இனி SBI வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் ஓபன் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

Updated On

Passbook மற்றும் ATM Card இருந்தால் போதும் உடனே நெட் பேங்கிங் வசதியை தொடங்கிவிடலாம்!!..

SBI வங்கி என்றாலே லைனில் காத்திருப்பது தான் நமக்கு நியாபகதுக்கு வரும் அதற்கு காரணம் எல்லா sbi வங்கி கிளைகளிலும் எப்போதுமே கூட்டமாக தான் இருக்கும்.

பல SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அக்கவுண்ட் இருக்கும் ஆனால் இன்டர்நெட் பேங்கிங் வசதி இல்லாமல் இருக்கும். நெட் பேங்கிங் வசதியை தொடங்க வங்கிக்கு செல்ல வேண்டும் என்று பலர் இந்த வசதியை தொடங்காமலே உள்ளனர். அதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. ஆம், இனி வீட்டிலிருந்த படியே நெட் பேங்கிங் வசதியை தொடங்க முடியும். அதற்கு உங்களிடம் பாஸ்புக் மற்றும் ATM card மட்டும் இருந்தால் போதும்.

 

ஆன்லைனில் நெட் பாங்கிங் வசதியை தொடங்க கீழ்வரும் படிகளை பின்பற்றுங்கள்.

  • நெட் பேக்கிங் ஓபன் செய்ய முதலில் www.onlinesbi.com வங்கியின் இந்த தளத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் உங்கள் இடது புறத்தில் உள்ள New User Registration என்ற விருப்ப தேர்வை கிளிக் செய்து Next பட்டனை கிளிக் செய்யவும். பின்பு, அதில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை நிரப்பவும். இதில் Account Number, CIF Number, Branch Code, Country மற்றும் வங்கியில் நீங்கள் பதிவு செய்த Mobile Number போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதை தவறில்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும்.
  • அடுத்தது, Facility Required என்ற இடத்தில் Full Transaction Rights என்பதை தேர்வு செய்து பின்பு அதில் கொடுத்திருக்கும் captcha வை டைப் செய்யவேண்டும், அடுத்து Submit கொடுக்க வேண்டும்.
  • இப்போது வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP வரும். அந்த நம்பரை இங்கே பதிவு செய்து Confirm பட்டனை கிளிக் செய்யவும். இப்போது ஒரு திரை தோன்றும். அதில் I have ATM Card என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு உங்களின் ATM Card குறித்த தகவல்கள், அதாவது Card holder name, Validty மற்றும் Pin Number போன்ற விபரங்களை அதில் நிரப்ப வேண்டும். பின்னர் captcha -வை டைப் செய்து proceed பட்டனை கிளிக் செய்யவும்.
  • அதற்கு பின்பு debit card validation successful என்று வரும். அதற்கு கீழ் Click Here என்ற லிங்க் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்பு Username மற்றும் Password போன்றவற்றை கொடுக்க வேண்டிய பக்கம் வரும். அதில் உங்களுக்கு பிடித்தமான User Name கொடுக்கலாம். அடுத்து i accept the Terms and Conditions என்பதை டிக் செய்ய வேண்டும். பின்னர் Login password செட் பண்ணனும். அடுத்து Submit கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் எஸ்பிஐ வங்கியின் நெட் பேக்கிங்கை ஓபன் செய்து விட்டீர்கள்.

இப்போது login மற்றும் password கொடுத்து உங்கள் நெட் பேங்கிங் வசதியை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore