF.

 

More About Childrens’ Dayதிருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore