பொங்கல் வாழ்த்து கவிதைகள் -2022 | Pongal Kavithai in Tamil

Updated On 12/01/2022

பொங்கல் திருநாள் கவிதைகள் – 2022

பொங்கல் என்பது தமிழர்களின் பழமையான பண்டிகையாகும். இத்திருவிழா சங்க காலத்திலிருந்து தமிழ் மக்களால் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா ஆகும். இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர், இந்த நாளில் இறைவனை வணங்குவது மட்டுமல்லாது விவசாயத்துக்கு உதவும் உயிரினங்களையும் மக்கள் வணங்குகின்றனர்.

இந்த மகிழ்ச்சியான நாளில் உங்கள் அன்புக்குரியவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்து செய்தி மூலம் தங்களது பொங்கல் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மகிழுங்கள்.

உங்கள் அனைவருக்கும் திருத்தமிழ் வலைதளத்தின் சார்பாக மகிழ்ச்சியான மற்றும் வளமான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் வாழ்த்து அட்டைகள்

Download

தித்திக்கும் தமிழ் போல‌

பொங்கட்டும் பொங்கலது

புதுப்பானை பொங்கல் போல‌

பிறக்கட்டும் புதுவாழ்வு

திகட்டாத கரும்பு போல‌

இனிக்கட்டும் மனிதனின் மனது

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Pongal Valthukkal – 2022

Download

நோயற்ற சுகத்தை பெற்று 

மாசற்ற செல்வதை பெற்று 

அன்புடைய சுற்றத்தை பெற்று 

இதயத்தில் இன்பத்தை பெற்று 

மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்..

இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

பொங்கல் வாழ்த்து படங்கள்

Download

இன்பம் பொங்கி வழியட்டும்

இல்லங்களிலும், உள்ளங்களிலும்!

இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்…

Download

வெல்லம், பால் மற்றும் உலர் பழங்களின் இனிப்பு

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

இனிமையான வாழ்க்கையை தரட்டும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

2022 பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

Pongal Valthu Kavithaigal – 2022

Download

புதிய நெல்லை அறுத்து வந்து
பொதிந்திருக்கும் உமியகற்றி
புத்தரிசி முத்தெடுத்து
பொங்கலிடும் வேளையிலே
பொங்கலோ பொங்கலென
பாவையரும் குலவையிட
பொங்கி வரும் பொங்கலை போல்
பொங்கட்டும் மகிழ்ச்சியெங்கும்..

பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ்

Download

பொங்கல் போல் புன்னகை பொங்கட்டும்

மக்கள் மனசெல்லாம் மகிழ்ச்சி மலரட்டும்

உள்ளம் எல்லாம் உற்சாகம் பரவட்டும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

Pongal Wishes Quotes – 2022

Download

அனைவர் இல்லத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் பொங்க

இறைவனை வணங்குவோம்..

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

Download

மங்களம் பொங்கட்டும் மனக்கவலை தீரட்டும்…

புதுபானை அரிசிபோல புதுவாழ்வு மலரட்டும்…

பொங்குகின்ற பொங்கல் போல மகிழ்ச்சி பொங்கட்டும்…

செங்கரும்புச் சுவைபோல உழவர்மனம் மகிழட்டும்…

மங்காத நல்வாழ்வு யாவருக்கும் கிடைக்கட்டும்…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

Pongal Kavithai Whatsapp Status in Tamil

Download

தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளாம்
பொங்கி வரும் பொங்கல் போல பொங்கட்டும் எங்கும் மகிழ்ச்சி..
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

Download

Happy Pongal Wishes in Tamil

Download

மாதவனை வணங்கிய மார்கழி முடிந்தது

ஆதவனை வணங்கிட தைப்பொங்கல் வருகுது

போகட்டும் துன்பமென போகியோடு துவங்குது

பொங்கட்டும் இன்பமென பொங்கல் தொடருது..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…

Download

2022 பொங்கல் உங்கள் வாழ்க்கையில்

அன்பு, மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் கடவுள் அருள்

ஆகியவற்றால் நிரப்பப்பட வேண்டும் என்று இறைவனை வணங்குவோம்.

இனிய பொங்கல் வாழ்த்துகள்…

Happy Pongal Images -2022

Download