திருக்குறள் - 1189     அதிகாரம்: 
| Adhikaram: pasapparuparuvaral

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

குறள் 1189 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pasakkaman pattaangen maeni nayappiththaar" Thirukkural 1189 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின்-இப்பிரிவிற்கு யான் உடம்படும்வகை பசப்பியவர் இன்று உன் கருத்துப்படி குற்றமற்றவராயின்; என்மேனி பட்ட ஆங்கு பசக்க-என் மேனி இன்று பசந்தபடியே பசக்க. இப்பிரிவின் கொடுமையை இதற்குமுன் பட்டறியாத என்னை இதற்குடன்படுத்திப் பிரிந்தவர், எவ்வகையிலுங் குற்றமற்றவரென்று நாட்டுவதுதானே உன் விருப்பம்! அங்ஙனமாயின், என் மேனியையும் பசலையையுங் கவனிப்பானேன்? அவை எங்ஙனமிருந்தால் தானென்ன என்பது பட நின்றமையின் 'மன்' ஒழியிசை பற்றி வந்தது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உடலில் பசலை படர்ந்து எப்பாடு பட்டால் என்ன நயமாக பேசி பிரிந்தவர் நல்ல நிலை உடையவர் என்றால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார்’ என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக!

Thirukkural in English - English Couplet:


Well! let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

ThiruKural Transliteration:


pasakkaman pattaangen maeni nayappiththaar
nannilaiyar aavar enin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore