உலகம் முழுவதும் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பல இடங்களில் திடீரென மாற்றமடைந்த பருவநிலையின் காரணமாக கடுமையான வெயில்., சில இடங்களில் வெள்ளம்., சில இடங்களில் பனிப்பொழிவு என்று மக்கள் கடுமையான பாதிப்பை அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு விதமான பாதிப்புகளை அடைந்து. அதில் இருந்து மீள்வதற்கு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் நீர் ஆவியாகி செல்வதால் வரும் காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் மெல்போர்ன் பகுதியில் உள்ள வெஸ்ட்கேட் பூங்காவில் இருக்கும் ஏரியின் நீரானது இளஞ்சிவப்பு நிறமாக காணப்படுகிறது. இந்த செய்தியானது அங்குள்ள மக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தெரியவரவே உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆய்வாளர்கள் விரைந்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் ஏரியின் நீர் சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு அதில் இருக்கும் உப்பு நீரில் இருக்கும் பாசியின் விளைவு காரணமாக மாறியுள்ளதாகவும் அதிகளவு அடிக்கும் வெயிலின் தாக்கத்தால் நீர்பாசியின் நிறமானது மாறியுள்ளது என்று தெரிவித்தனர். இதனை கண்ட மக்கள் அந்த ஏரிக்கு வருகை தந்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.