Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

புத்தாண்டு ராசி பலன் சிம்மம் - New Year Rasi Palan for simmam in Tamil
சிம்ம ராசி பலன் 2023 (simmam Rasi Palan 2023 in tamil), நவகிரங்களில் ராஜா என வர்ணிக்கப்படும் சூரியனின் ராசியில் பிறந்த சிம்ம ராசி நேயர்களே, இயற்கையிலே பிறரை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க கூடிய உங்களுக்கு வருகின்ற 2023-ஆம் ஆண்டில் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை அடையக்கூடிய ஆண்டாக இருக்கும் உங்கள் ராசிக்கு இவ்வாண்டில் சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் 22-04-2023 வரை அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலையும் சிறிதளவு நெருக்கடிகள் இருந்தாலும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார தேக்கங்கள் எல்லாம் விலகி தாராள தன வரவு ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடும். திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கக்கூடிய யோகமும் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் வருகின்ற நாட்களில் உங்களுக்கு உண்டு. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நல்ல முன்னேற்றங்களையும் நீங்கள் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் பார்க்கக் கூடிய நிலையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவதற்கான யோகங்கள் உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் இவ்வாண்டு முடிவுக்கு வந்து உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் யோகம் உண்டாகும். உங்களின் நீண்ட நாளைய திட்டங்களை ஏப்ரலுக்கு பிறகு செயல்படுத்தினால் அதில் முழுமையான வெற்றியினை அடைய முடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இவ்வாண்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 17-01-2023 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு முடிந்தவரை பேச்சில் பொறுமையோடு இருந்தால் வரும் ஆண்டில் நீங்கள் எல்லா வகையிலும் வளமான பலன்களை அடைய முடியும்.
Click the links to get புத்தாண்டு ராசி பலன் for mesam rishbam mithunam kadagam simmam kanni thulam viruchigam thanus makaram kumbam meenam rasi palan