Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

புத்தாண்டு ராசி பலன் விருச்சிகம் - New Year Rasi Palan for viruchigam in Tamil
விருட்சிக ராசி பலன் 2023 (Virutchigam Rasi Palan 2023 in tamil), செவ்வாயின் ராசியின் பிறந்த நீங்கள் பார்ப்பதற்கு வெகுலியாக இருந்தாலும் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 30-10-2023 முடிய 6-ல் சஞ்சரிரிப்பதும், அதன் பிறகு கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு 22-04-2023 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் நினைத்ததை ஆண்டின் தொடக்கத்தில் முயற்சித்தால் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடக் கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்கள் எண்ணங்கள் நிறைவேற கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வரும் 22-04-2023 முதல் குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குரு 6-ல் சஞ்சரிக்கும் பொழுது தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசிக்கு 2, 10, 12 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் எதிர்கொண்டு அணுகூலங்களை அடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனத்தோடு செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உங்கள் மீது வீண் பழிச் சொற்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது வெளி நபர்களிடம் வீண் பேச்சை குறைப்பது நல்லது. ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கக்கூடிய கிரகமான சனி வரும் 2023-ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ல் 17-01-2023 முதல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்க உள்ளது. இதன் காரணமாக அலைச்சல், டென்ஷன், வசதி வாய்ப்பு இருந்தாலும் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அதிக வேலைப்பளு காரணமாக உங்களின் ஓய்வு நேரம் குறைய கூடிய ஒரு சூழல் உண்டாகும். அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் உண்டாகும்.
Click the links to get புத்தாண்டு ராசி பலன் for mesam rishbam mithunam kadagam simmam kanni thulam viruchigam thanus makaram kumbam meenam rasi palan