வயிறு தட்டையாய் மாற என்ன செய்ய வேண்டும்?

Updated On

தொப்பை என்பது இப்போது இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது, அதற்கு காரணம் நமது உணவுமுறை மட்டும் இன்றி நாம் ஒரே இடத்தில் அமர்ந்தவாறே வேலை பார்ப்பதும் தான்.

தொப்பை உண்டாக உணவு மட்டும் காரணம் அல்ல உடல் இயக்கம் இல்லா வேலைகளில் இருப்பவர்கள் அதிகரிப்பது தான் முக்கிய காரணம்.

ஒரு காலத்தில் உலகம் தட்டையானது என்று நம்பி கொண்டு இருந்தது மனித இனம்.பின் வந்த ஆய்வாளர்கள் அந்த கருத்தை தவறு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபணம் செய்து மாற்றினார்கள். அதே போல் இப்பொழுது நம் நாகரீக சமூகத்தில் பல மக்கள் தங்களுக்கு தொப்பையான வயிறு இருந்தும் தட்டையான வயிறு இருப்பதாய் நம்பி ஓடி கொண்டிருக்கிறார்கள். நாளைடைவில் தொப்பையின் விட்டம் அதிகமாகி கொண்டே வந்து சட்டை பத்தாமல் போய் பட்டன்கள் தெறிக்கும் போது தலை தெறிக்க ஜிம்முக்கு ஓடி போய் அட்மிஷன் போடுவார்கள்.

ஜிம்மில் நாட்கள் ஓடுமே தவிர மனம் நினைக்காதவரை வயிற்றின் விட்டம் குறையாது. தட்டையான வயிறு என்பது கனவாகவே போய்விடும். ஆகவே தொப்பை வரும் முன் காப்பது சிறந்தது.இயல்பிலேயே உடல் பயிற்சி உணவுக்கட்டுப்பாடு என வாழ்வை வரையறுத்து கொண்டு வாழ்ந்து வந்தால் தட்டையான வயிறு தரமாக நிலைபெற்றுவிடும்.

மனிதர்களுக்கு உடல்பருமன் இருப்பதை விட தொப்பை இருப்பதே பேராபத்து என்று கூறுகிறார்கள் சர்வதேச ஆய்வாளர்கள்.

தட்டையான வயிற்றை பெற பல வழிகள் உண்டு அதில் எளிமையான சில வழிகள் :-

ஒரு 48 நாள் சவால் எடுத்து கொள்ளுங்கள்….பின் அதையே பழக்கமாகி கொள்ளுங்கள்.

01.  தட்டையான வயிற்றை பெறுவதற்கு ஜங்க் உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து  நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள்,முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பீன்ஸ், நட்ஸ், பயிறுகள் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள தொடங்க வேண்டும்.

02.  கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல் கழிவுகள் வெளியேறவும் கொழுப்பு அகலவும் தினமும் 10 முதல்12 டம்ளர் சூடு தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். தட்டையான வயிற்றை பெறும் முயற்சியில் இறங்குவதற்கு 3-5 நாளைக்கு முன்னாள் விரதமும் இருக்கலாம். விரதம் இருக்கையில் 3-5 ஆப்பிள் சீடர் வினிகர் பானங்களையும்   குடிக்கலாம்.

03. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரினை எடுத்து, அதில் ஒரு அன்னாசிப் பழத்தை துண்டுகளாக்கி போட்டு அதோடு ஓமம் தூள் 4 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து பின் கொதிக்க விட வேண்டும். அன்னாச்சி பழம் நன்றாக வெந்து கூழ் போல் ஆன பின்னர். அடுப்பை அணைத்து விட்டு, அந்த நீரை இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்து விட்டு. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை குறைந்து சீரான வயிறு கிடைக்கும் தொடர்ந்து சில மாதங்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

04.  இரண்டு டீஸ்பூன் ஆர்கானிக் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 8 அவுன்ஸ் சுத்தமான சுடவைத்து ஆறவைத்த தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் அது கொழுப்பை குறைக்கும்.

05.  தினசரி உணவில் வேக வைத்த அல்லது பச்சை காய்கறிகள் ஏதேனும் ஒன்றை அதிகமாக உண்ண வேண்டும்..

06.  நாட்டுக்கோழி சூப்பை தினமும் ஒரு வேளை உணவாக  மாற்றிக்கொண்டால் அது வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும்

07.  வயிற்றை பட்டினி போடாமல் 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை எந்த வகையிலாவது ஒரு உணவு உண்பது போல் மாற்றிக்கொள்ள வேண்டும். அது தான் நம் உடலின் மெட்டபாலிக் சூழலை பாதுகாத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும்.

08.  ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை என உணவு வேளையை பிரித்துக்கொண்டு காய்கறிகளையும் பழங்களையும் உண்டு வந்தால் பசியை தவிர்க்கலாம். இந்த டயட்டில் வாழைப்பழம், ஆப்பிள் போன்றவைகளை தவிர்க்கலாம்.

09.  சீரான முறையில் உடற்பயிற்சியையும் தினமும் தொடர வேண்டும். இயலாதவர்கள் குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்காவது நடை பயிற்சி செய்வது அவசியம்.

10.  பத்து முதல் 15 கிராம் அளவில் தினமும் வால்நட்ஸ் உண்பதன் மூலம்  தொப்பை மட குறைந்து அதில் உள்ள இரண்டு மடங்கான பாலிஅன்சேச்சுரேட் மூலம் கொழுப்பு அமிலங்கள் கரைந்து சரும புற்று நோய் வராமல் காக்கிறது.

பல்லாயிரம் வழிகள் இருந்தாலும் தட்டையான வயிற்றின் மூலம் தரமான வாழ்வு பெற மேற்சொன்ன பத்து வழிகளை தொடர்ச்சியாக பின்பற்றி பாருங்கள்.உடல் மட்டும் அல்ல வாழ்க்கையே அழகாகும்

தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்…!

சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.
வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.

செய்முறை:

குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும், மூச்சை உள்ளே இழுத்து அடக்கி வயிற்றை இறுக்கிக் கொள்ளவும். கைகளை தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு ஐந்து முதல் பத்து வினாடியாக மூன்று முறை செய்யவும் மிக மெதுவாக உயரே தூக்கி இறக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓவ்வொரு காலாக தூக்கி பழகலாம்.

பலன்கள்:

வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும், கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பட்டு தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore