அன்றாடம் உங்கள் உணவில் இந்த இலையை பயன்படுத்துறீங்களா?

Updated On

கொத்தமல்லி இலை மற்றும் அதனுடைய விதையில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் உள்ளன. கொத்தமல்லி அந்த அளவிற்கு விலை உயர்ந்ததும் கிடையாது…! ஆனால் நமது முன்னோர்கள் கொத்தமல்லியை வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தவில்லை.. ஆனால் பலருக்கு கொத்தமல்லியின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி முழுமையாக தெரியாது. கொத்தமல்லியை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டால், வாசனைக்கான என்று தான் சொல்வார்கள்…

கொத்தமல்லியை பொறுத்த வரையில் வீட்டு தோட்டத்திலும், சிறு தொட்டிகள் மூலமாகவும் வளர்க்கலாம். நாம் சமையலில் பெரும்பாலும் ரசம் மற்றும் சாம்பார் வகை உணவுகளில் மனத்திற்க்காக கொத்தமல்லி தழைகளை பயன்படுத்துவோம். கொத்தமல்லியை சரியான அளவோடு உணவில் சேர்த்து வருவது நல்லது. கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் நரம்பு மண்டலம் மற்றும் எலும்பு மண்டல பாதிப்புகளும், தசை மண்டல பாதிப்புகளும் சரியாகும்.

 

 

மேலும், அதிகளவு பசியை தூண்டவும் செய்யும், இதனை பசியின்மை பிரச்னையால் அவதியுறும் நபர்கள் அதிகளவு சாப்பிடலாம். வாயு பிரச்சனையை எளிதில் குணமடைய செய்யும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுக்களின் அளவு குறைக்கப்படும். உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளின் அளவு அதிகரிக்கப்படும். கல்லீரலின் செயல்பாடானது சரி செயப்படுகிறது.

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்,பற்கள் உறுதி அடையும்.

கண்களில் ஏற்படும் பார்வை கோளாறுகள், வெண்படல அழற்சி சரி செய்யப்படுகிறது. கிருமி நாசினியாக செயல்படும் கொத்தமல்லியால் சருமத்தில் படை மற்றும் தோலரிப்பு போன்றவை சரி செய்யப்படும். முகங்களில் ஏற்படும் முகப்பரு மற்றும் தோலில் ஏற்படும் தழும்பு, குருதிக்கழிச்சல், செரிக்காமல் ஏற்படும் கழிச்சல், அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனை சரியாகும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore