10 பிரபலமான திருக்குறள் | Top 10 Popular Thirukkural

Updated On

Famous Thirukkural Quotes | பிரபலமான திருக்குறள் வரிகள்

உங்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் பிரபலமான திருக்குறள் வரிகள் இந்த பதிவில் காணலாம்.

திருக்குறள் 10 பொருளுடன் | Famous Thirukkural with Meaning

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.- குறள் 45

விளக்கம் (Thirukkural Meaning)

இல்லற வாழ்க்கையானது அன்பினையும் அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும் பயனுமாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் விளக்கத்துடன் | Best Thirukkural with Meaning in Tamil |

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. – குறள் 1

விளக்கம் (Thirukkural Meaning)

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

வாழ்க்கை தத்துவம் திருக்குறள் | Best Thirukkural for Life in Tamil

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. குறள் 396

விளக்கம் (Thirukkural Meaning)

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் பொருளுடன் | Famous Thirukkural in Tamil with Meaning

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை. குறள் 12

விளக்கம் (Thirukkural Meaning)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் 10 கல்வி | Easy Thirukkural

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. குறள் 400

விளக்கம் (Thirukkural Meaning)

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

மிகவும் பிரபலமான திருக்குறள் | The Most Famous Thirukkural

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். குறள் 664

விளக்கம் (Thirukkural Meaning)

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

Thirukkural Quotes in English and Tamil

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். குறள் 666

விளக்கம் (Thirukkural Meaning)

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

திருக்குறள் 10 Easy | 10 Thirukkural in Tamil

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. குறள் 596

விளக்கம் (Thirukkural Meaning)

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

எளிமையான திருக்குறள்  | Best Thirukkural in Tamil

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். குறள் 619

விளக்கம் (Thirukkural Meaning)

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்

சிறந்த திருக்குறள் | Thirukkural in Tamil

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். குறள் 421

விளக்கம் (Thirukkural Meaning)

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

விரிவான விளக்கத்திற்கு: இங்கே கிளிக் செய்யவும்திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore