கனவுகள் பலிக்குமா? பலிக்காதா?

Updated On

நாம் கண்ட கனவு காணும் நேரத்தைப் பொருத்து அவை பலிக்குமா? பலிக்காத என்று கூறலாம்.

…. பகலில் காணும் கனவு பலிக்காது.

…. இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்தில் பலிக்கும்

…. இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்தில் பலிக்கும்

…. இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்தில் பலிக்கும்

…. காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும்

நாம் காணும் கனவு தரும் பலன்களைப் பார்ப்போம்…..!

  •  மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
  • வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.
  • மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்
  • விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால் சேமிப்பு மேலும் பெருகும்.
  • திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
  • தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
  • இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
  • திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
  • நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
  • தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி நன்மை பிறக்கும்.
  • உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
  • வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
  • கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
  • ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
  • இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
  • சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
  • ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
  • மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
  • கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore