ஒவ்வொரு மகனுக்கும் அவருடைய அப்பாதான் ஹீரோ. அவரைப் பார்த்துதான் பல விஷயங்களை மகன்கள் பின்பற்றுவார்கள். அப்படி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியான தந்தை தன் மகனுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுப்பது சமூகத்தில் சிறந்த மனிதனாக உயர்த்தும். அப்படி தந்தை தன் மகனுக்குக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று பார்க்கலாம்.
நேர்மையாக இருக்க வேண்டும் : கைக் குலுக்கிப் பேசுவதில் தொடங்கி டைனிங் டேபில் வரை ஜெண்டில் மேன் என்கிற விஷயம் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். மகன் எதிர்காலத்தில் சந்திக்கும் மனிதர்கள், அந்த சமூகத்தினரிடம் உரையாடும்போது அது உதவும்.
பெரியவர்களை மதிக்க வேண்டும் : அப்பா அம்மா, தாத்தா பாட்டி இப்படி வயதில் மூத்தோரை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட அவர்களின் வயதிற்கும், அந்த தகுதிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்றுக் கற்றுக்கொடுங்கள்.
பெண்களை மதிக்க வேண்டும் : பாலினத்தால் அனைவரும் சமம் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும் என பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
உண்மை வழி : எது உண்மை, பொய் என்பதை பகுத்தறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க வேண்டும். எப்போதும் உண்மை வழி, நேர்மை வழி நின்று தீர்வு காண வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் : குடும்பம் மட்டுமல்லாது சமூகம் சார்ந்தும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். யாராவது வருவார்கள்..செய்வார்கள் என்பதை விட உன்னால் முடியுமென்றால் நீ செய்துவிட்டுப் போ என கற்றுக்கொடுங்கள்.
கடின உழைப்பு : வேலை உழைப்புதான் அடுத்த கட்ட நகர்வுகளுக்கும் மாற்றங்களுக்கும் முக்கியம். எனவே அதில் எந்த நாளும் அலட்சியம் காட்டக் கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். செய்யும் வேலையில் கடினம் , நேர்மை அவசியம் என்பதையும் சொல்லிக் கொடுக்க மறவாதீர்கள்.
மற்றவர்களை நேசி : அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனிதாபிமானம் அவசியம் என்பதைக் கற்றுக்கொடுங்கள்.