Weekly Rasi Palan in Tamil – இந்த வார ராசி பலன்

On 2023-11-27 10:43:48

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

இந்த வார ராசி பலன் மேஷம் - Weekly Rasi Palan for mesam in Tamil

மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) வெற்றி படிக்கட்டுக்கு மிக அருகாமையில் நிற்கிறீர்கள். உங்களுடைய செயல் திறனால் பொருளாதார முன்னேற்றத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல போகிறீர்கள். வியாபாரத்திற்கு இருந்த இடையூறுகளை விலக்கி வைக்கும். மனை இடம் நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். சிக்கலான காரியங்களுக்கு தீர்வு காணும் முடிவை சற்று தள்ளிப் போடுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு பிரச்சனை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இழந்த நிலை காணப்படும். மன மொத்த தம்பதிகளுக்கு இடையே மனக்குழப்பம் உண்டாகும். தொழிலுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூர் பயணங்களால் சில நன்மைகள் உண்டாகும். நிதானமாக செயல்படுங்கள். உறவினர்களால் உங்களுக்கு சில உபத்திரவங்கள் வந்து சேரும்.

 

inraiya rasipalan rishbam

இந்த வார ராசி பலன் ரிஷபம் - Weekly Rasi Palan for rishbam in Tamil

ரிஷப ராசிக்காரர்களே,இந்த வாரம் (vara rasi palan) எதிர்பார்த்த இடத்திலிருந்து தடையில்லாமல் பணம் வரும். தொழிலில் சாதனை படைப்பீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் மேன்மையை கொண்டு வரும். திட்டம் போட்டு காரியம் செய்தால் வெற்றி நிச்சயம். பங்குச்சந்தை வியாபாரத்தில் படுஜோராக இறங்குவீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை விவசாயத்தில் முதலீடு செய்வீர்கள். பிரிந்து போன உறவுகள் ஒட்டி வரும். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும். அரசு பணியாளர்களுக்கு வேலை மாற்றம் உண்டாகும். தனியார் ஊழியர்கள் முதலாளிகளின் பாராட்டை பெறுவது கடினம். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்‌. போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் துணிச்சலாக முதலீடு செய்வீர்கள். கூட்டுத்தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

 

inraiya rasipalan mithunam

இந்த வார ராசி பலன் மிதுனம் - Weekly Rasi Palan for mithunam in Tamil

மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) வெளிநாட்டு பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான உதவிகளை திரட்டுவீர்கள். வியாபாரத்திற்கு எதிராக இருந்த போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் சிக்கல்களை கடந்து வெற்றி நடை போடுவீர்கள். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். படிப்புக்காக அதிகம் செலவு செய்வீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வேலை இழக்கும் நிலை உருவாகும். அரசு ஊழியர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். பேசி வைத்த திருமணங்கள் தள்ளிப் போகலாம். கலைத்துறையினர் சில சிரமங்களை எதிர் நோக்குவார்கள். வாகனங்களில் செல்லும்போது இரு மடங்கு எச்சரிக்கை தேவை. விபத்துகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் சந்திப்பால் தொழிலுக்கு தேவையான உதவிகளை பெறுவீர்கள். கோயில் காரியங்களுக்கு நிதி உதவி செய்வீர்கள். கோயில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். .

 

inraiya rasipalan kadagam

இந்த வார ராசி பலன் கடகம் - Weekly Rasi Palan for kadagam in Tamil

கடக ராசிக்காரர்களே இந்த வாரம்(vara rasi palan) உங்களுடைய பொதுநல போக்கால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். மேலும் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகளை தருவார். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் வார இறுதியில் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். பிள்ளைகள் அக்கறையாக படிப்பார்கள். வழக்கறிஞர்கள் வாதத் திறமையால் புகழ் பெறுவார்கள். ஐடி ஊழியர்கள் கணிசமான வருமானம் பார்ப்பார்கள். வெளிநாட்டு பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வியாபாரம் சம்பந்தப்பட்ட நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தை செல்வம் இல்லாத குடும்பத்தில் அந்த பாக்கியம் சித்திக்கும். பெண்களால் ஆதாயம் கிடைக்கும். சனி எட்டாம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீர்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். நண்பர்கள் உதவியால் புதிய தொழில் தொடங்குவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வீட்டை பழுது பார்த்து வர்ணம் பூசுவீர்கள்.

 

inraiya rasipalan simmam

இந்த வார ராசி பலன் சிம்மம் - Weekly Rasi Palan for simmam in Tamil

சிம்ம ராசிக்காரர்களே இந்த வாரம்(vara rasi palan) சூழ்ச்சிகளால் உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் சோர்ந்து போவார்கள். எத்தனை இடையூறுகள் வந்தாலும் தொழிலில் நீங்கள் காட்டும் அக்கறைக்கு பங்கம் வராது. தொழிலுக்குத் தேவையான கடன்களை பெறுவதில் வெற்றி அடைவீர்கள். புதிய ஆர்டர்களை பெற்று தொழில் போட்டியாளர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். அரசு பணியாளர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். வருமா வராதா என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். சிறு வியாபாரிகள், கடை வைத்திருப்பவர்கள் கணிசமான லாபத்தை அடைவார்கள். பேசிய திருமணங்கள் நின்று போகலாம். நெருங்கிய உறவினர் வகையில் துக்க காரியங்கள் நடக்கலாம். கலைத்துறையினர் வெளிநாடு செல்வார்கள். வழக்கறிஞர்கள் தொழிலை திறம்பட நடத்துவார்கள். மருத்துவர்கள் மகத்தான சாதனை படைப்பார்கள். 24 ஆம் தேதி சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.

inraiya rasipalan kanni

இந்த வார ராசி பலன் கன்னி - Weekly Rasi Palan for kanni in Tamil

கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம்(vara rasi palan) கடினமான வார்த்தைகளை எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தாதீர்கள். அலட்சிய போக்கால் சில நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள்.  உறவினர்களின் உள்குத்து வேலையால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். மனைவியின் மனதுக்கு இதமாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரம் விருத்தி அடையும். திடீர் பொருளாதார வரவு திக்கு முக்காட வைக்கும். மனைவி மக்கள் ஆசைப்பட்ட துணிமணிகளை வாங்கி கொடுப்பீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு சீட்டு கட்டுவீர்கள். சினிமாத்துறையினர் சிக்கலை சந்திப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையும். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிலவும்.25,26 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

 

inraiya rasipalan thulam

இந்த வார ராசி பலன் துலாம் - Weekly Rasi Palan for thulam in Tamil

துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம்(vara rasi palan) தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மனம் வெதும்புவீர்கள். ஆனால் நெருக்கமான நண்பர்களின் உதவியால் அதைத் தாண்டி வருவீர்கள். சந்திரனும் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறார். பண வரவு சிறப்பாக இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகளில் சிக்கல் உண்டாகும். ஐ டி யில் வேலை பார்க்கும் இளம் தம்பதிகள் புரிந்துணர்வு இல்லாமல் விவாகரத்து பெறுவார்கள். நிலம் வாங்கலாம். புதிய வீடு கட்டுவதற்காக திட்டமிடுவீர்கள். கல்விக்காக பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். தொழில் வளர்ச்சி மேம்பாடு அடையும். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பிரிந்து போன உறவுகளை ஒட்ட வைப்பீர்கள். விவசாய வேலையில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தோப்புக் குத்தகை மூலம் வருமானம் பெறுவீர்கள். பொறுமையும் நிதானமும் குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். வரவுக்கு மேல் செலவு வந்து உங்களை திணறடிக்கும். 27,28 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

inraiya rasipalan viruchigam

இந்த வார ராசி பலன் விருச்சிகம் - Weekly Rasi Palan for viruchigam in Tamil

விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) என்னதான் திட்டம் போட்டு காரியம் செய்தாலும் எதிர்பாராத செலவு வந்து கையை கடிக்கும். வாகனங்கள் பழுதாகி அவசரப் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். அடுத்தவருக்காக பொறுப்பு ஏற்றுக் கொள்வது நல்லதல்ல. சிறு வியாபாரிகள் தொழிலுக்கு தகுந்த லாபம் பெறுவார்கள். தனியார்துறை ஊழியர்கள் முதலாளிகளின் அன்பை பெறுவதற்கு கடுமையாக உழைப்பார்கள். வங்கியில் வாங்கிய கடனை அடைப்பீர்கள். வியாபாரத்தில் நுணுக்கங்களை புகுத்துவீர்கள். ஆரம்பத்தில் தொழில் தடுமாற்றம் ஏற்படும். பின்னர் சூடு பிடிக்கும். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் சித்திக்கும். அரசியலில் உங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். விரும்பிய பெண்ணின் அன்பை பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். முயற்சிகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணிசமான கையிருப்பு மனதை மகிழ்ச்சிப்படுத்தும். கடல் கடந்து பிரயாணம் செல்வீர்கள். 29,30 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.

 

inraiya rasipalan thanus

இந்த வார ராசி பலன் தனுசு - Weekly Rasi Palan for thanus in Tamil

தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) நினைத்த காரியங்கள் தடங்கல் இல்லாமல் நிறைவேறும். கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக இருக்கும். கமிஷன் வியாபாரம் அதிக லாபத்தை தரும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் அடைவீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள அதிகம் செலவு செய்வீர்கள். அறிமுகமில்லாத பெண்களிடம் நெருக்கம் காட்டாதீர்கள். அவர்களுக்காக பணம் செலவு செய்தால் அது விரைய கணக்கில் தான் போய் முடியும். ரியல் எஸ்டேட் தொழில் நல்லபடியாக நடக்கும். மணல் செங்கல் வியாபாரிகள் மகத்தான லாபம் பெறுவார்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணிக்க வேண்டும். வராமல் இருந்த சில கடன்கள் வசூலாகி மனத்திருப்தி உண்டாகும்.

 

inraiya rasipalan makaram

இந்த வார ராசி பலன் மகரம் - Weekly Rasi Palan for makaram in Tamil

மகர ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) அரசாங்க பொதுப்பணித்துறை வேலை வாய்ப்புகள் நீங்கள் எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். அரசியல் நண்பர்களால் இந்த அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் பக்குவமாக முதலீடு செய்யுங்கள். செவ்வாய் 11 இடத்தில் சஞ்சரிக்கிறார். விவசாய தொழிலில் புதிய பரிமாணத்தை கொண்டு வரும். உழவு நடவு வேலைகளில் உற்சாகமாக இறங்குவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பை விட வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். லாபம் பெருகி கையிருப்பு அதிகரிக்கும். முட்டுக்கட்டைகளை முறியடித்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய நல்ல செய்தி தாமதமாகும். கட்டுமான வேலைகள் சுணக்கமாக நடக்கும். குடும்பத்துடன் உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். தனியார் துறை ஊழியர்களும் அரசாங்க ஊழியர்களும் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவார்கள்.

 

inraiya rasipalan kumbam

இந்த வார ராசி பலன் கும்பம் - Weekly Rasi Palan for kumbam in Tamil

கும்ப ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan)  தந்தையார் தக்க சமயத்தில் உங்களுக்கு பண உதவி செய்வார். வழக்கறிஞர்கள் வாத திறமையால் புகழ் அடைவார்கள். மருத்துவர்கள்சிக்கலான அறுவை சிகிச்சைகளை துணிச்சலாக செய்து முடிப்பார்கள். பங்குச்சந்தை வர்த்தகம் தங்கு தடையில்லாமல் நடக்கும். பந்தயங்களில் கவனமாக இருங்கள். தொழிலை புத்திசாலித்தனமாக விரிவுபடுத்துவீர்கள். வசீகர பேச்சால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். வீடு கட்டுவதில் வெற்றி காண்பீர்கள். அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்வு அடைவார்கள். கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியடைவார்கள். குழந்தைகள் குதூகலமாக இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். முயற்சிகளால் பணவரவை அதிகப்படுத்துவீர்கள். தகப்பனார் வகையில் மருத்துவ செலவு வரலாம். சற்று கவனமாக இருப்பது நல்லது.

 

inraiya rasipalan meenam

இந்த வார ராசி பலன் மீனம் - Weekly Rasi Palan for meenam in Tamil

மீன ராசிக்காரர்களே, இந்த வாரம்(vara rasi palan) வியாபாரத்தில் சில தடங்கல்கள் வரும். அதை இறைவன் அருளால் தாண்டிச் செல்வீர்கள். உலவுகின்ற நிலவு தொழில் துறைக்கு உத்வேகத்தை கொடுக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் துணிந்து இறங்குங்கள். மண்ணில் போடுகின்ற பணம் பொன்னாக விளையும். தொடக்கத்தில் மந்தமான நிலையிலிருந்த வியாபாரம் வார இறுதியில் சூடு பிடிக்கும். வயதான பெற்றோர்கள் காசி யாத்திரை செல்ல ஆசைப்படுவார்கள். அதற்கான ஏற்பாட்டை செய்து கொடுங்கள். வீட்டில் திருமண நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கும். தொழில் வியாபாரம் பங்குச்சந்தை அனைத்தும் சிறப்பாக நடக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வெளியூர் பயணங்களின் போது பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். வாகனங்களை நிறுத்தும்போது பூட்டி விட்டு செல்லுங்கள்.

 

Click the links to get இந்த வார ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore