அண்ணாமலை கிரிவல மந்திரங்கள்

Updated On

Annamalai Girivala Manthirangal | அண்ணாமலை கிரிவல மந்திரங்கள்

பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது.அதை விடவும் மிகவும் உயர்வானது,தேய்பிறை சிவராத்திரியில் செல்லும் கிரிவலம். இந்த நாட்கள் என்றில்லை எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்.காலையில்,மதிய நேரத்தில், மாலையில், இரவில், நள்ளிரவில்,பின்னிரவில், அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்.

ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;

முதல் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
( நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்; இவர் தான் பூமி முழுவதும் தமிழ் மொழியைப்பரப்பினார்; எனவே,குருவின் அருள் நமக்குத் தேவை;

3,00,00,000 தடவை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும்)

இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா

(இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்;ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும்,தலைமை கட்டு மந்திரம் இது;இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்;இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்)

மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்
(மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு;கலியுகத்தில் தவறான மனிதர்களே மிக அதிகம்;அவர்கள் மந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்;இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்;அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்)

நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;

நமச்சிவாய

( நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்)

ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாச்சல சிவ
(அண்ணாமலையாரின் சிவமந்திரங்களில் இதுவும் ஒன்று;இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்)

ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ஆம் ஹெளம் செள
(அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்;செய்து வருகின்றோம்;இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்)

ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவையை நம
(அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது)

எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் ரீங் சிவசிவ
(சைவ காயத்ரி மந்திரம் இது;இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்)

ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவாய நம
(நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது)

பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
(ஹரே ராம,ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்; இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்)

பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவசிவ
(இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்;அவ்வ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;)

பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவாய சிவாய
(நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது)

பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;

சிவாய நம ஓம்
(சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது;அதுவும் ஈசன் மனித உருவில் இருக்கும் இடத்தில் இதை ஜபித்தால். . .)

பதினாலாம் முறை கிரிவலம் செல்லும் போது:

சிவயசிவ
(இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி;ஒரு பாரா போதாது)

பதினைந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:

அருணாச்சலாய சிவ நமஹ

16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;

மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாயதிருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore