குழந்தைக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம் | Baby Fever Home Remedies in Tamil

Updated On

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம் | Baby Fever Treatment in Tamil

baby fever home remedy

காய்ச்சல் என்றால் என்ன?

காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல, அது ஒரு நோயின் அறிகுறியாக கருதப்படுகிறது. காய்ச்சல் என்பது பொதுவாக உடல் ஒரு நோயை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறது.

காய்ச்சல் வகைகள் | Fever Types in Tamil

உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வர காரணம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் சளி அல்லது பிற வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று அர்த்தம்.

குழந்தைக்கு காய்ச்சல் வர பிற காரணங்கள், தடுப்பூசி செலுத்தியதனால், குழந்தைகளை வெய்யிலில் அதிக நேரம் வைத்திருப்பதால் அல்லது மிகவும் இறுக்கமான, சூடான ஆடையை அணிவதால் கூட காய்ச்சல் வர கூடும்.

குழந்தைக்கு காய்ச்சல் அளவு | Baby Fever Temperature

ஒரு குழந்தையின் சாதாரண வெப்பநிலை சுமார் 97 முதல் 100.3 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். வெப்பநிலை 100.4 F அல்லது அதற்கும் அதிகமாக இருப்பதைக் காய்ச்சலாகக் கருதப்படுகிறது.

காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம் | Child Fever Treatment in Tamil

உங்கள் குழந்தை எப்போதும் போல சாதாரணமாக இருந்தால் காய்ச்சலை பற்றி கவலை பட தேவையில்லை. ஆனால் குழந்தையின் செயலில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

குழந்தை சாதாரணமாக இருந்து காய்ச்சல் அதிகமாக இருந்தால் வீட்டிலேயே நமது பாட்டி வைத்தியத்தின் மூலம் சரி செய்துவிடலாம். காய்ச்சல் குணமாக பாட்டி வைத்திய குறிப்புகளை கீழே பார்க்கலாம்.

  • குழந்தை தூங்கும் போது, ​​ஈரமான துணியை குழந்தையின் நெற்றியில் வைக்கவும். இது அதிக காய்ச்சலை குறைக்க உதவும் பாட்டி வைத்தியமாகும். இப்படி செய்வதன் மூலம் குழந்தையின் உடல் சூடு குறைகிறது.
  • காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு அடர்த்தியான உடைகளை உபயோகிக்க கூடாது. மிகவும் லேசான காட்டன் துணிகளை பயன்படுத்த வேண்டும்.
  • வெங்காயம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்தும் சிறந்த பாட்டி வைத்தியமாகும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, குழந்தையின் காலின் பாதத்தில் தேய்த்தால் காய்ச்சல் குறையும்.
  • குழந்தையை வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வைக்க வேண்டும்.
  • காய்ச்சலின் போது நீரிழப்பு ஏற்படும். அதை தவிர்க்க அதிக திரவ உணவுகளை கொடுக்க வேண்டும்.
  • குழந்தையின் வயதை பொறுத்து தாய்ப்பால், இளநீர், ஜூஸ் அல்லது தண்ணீர் போதுமான அளவு கொடுக்க வேண்டும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore