முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய இதை ட்ரை பண்ணுங்க | Natural Face Beauty Tips in Tamil

Updated On

மூக்கில் உள்ள கரும்புள்ளி மறைய | Nose Black Mark Remove Tips in Tamil

பிளாக்ஹெட்ஸ் (Blackheads) என்பது முகப்பருவின் லேசான வடிவமாகும். இயற்கை முறையில் கரும்புள்ளிகளை வீட்டிலேயே அகற்றலாம். அதுவும் உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யலாம்.

முகத்தில் கரும்புள்ளி வர காரணம் என்ன?

அழுக்கு, வியர்வை மற்றும் எண்ணெய் காரணமாக நமது துளைகள் அடைக்கப்படுவதால் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. இது நமது தோலில் ஆக்ஸிஜனேற்றப்படும்போது, ​​​​அவை கரும்புள்ளிகள் போல தோற்றமளிக்கின்றன. கரும்புள்ளிகள் நமது துளைகளுக்கு இடையில் சிக்கியிருப்பதால், அவற்றை வெளியேற்றுவது மிகவும் கடினமாகிறது. தோலின் மேல் பகுதியில் உள்ள கரும்புள்ளிகளை எளிதாக நீக்கிவிடலாம், ஆனால் உள்பகுதியில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க கொஞ்ச நாட்களாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவுது ஒன்றை தொடர்ந்து செய்தால் கரும்புள்ளி முற்றிலுமாக மறைந்துவிடும்.

கரும்புள்ளிகளை நீக்கும் வீட்டு வைத்தியம் | Home Remedy to Remove Blackheads Beauty Tips Tamil

Beauty Skincare Tips Tamil | மூக்கில் இருந்து கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி?

கீழே உள்ள வீட்டு வைத்தியத்தில் எதாவுது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.

1. கஸ்தூரி மஞ்சள்

ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சளை எடுத்து ஒரு தேக்கரண்டி தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போல தயார் செய்யவும், அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் உளற விடவும், பின்னர் தண்ணீரில் கழுவவும்.

2. பால் மற்றும் ஜெலட்டின்

ஜெலட்டின் – 1 தேக்கரண்டி
பால் – 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி
இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து, பின்னர் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, சூடான தண்ணீரின் மேல் (double boiling method) இந்த கலவை கலந்த கிண்ணத்தை வைத்து நன்றாக கலக்கவும். பால் மற்றும் ஜெலட்டின் நன்றாக கலந்ததும். ஒரு ப்ரஷ் வைத்து கண், புருவம் மற்றும் உதடு தவிர்த்து முகத்தில் மற்ற இடங்களில் தடவவும். இதை 15- 20 நிமிடம் காய விடவும். 15 நிமிடம் ஆனதும் அது தோல் போல் உரிக்கும் பதத்திற்கு வரும். அப்போது கீழிருந்து மேலாக மெதுவாக உரித்து எடுக்கவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகத்தில் உள்ள முடியையும் நீக்கிவிடும். இதை வாரம் 2 முறை செய்யலாம்.

3. சர்க்கரை மற்றும் தேன்

பிரவுன் சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
இந்த மூன்று பொருளையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் தண்ணீரில் கழுவவும். இதை வாரம் 2-3 முறை செய்யலாம்.

4. சமையல் சோடா மற்றும் எலுமிச்சை மாஸ்க்

பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
இதை இரண்டையும் நன்றாக கலந்து மூக்கின் மேல் பகுதி அல்லது கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Blackheads Removal Tips Tamil | தோலில் கரும்புள்ளிகள்

5. முட்டை வெள்ளை மாஸ்க்

முட்டையின் வெள்ளைக்கரு – 1
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
இதை நன்றாக கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி லேசாக காய்ந்ததும், அதன் மேல் மறுபடியும் ஒரு முறை தடவவும், இதை 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் தண்ணீரில் கழுவவும்.

6. ஓட்ஸ் ஸ்க்ரப்

ஓட்ஸ் – 2 தேக்கரண்டி
தயிர் – 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
இதை அனைத்தையும் பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்கவும். பின்னர் கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் உளற விட்டு, பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

7.எலுமிச்சை தேன் மாஸ்க்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
தேன் – 1/2 தேக்கரண்டி
இதை இரண்டையும் நன்றாக கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடங்கள் காய விடவும். நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்யவேண்டும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore