Today Rasi Palan in Tamil – இன்றைய ராசி பலன் நாள் - 10.04.2024

On 2024-04-10 5:30:20

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

இன்றைய ராசி பலன் மேஷம் - Today Rasi Palan for mesam in Tamil

நாள் - 10.04.2024

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.

inraiya rasipalan rishbam

இன்றைய ராசி பலன் ரிஷபம் - Today Rasi Palan for rishbam in Tamil

நாள் - 10.04.2024

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறைய சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது.

inraiya rasipalan mithunam

இன்றைய ராசி பலன் மிதுனம் - Today Rasi Palan for mithunam in Tamil

நாள் - 10.04.2024

இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் விலகும். திடீர் பயணம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

inraiya rasipalan kadagam

இன்றைய ராசி பலன் கடகம் - Today Rasi Palan for kadagam in Tamil

நாள் - 10.04.2024

உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

inraiya rasipalan simmam

இன்றைய ராசி பலன் சிம்மம் - Today Rasi Palan for simmam in Tamil

நாள் - 10.04.2024

இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

inraiya rasipalan kanni

இன்றைய ராசி பலன் கன்னி - Today Rasi Palan for kanni in Tamil

நாள் - 10.04.2024

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

inraiya rasipalan thulam

இன்றைய ராசி பலன் துலாம் - Today Rasi Palan for thulam in Tamil

நாள் - 10.04.2024

இன்று உங்கள் உடல் ஆரோக்கிய பாதிக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

inraiya rasipalan viruchigam

இன்றைய ராசி பலன் விருச்சிகம் - Today Rasi Palan for viruchigam in Tamil

நாள் - 10.04.2024

இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் மதிப்பு கூடும். குடும்பத்தில் தாராள பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

inraiya rasipalan thanus

இன்றைய ராசி பலன் தனுசு - Today Rasi Palan for thanus in Tamil

நாள் - 10.04.2024

இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

inraiya rasipalan makaram

இன்றைய ராசி பலன் மகரம் - Today Rasi Palan for makaram in Tamil

நாள் - 10.04.2024

இன்று உங்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளை பெறுவீர்கள். கடன்கள் ஓரளவு குறையும்.

inraiya rasipalan kumbam

இன்றைய ராசி பலன் கும்பம் - Today Rasi Palan for kumbam in Tamil

நாள் - 10.04.2024

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும்.

inraiya rasipalan meenam

இன்றைய ராசி பலன் மீனம் - Today Rasi Palan for meenam in Tamil

நாள் - 10.04.2024

இன்று உங்களுக்கு எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மன அமைதி பெற தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

Click the links to get இன்றைய ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore