புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை முறையாக இப்படித்தான் கடைபிடிக்க வேண்டும்

Updated On

புரட்டாசி மாதம் என்றாலே ஆன்மீகம் சிந்தனைகள் நிறைந்ததாக இருக்கும். நாளை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆகும், இம்மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.
சனிபகவானால் ஏற்படும் தீய வினைகளை போக்க காக்கும் கடவுளான திருமாலை வணங்குகிறோம்.
சனிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். சனி, புதன் திசை நடப்பவர்கள், எள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும், நல்ல பலன்களும் வந்து சேரும். இந்த கோரனாவின் தாக்கத்தால் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் பெருமாள் படத்தை வைத்து துளசி மாலை வைத்து, தீபம் ஏற்றி பூஜை செய்து விரதம் இருக்கலாம்.

இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர்.

சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமோ நாராயணாய என்ற திரு மந்திரத்தை ஓதி வழிபட வேண்டும்.  அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும். பெருமாளை வழிபடுபவர்கள் புரட்டாசி மாதம் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் வீட்டில் தளிகை போடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இந்த புரட்டாசி மாதத்தில் தட்பவெப்பநிலை தீடீர் மாறுதல்களால் மக்களுக்கு கடும் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் துளசியை தண்ணீரில் கலந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கி வந்தனர். துளசியானது நோய்கிருமிகளை கட்டுபடுத்தும் வல்லமை கொண்டது. எனவே இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து, நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் விரதத்தை  கடைப்பிடித்தனர்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore