கொய்யா பழம் நன்மைகள் மற்றும் தீமைகள் | Koiya Palam Benefits in Tamil

Updated On

கொய்யா பழம் நன்மைகள் | Guava Health Benefits in Tamil

மற்ற வகையான உணவுகளை சாப்பிட்டு உயிர் வாழும் உயிரங்களை விட, இயற்கை உணவுகளை அதிகம் உண்ணும் விலங்குகள், மனிதர்கள் அதிகம் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இயற்கை உணவுகளில் ஒன்று தான் பழங்கள். மனிதர்கள் உண்பதற்கேற்ற, சத்துக்கள் நிறைந்த பழவகைகள் ஏராளம் இருக்கின்றன. வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் “கொய்யா பழம்” பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும்.

கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் | Benefits of Guava Fruit in Tamil

கொய்யாப்பழத்தில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் ஏராளமாக  நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொய்யா பழத்தை தினமும் 2 சாப்பிட்டு வந்தால், நிறைய மருத்துவ நன்மைகளை பெறலாம்.

வெறும் வயிற்றில் கொய்யா பழம் சாப்பிடலாமா, கொய்யா பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா, கொய்யா பழம் எப்போது சாப்பிட வேண்டும் என்ற பல கேள்விக்கும் இந்த பதிவில் பதில் உண்டு.

கொய்யா வகைகள் | Types of Guava

கொய்யா மரங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன. அதன் உயரத்தில் சில மாறுபாடுகள் உண்டு. கொய்யா பழத்தின் ரகங்கள் பல உண்டு. பொதுவாக கொய்யா பழத்தின் உட்புற சதையின் நிறத்தை பொறுத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

  • சிவப்பு கொய்யா
  • வெள்ளை கொய்யா

Guava Fruit Benefits in Tamil | கொய்யா பழம் பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மிகவும் முக்கியமான ஒன்று. கொய்யா பழம் தான் அதற்க்கு சரியான பழம். கொய்யா பழத்தில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது.

மேலும் இது உடலில் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்க்கிருமிகள் வராமல் தடுக்கிறது. உண்மையில், கொய்யாவில் ஆரஞ்சுப் பழத்தை விட இரண்டு மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது, என்பது பலரும் அறியாத ஒன்று.

செரிமானத்தை மேம்படுத்தும்

கொய்யாவில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று நார்ச்சத்து. நார்ச்சத்து மலத்தை மென்மையாக்கி சிறந்த மலமிளக்கியாக பயன்படுகிறது.

இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. எனவே அனைத்து வயதிறனாரும் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

புற்று நோய்

வைட்டமின் சி தவிர, கொய்யாவில் லைகோபீன் நிறைந்துள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது உங்கள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை குறைக்க உதவுகிறது. கொய்யா சாறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று கண்டறியப்பட்டது.

நீரிழிவு

கொய்யா பழத்தில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் உள்ளது. இது நீரிழிவு நோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது . கொய்யா திடீரென சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும் அதே சமயம், சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்கிறது.

மலச்சிக்கல்

மற்ற பழங்களுடன் ஒப்பிடும் போது கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இது ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. இது உங்கள் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கிறது. வெறும் வயிற்றில் கொய்யா பழம் சாப்பிட கூடாது.

கர்ப்பிணி பெண்கள்

கொய்யாப் பழத்தில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி-9 உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களுக்குப் ஊட்டமளிக்கிறது, கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து கொய்யா பழத்தை உணவில் சேர்க்க வேண்டும்.

ஏனெனில் இது குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது மற்றும் குழந்தைக்கு ஏற்படும் நரம்பியல் பிரச்சனையிலிருந்து பாதுகாக்கிறது.

Koyya Palam Benefits in Tamil

மன அழுத்தம்

கொய்யாவில் உள்ள மெக்னீசியம் உடலின் தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்த உதவுகிறது. மன அழுத்தத்தை எதிர்த்து போராட கொய்யா பழம் உதவுகிறது.

கடினமான உடற்பயிற்சி அல்லது அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் தசை பிடிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க நம் உணவில் கொய்யா பழத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடல் எடை 

கொய்யா உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஆப்பிள், திராட்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை ஒப்பிடும் போது, ​​கொய்யாவில் சர்க்கரை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கொய்யா பழத்தை உங்கள் உணவில் சேர்க்கலாம்.

சளி மற்றும் இருமல்

கொய்யா பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சிலர் நினைக்கின்றனர் , ஆனால் அது முற்றிலும் தவறு. மற்ற பழங்களுடன் ஒப்பிடும் போது கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து மிக அதிகமாக உள்ளது.

இது உங்களுக்கு சளி அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. கொய்யாப்பழத்தின் சாறு இருமல் மற்றும் சளியைக் குணப்படுத்துகிறது.

கொய்யா பழம் எப்போது சாப்பிட வேண்டும் என்று கேட்டால், காலை மற்றும் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் சாப்பிடுவது நல்லது. கொய்யா பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவில் சாப்பிட கூடாத பழங்களில் ஒன்று கொய்யா பழம்.

கொய்யா பழம் தீமைகள்

  • இரவில் கொய்யா பழத்தை சாப்பிட கூடாது.  இது உங்களுக்கு அஜீரண கோளாறை ஏற்படுத்தும்.
  • கொய்யா பலத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது.
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிடும் போது, உங்கள் சர்க்கரை அளவை அடிக்கடி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • கொய்யா பழம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும், அவர்கள் மருத்துவரை ஆலோசித்த பின்பு சாப்பிட வேண்டும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore