கமலா ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் | Kamala Orange Benefits in Tamil

Updated On

கமலா ஆரஞ்சு நன்மைகள் | Kamala Orange Benefits in Tamil

கமலா ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மற்ற ஆரஞ்சு பழத்தை போல் இதன் தோல் தடிமனாக இருக்காது, இது தோல் உரிப்பதற்க்கு மிகவும் எளிதாக இருக்கும் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். கமலா ஆரஞ்சு பழம் மிகவும் சுவையான மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும்.

தற்போது மழை காலம் தொடங்கிவிட்டது, இந்த நேரத்தில் நமது உடலின் வெப்ப அளவு குறையும் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதுபோன்ற நேரத்தில் நாம் ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் காய்கறிகளை சாப்பிட வேண்டும். கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மழை காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா என்ற பயத்தில் பலர் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர், ஆனால் கமலா ஆரஞ்சை சாப்பிட்டால் சளி பிடிக்காது.

ஆரஞ்சு (kamala orange origin) ஸ்பெயின், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, பிரேசில், இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆரஞ்சு பயிரிடப்படுகிறது.

கமலா ஆரஞ்சு in english – Orange

ஆரஞ்சு பழத்தை அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.

kamala orange image

கமலா ஆரஞ்சு பெயர் காரணம்

கமலா ஆரஞ்சு மேற்கு வங்கத்தில் அதிகம் விளைகிறது. ஆரஞ்சு பழத்தை ஒவ்வொரு மாநில மக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். அது போல மேற்கு வங்கத்தில் ஆரஞ்சு பழத்தை கமலா என்று அழைக்கின்றனர். இதனால் அங்கே விளையும் பழத்திற்கு கமலா ஆரஞ்சு என்ற பெயர் வைத்து அழைக்கின்றனர். தற்போழுது கமலா ஆரஞ்சு பழம் அனைத்து இடங்களிலும் பயிரடப்படுகிறது. தமிழ்நாட்டில் (Kamala orange season in Tamil Nadu) ஜூலை முதல் செப்டம்பர் வரை கமலா ஆரஞ்சு அதிகம் கிடைக்கிறது.

ஆரஞ்சு பழத்தின் வட்டாரப் பெயர்கள் வங்காள மொழியில் கமலா, முசாம்பி, நெம்பு; ஒரியாவில்  நாரங்கா; தமிழில் நரங்கி, தோடம்பழம்; கன்னடத்தில் கிட்டாலு; மலையாளத்தில் நாகரங்கா; மராத்தியில் சாத்துக்குடி; பஞ்சாபி மொழியில் மால்டா; குஜராத்தியில் நரிங்கி, சாந்த்ரா.

கமலா ஆரஞ்சு பழம் சத்துக்கள்

 • வைட்டமின் சி
 • வைட்டமின் பி1, 2, 3, 5, 6, 9
 • இரும்பு
 • கால்சியம்
 • நார்ச்சத்து
 • மெக்னீசியம்
 • பொட்டாசியம்
 • கொழுப்பு
 • புரதம்
 • கார்போஹைட்ரேட்

100 கிராம் ஆரஞ்சு பழத்தில் கிட்டத்தட்ட 53 மி.கிராம் அளவு வைட்டமின் சி உள்ளது. ஒருவருக்கு வைட்டமின் சி குறைவு ஏற்பட்டால் முதலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், தோல் வறட்சி, பற்கள் மற்றும் ஈறுகள் பாதிப்பு, தசைகளின் வலிமை குறைவு போன்ற பிரச்சனைகள் உண்டாகும். தீவரமான வைட்டமின் சி குறைவு ஏற்பட்டால் ஸ்கர்வி என்ற நோய் உண்டாகும்.

ஆனால் வைட்டமின் சி அதிகம் நிறைந்த இந்த கமலா ஆரஞ்சை சாப்பிட்டால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறுகிறது, அதனால் உடலை தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடி நோய்கள் வராமல் தடுக்கிறது.

கமலா ஆரஞ்சு பயன்கள் | Benefits of Kamala Orange in Tamil

kamala orange images

 • ஆரஞ்சு பழத்தில் உள்ள முக்கிய கூறுகளில் ஒன்றான லிமோனீன் தோல், வாய், மார்பகம், நுரையீரல், பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆரஞ்சு பழங்களை உட்கொள்வது புற்றுநோயின் அபாயங்களைக் குறைக்கும்.
 • கமலா ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது வயிற்றுப் புண்களை ஏற்படுத்தும் பாக்ட்ரியாக்களை அழித்து, நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது அல்சர் வளர்ச்சியை குறைக்கிறது.
 • இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியமாகும், ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இருக்கம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மெதுவாக குறைகிறது.
 • கமலா ஆரஞ்சு பழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இப்போது அதிகமாக ஏற்படும்  பிரச்சனைகளான ஈறுகளில் வீக்கம், இரத்தம் வழிதல், சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஆகியவற்றிலிருந்து பற்களை பாதுகாக்கிறது.
 • ஆரஞ்சு பழம் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு தேவையான பல சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி. இ சத்துக்கள்,  இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலில் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதய ரத்த நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
 • கமலா ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கமலா ஆரஞ்சு நன்மைகள் | Kamala Orange Benefits in Tamil

 • இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோலின் மினுமினுப்பு அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்கும்.
 • நம் உடலில் எலும்பு மிகவும் முக்கியமான ஓன்று, அதை பாதுகாக்க கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் தேவை. கமலா ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.
 • நமது உடலில் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க இந்த பழம் உதவுகின்றது. மேலும் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது வரும் இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.
 • சிலர் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் பழங்களை சாப்பிட்டு வரும்போது உடலின் கால்சியம் சத்தை அளவுடன் வைக்க உதவுகின்றது. சிறுநீரகக் கற்கள் சிறுநீரகத் தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.
 • எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று உடல் நலனை பாதுகாக்க  உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் இரண்டு ஆரஞ்சு பழச் சொலைகள்  சாப்பிடுவது அவசியமாகும்.
 • பாரம்பரியமாக ஆரஞ்சு, தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, இருமல், சளி, மூச்சுக்குழாய் அழற்சி, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆஞ்சினா போன்ற பல வகையான நோய்கள் வராமல் தடுக்கிறது.

ஆரஞ்சு பழம் தோல் நன்மைகள்

ஆரஞ்சு பழத்திற்கு கொழுப்பை குறைக்கும் சக்தி உள்ளது. இந்த தோலை அப்படியே சாப்பிடுவது கடினம், அதனால் டீ, சூப் அல்லது சாலட் செய்து சாப்பிடலாம்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore