திருக்குறள் - 773     அதிகாரம்: 
| Adhikaram: pataichcherukku

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

குறள் 773 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paeraanmai enpa tharukan on rutrakkaal" Thirukkural 773 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒன்று உற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்: உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர். உலகியலறிவது- தான் உலகியலை வெளியார் சொல்லாமையறிதல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீ£த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர். ('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கான முயல் எய்த அம்பினில்-காட்டிலோடும் முயலின்மேல் தப்பாது எய்த அம்பை ஏந்துவதிலும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது-திறந்த வெளியில் நின்ற யானைமே லெறிந்து தப்பிய வேலைப் பிடித்திருத்தல் பெருமை தருவதாம். இது, பகைவருள் ஒரு காலாட்படை மறவனைக் கொல்வதினும், ஓர் அரசனை அல்லது படைத்தலைவனை வெல்ல முயலும் முயற்சி சிறந்ததென்று கருதும் மறவன் கூற்று. மரஞ்செடி கொடியடர்ந்த கானம் என்றதனால் திறந்தவெளி யென்பதும், 'பிழைத்த' என்றதனால் தப்பாது என்பதும், சிறு விலங்கிற்கேற்ப 'எய்த' என்றதனால் பெருவிலங்கிற்கேற்ப எறிதல் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறந்த ஆண்மை என்பது அடுத்தவர் துன்பம் துடைத்தல், அதிலும் பகைவருக்கு உதவுதல் மற்றுமோர் உயர்வு.

Thirukkural in English - English Couplet:


Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

ThiruKural Transliteration:


paeraaNmai enpa thaRukaN-on Rutrakkaal
ooraaNmai matradhan eqku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore