முகப்பருவால் வரும் கரும்புள்ளி மற்றும் தழும்புகள் அழகை குறைக்கிறதா?

Updated On

முகப்பருவால் வரும் கரும்புள்ளி மற்றும் தழும்புகளை போக்க சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.

சந்தனம்

சந்தனத்தை ரோஸ் வாட்டரில்  கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில்  தடவி, ஒரு மணிநேரம் கழித்து பிறகு தண்ணீரில் முகத்தை கழுவவும். இதனால்  சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

சந்தன எண்ணெய்

சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீர் விடாமல் முகப்பரு உள்ள இடத்தில் தடவி நன்றாக காயந்ததும் ஐஸ் கட்டிகள் வைத்து மசாஜ் செய்து அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகப்பருக்கள் ஓடி விடும்.

தேன்

சுத்தமான தேனை சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து பருக்களின் மீது தடவி வந்தால் பருக்களில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி முகப்பருக்களை ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் ஆயிலில்  ஆண்டிஆக்சிடெண்ட் நிறைந்திருப்பதால், சருமத்தின் அழுக்கு, மாசு மற்றும் யுவி கதிர்கள் உள்ளிட்ட பிரிரேடிகள்களில் இருந்து காக்கிறது. மேலும் சூப்பர் மாய்ஸ்சரைசிங் அளிப்பதோடு முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகள் அழித்து பருக்களையும் இது குறைக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு புது பருக்கள் உருவக்கத்தை தடுக்க உதவும்.

வெந்தயம்

முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட வெந்தயம் சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்த பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.

அல்லது வெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.

பாசிப்பயறு மாவு

பாசிப்பயறு மாவில் பசும்பால் கலந்து நன்றாக குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி காயவைத்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கிவிடும்.

வெள்ளரிப்பிஞ்சு

வெள்ளரிப்பிஞ்சை மிக்ஸியில் அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூசி காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி னால் பருக்களின்றி முகம் பளிச்சென்றி மின்னும். வெள்ளரிக்காயுடன் தக்காளி அல்லது பப்பாளிப் பழம் சேர்த்தும் மசித்து போடலாம்.

குறிப்பு

பருக்களின் மீது தடவும் போது சுத்தமான பஞ்சை சுத்தமான தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் நனைத்து இலேசாக மசாஜ் செய்தபடி வைக்க வேண்டும். அழுத்தமில்லாமல் கட்டை விரலில் மிதமாக அழுத்தி வட்ட வடிவில் மசாஜ் செய்யும் போது பருக்களில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.

மேலும் முகத் தில் மசாஜ் செய்யும் போது கீழிருந்து மேல் நோக்கி தேய்த்து மசாஜ் செய்வது தான் சிறந்த பயிற்சியாக இருக்கும். அப்படி செய்யும் போது சருமங்கள் விரைவில் சுருக்கமில்லாமல் இருக்கும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore