முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர இந்த ஹேர் ஆயில் ட்ரை பண்ணுங்க

Updated On

ஆரோக்கியமான மற்றும் நீளமான கூந்தலைப் பெற இந்த ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்க!!.. | Hair oil for hair growth in tamil

 

அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான முடியை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. ஆண்கள் முதல் பெண்கள் அனைவரும் அடர்த்தியான மற்றும் கருமையான முடியை விரும்புகின்றனர். அனால் தற்போது உள்ள காலநிலை மற்றும் உணவு பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால், நம்மில் பெரும்பாலோருக்கும் முடி உதிர்தல், மெலிதல், பொடுகு, உடைத்தல், நரைத்தல் போன்ற பொதுவான முடி பிரச்சினைகளால் அவதிப்படுகிறோம். இதற்கு பல கெமிக்கல் நிறைந்த ஹேர் ஆயிலை கடைகளில் வாங்கி உபயோகிக்றோம். அதற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையான முறையில் மூலிகை எண்ணெய் தயார் செய்யலாம். இது மிகவும் எளிமையான முறையில் செய்யலாம்.

முடி வளர்ச்சிக்கு ஹெர்பல் ஹேர் ஆயில் | best homemade hair oil for hair growth and thickness

ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை (how to make herbal hair oil for hair growth at home in tamil)

தேவையான பொருட்கள்

செம்பருத்தி பூக்கள் – 20
வேப்ப இலை – 30
கறிவேப்பிலை – 30
வெங்காயம் – 5 (சிறியது)
வெந்தய விதைகள் – 1 டீஸ்பூன்
கற்றாழை – 1 இலை
மல்லிகை பூ – 15-20
தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

செய்முறை

 • வெந்தய விதைகளை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
 • கற்றாழையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
 • ஒரு மிக்சியில், வெந்தயம், கற்றாழை, வேப்ப இலை, கறிவேப்பிலை, மற்றும் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
 • பின்னர், அரைத்த விழுதை ஒரு பெரிய கடாயிக்கு மாற்றவும்.
 • அதில் ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
 • கடாயை குறைந்த தீயில் சுமார் 45 நிமிடங்கள் வரை பச்சை நிறமாக மாறும் வரை சூடாக்கவும்.
 • பின்பு, எண்ணெய்யை நன்றாக ஆற விடவும்.
 • நன்றாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் எண்ணெயை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
 • வீட்டில் தயாரித்த மூலிகை எண்ணெய் தயார்!

மூலிகை எண்ணெய் பயன்படுத்துவதன் நன்மைகள்

 1. செம்பருத்தி, கறிவேப்பிலை, வெங்காயம் முடி தடிமனாகவும், நீளமாகவும் வளர பெரிதும் உதவுகிறது.
 2. வேப்ப இலைகள் பொடுகு மற்றும் பேன் வராமல் தடுக்கிறது.
 3. கற்றாழை பளபளப்பைத் தருவதுடன் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
 4. வெந்தயம் தலை மற்றும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
 5. மல்லிகைப் பூக்கள் எண்ணெய்க்கு நறுமணத்தைக் கொடுக்கும்.


திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore