New Year Rasi Palan in Tamil – புத்தாண்டு ராசி பலன்

On 2024-01-04 4:17:18

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

புத்தாண்டு ராசி பலன் மேஷம் - New Year Rasi Palan for mesam in Tamil

மேஷ ராசி பலன் 2024 (Mesham Rasi Palan 2024 in tamil), இயற்கையாகவே மேஷ ராசிக்காரர்கள் மிகவும் தைரியமாகவும், துணிவுடனும், அதிகார தோனியுடனும் மற்றும் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் அவர்களுக்குத் தோன்றும் நல்ல விஷயங்களை செய்து கொண்டே இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்புடனும் செய்யும் வேலையில் கவனமுடனும் இருப்பார்கள். உங்கள் ராசிக்கு சனிபகவானது லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார், இது மிகவும் சிறப்பான அமைப்பு. அதனால் நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அனைத்தும் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் நன்மையை தரும். திறமையான வேலையாட்கள் உங்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்காக புதிய நவீன கருவிகள் வாங்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும். அரசு ரீதியாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலத்தில் கிடைக்காத பலன்கள் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும். பணி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். இந்த வருடம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். அதே போல பிள்ளைகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் நினைத்ததை நிறைவேற்றும் வாய்ப்பு அமையும். 6 மற்றும் 12 ஆகிய இடங்களில் ராகு கேது சஞ்சாரம் செய்வதால் வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து நல்ல அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் எதிர் பார்த்தவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்யம் கிடைக்கும். குரு 2- ல் சஞ்சாரம் செய்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரட்சனைகள் அனைத்தும் தீரும். புதிய வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் உண்டாகும். 

முருகன் மற்றும் துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் நல்லது.

inraiya rasipalan rishbam

புத்தாண்டு ராசி பலன் ரிஷபம் - New Year Rasi Palan for rishbam in Tamil

ரிஷப ராசி 2024 (Rishaba Rasi Palan 2024 in tamil), பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் எதிலும் சாமர்த்தியமாக பேசும் குணமுடையவர்கள். ஆடை, அணிகலன்கள் மற்றும் ஆபர்ணங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த 2024ஆம் வருடம் ஆடம்பரத்தை குறைத்துக்கொண்டு நிதானமாக செயல்பட வேண்டும். நேர்மையோடும் நாணயத்தோடும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட காரியத்தில் கவனமாக செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இருக்கிறார். சனி பலமாக இருக்கின்ற காரணத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்கின்ற வாய்ப்பை மிகவும் கவனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனி திறமையால் அனைத்தையும் சமாளிக்கும் மன தைரியம் உருவாகும். உங்களின் பணியாட்களின் ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழில் சம்பந்தமான கணக்கு வழக்குகளை கவனமாகவும், மிகவும் சரியாகவும் பராமரித்து வருவது அவசியம். உங்களின் பெயரில் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் உங்களின் குடும்பத்தாரின் பெயரில் முதலீடு செய்து தொழில் செய்தால் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அதே சமயம் வேலை பளு காரணமாக உங்களின் ஓய்வு நேரம் குறையும். உங்களின் உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு ஒதுக்கிய பணிகளில் நீங்கள் கவனமாகவும் பணி புரிய வேண்டும். லாப ஸ்தானத்தில் ராகு பகவான் 2024 ஆம் ஆண்டு முதல் சஞ்சாரம் செய்கிறார், இது மிகவும் அற்புதமான அமைப்பு. நெருங்கியவர்களின் உதவியால் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க முடியும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போனாலும் அதை சமாளிக்கும் மன தைரியம் உருவாகும். உணவு விஷயங்களை கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ள வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்டு தொடக்கத்தில் சுப காரியங்கள் தடைபட்டாலும் மே மாதம் தொடர்ந்து குரு பகவான் ஜென்ம ராசியில் அமைவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் சொல்படி கேட்டு ஆதரவாக இருப்பார்கள். 

சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

inraiya rasipalan mithunam

புத்தாண்டு ராசி பலன் மிதுனம் - New Year Rasi Palan for mithunam in Tamil

மிதுன ராசி பலன் 2024 (Mithuna rasi palan 2024 in tamil), மிதுன ராசிக்காரர்கள் பொதுவாகவே நல்ல அறிவாற்றல் மற்றும் மற்றவர்களை வழிநடத்தும் குணம் கொண்டவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள். நல்ல திறமையான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். சனிபகவான் 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளதால், இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் மிக மிகச் சிறப்பாக இருக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படும் வாய்ப்பு அமையும். புதிய வாய்ப்புகள் அமையும். சந்தையில் நல்ல வாய்ப்புகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கடந்த வருடம் பணியாட்கள் காரணமாக சில இடையூறுகள் ஏற்பட்டிருக்கும், அது அனைத்தும் நீங்கி தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பணி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள், பதவி உயர்வு கிடைக்கும். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். மனைவி பிள்ளைகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சனி ஒன்பதாம் வீட்டில் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். அசியும் அசையா சொத்துக்களில் சில செலவுகள் உண்டாக வாய்ப்புள்ளது. அம்மாவின் வழியில் சில சில மனக்கஷ்டங்கள் உண்டாகலாம். மே 1ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் 12 ஆம் வீட்டிற்கு செல்வதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்த வேண்டும். பூர்வீக சொத்துக்களின் நல்ல பலன்களை பெரும் அதிர்ஷ்டம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் உண்டாகும். 

விநாயகர் வழிபாடு செய்வது மற்றும் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நல்ல பலனை தரும். 

 

inraiya rasipalan kadagam

புத்தாண்டு ராசி பலன் கடகம் - New Year Rasi Palan for kadagam in Tamil

கடக ராசி பலன் 2024 (Kadagam Rasi Palan 2024 in tamil), ராசி மண்டலத்தில் நான்காவது ராசியான கடக ராசிக்காரர்கள் கற்பனை திறன் மற்றும் பேச்சுத் திறமையால் மற்றவர்களை ஈர்க்கும் திறமை கொண்டவர்கள். கடக ராசிக்காரர்கள் இடம் பேசி ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பவர்கள். இந்த 2024 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு சனி பகவான் எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார், அதனால் எதிலும் தைரியமாக செயல்படும் ஆற்றில் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். இந்த வருட தொடக்கத்தில் நான்கு மாதங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீ ஒன்றாம் தேதிக்குப் பிறகு குரு பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார், அதற்குப் பிறகு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்களும், நல்ல முன்னேற்றங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் இந்த வருட, முதல் நான்கு மாதங்களில் மற்றவர்களின் பேச்சை கேட்டு ஏமாறாமல் உங்களுக்கு இருக்கும் வேலைகளை கவனம் செலுத்த வேண்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மே ஒன்றாம் தேதிக்கு பிறகு மங்களகரமான சுப காரிய நிகழ்வுகள் குடும்பங்களில் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடலில் சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை உடனே கவனித்து பரிசோதிப்பது அவசியமாகும். உங்களின் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மருத்துவ செலவுகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ காப்பீடு செய்து கொள்வது உதவிகரமாக இருக்கும். இரவு நேர தொலைதூர பயணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஜூன் மாதத்திற்கு பிறகு வீடு, மனை மற்றும் வாகனம் வாங்கினால் நல்ல பலன் அளிக்கும். 

ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நல்லது. 

inraiya rasipalan simmam

புத்தாண்டு ராசி பலன் சிம்மம் - New Year Rasi Palan for simmam in Tamil

சிம்ம ராசி பலன் 2024 (simmam Rasi Palan 2024 in tamil), சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் தைரியமாகவும் மற்றவர்களை வழிநடத்தும் வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். 2024 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்கள் மிகவும் பொற்காலமாக அமையும். குருபகவான் ஒன்பதாம் வீட்டில் ஏப்ரல் 30 வரை சஞ்சாரம் செய்கிறார், அதனால் மங்களகரமான சுப காரிய நிகழ்வுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். மே மாதத்திற்கு பிறகு தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும். நெருங்கியவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்கள் நல்ல பலன்களை தரும். அதற்குப் பிறகு சற்று கவனமாக கையாள வேண்டும். மே மாதத்திற்கு பிறகு சற்று கடினமான நிகழ்வுகள் உண்டாகும். எல்லோரிடமும் சற்று விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும், பேச்சை குறைப்பதும் நல்லது. 

சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.

inraiya rasipalan kanni

புத்தாண்டு ராசி பலன் கன்னி - New Year Rasi Palan for kanni in Tamil

கன்னி ராசி பலன் 2024 (Kanni Rasi Palan 2024 in tamil), கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக நிறைய விஷயங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொண்டு நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு பொற்காலமாக அமையும். சனிபகவான் உங்களது ராசியில் ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார், அது மிகவும் சிறப்பான அமைப்பாகும். பண வரவுகள் மிக மிக நன்றாக இருக்கும். மே 1 தேதிக்கு பிறகு மிகவும் சிறப்பான அமைப்புகள் உருவாகும். மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக செயல்படக்கூடிய விஷயங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்களின் போட்டியாளர்கள் கூட உங்களுடன் நட்பு பாராட்டும் விதமாக நடைபெறும். அரசாங்க ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழில் வளர்ச்சிக்காக புதிய கருவிகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பதவி உயர்வு. விரும்பிய இடம் மாற்றங்களும் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலமாக சில அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான விஷயங்களில் இந்த வருடம் முதல் நான்கு மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். கூட்டாளிகளிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பெயரில் மனை, வீடு வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். 

விநாயகர் வழிபாடு, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

inraiya rasipalan thulam

புத்தாண்டு ராசி பலன் துலாம் - New Year Rasi Palan for thulam in Tamil

துலாம் ராசி பலன் 2024 (Tulam Rasi Palan 2024 in tamil), ராசி மண்டலத்தின் ஏழாவது ராசியான துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே தைரியத்துடனும் துணைவுடனும் இருப்பார்கள். மற்றவர்கள் தவறு செய்தால் அதை தைரியமாக தட்டிக் கேட்கும் வல்லமை உடையவர்கள். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும். சனிபகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார் அதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முதல் நான்கு மாதங்களில் குடும்பத்தில் மங்களகரமான சுப காரிய நிகழ்வுகள் நடைபெறும். தொழில் வியாபாரம் மிக மிக நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் வேலை பளு குறையும். கடந்த காலத்தில் இருந்த அலைச்சல்கள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நல்ல அந்தஸ்தை பெறுவீர்கள். மே ஒன்றாம் தேதிக்குப் பிறகு, குரு பகவான் எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் கொடுக்கல் வாங்கல் சற்று கவனமாக இருக்க வேண்டும். வீட்டிற்கு தேவையான நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 

மகாலட்சுமி மற்றும் விநாயகரை வழிபடுவது நல்லது. 

inraiya rasipalan viruchigam

புத்தாண்டு ராசி பலன் விருச்சிகம் - New Year Rasi Palan for viruchigam in Tamil

விருட்சிக ராசி பலன் 2024 (Virutchigam Rasi Palan 2024 in tamil), ராசி மண்டலத்தில் எட்டாவது ராசியான விருச்சிக ராசிக்காரர்களின் குண நலன்களை யூகித்து கண்டறிவது மிகவும் சிரமம். இவர்கள் சற்று பதற்றத்துடனே காணப்படுவார்கள். எந்த நேரத்தில் எப்படி செயல்படுவார்கள் என்று யூகிக்க முடியாது. உங்களின் முன் கோபத்தை குறைத்து நிதானமாக செயல்பட்டால் நல்ல பலனை பெற முடியும். 2024 ஆண்டில் கேது பகவான் ஆண்டு முழுவதும் 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் மன தைரியம் உண்டாகும். சனி பகவான் 4ல் சஞ்சாரம் செய்வதால் அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். அசையா சொத்துக்கள் வகையில் சுப செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பங்காளிகளிடம் பேசும் போது சற்று கவனமாக பேச வேண்டும். முதல் நான்கு மாதங்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மே 1ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அற்புதமான பலன்களை பெற முடியும். சுப காரிய நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு இல்லாமலே நீங்கள் கவனமாக இருந்தால் நல்ல லாபம் பெற முடியும். புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நல்ல பெயரை பெறுவீர்கள். பணியில் கவனமாக இருந்தால் நீங்கள் விரும்பிய பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்கும். பொறுமை மற்றும் நிதானத்தின் கடைபிடிக்க வேண்டும். இரவு நேரத்தில் வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். 

சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலனை அளிக்கும். 

inraiya rasipalan thanus

புத்தாண்டு ராசி பலன் தனுசு - New Year Rasi Palan for thanus in Tamil

தனுசு ராசி பலன் 2024 (Thanusu Rasi Palan 2024 in tamil), குருவின் ராசியான தனுசு ராசிக்காரர்கள் ராசி மணடலத்தின் ஒன்பதாவது ராசியில் பிறந்தவர்கள். உங்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் வளமான பலனை தரும். கடந்த கால பிரச்சனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். பண வரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கும்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் உண்டாகும். கடந்த வருடத்தில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தங்களது திறமையை வெளிப்படுத்தி பதவி உயர்வு பெறுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வீடு மற்றும் மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பழைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான அன்பு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் லாபம் பெறுவீர்கள். 

அம்மன் வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு நல்ல பலனை தரும்.  

inraiya rasipalan makaram

புத்தாண்டு ராசி பலன் மகரம் - New Year Rasi Palan for makaram in Tamil

மகரம் ராசி பலன் 2024 (Magaram Rasi Palan 2024 in tamil), ராசி மண்டலத்தின் பத்தாவது ராசியான மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கு உதாரணமாக விளங்குபவர்கள். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு ஒரு வளமான வாழ்வு வாழும் ராசிக்காரர்கள். 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு பாதச்சனி நடைபெறுகிறது. சனி இரண்டில் உள்ளதால் உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் பேச்சை குறைப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது மிக மிக சிறப்பு.  உங்கள் ராசிக்கு அதிபதியாக சனி இருப்பதனால் பாதச் சனி உங்களுக்கு எந்தவித கெடுதலையும் தராது. அத்துடன் ராகு மூன்றில் உள்ளதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய வாய்ப்புகள் மற்றும் எதையும் சமாளிக்கும் மனோ தைரியமும் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த அலைச்சல் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். 2024 ஆம் வருடத்தில் முதல் நான்கு மாதங்கள் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மே 1ம் தேதிக்கு பிறகு குரு அஞ்சலி மாற்றம் செய்கிறார். அதனால் உங்களுக்கு நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் கைகூடும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் ஒரு வாய்ப்பு அமையும். உங்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையும். பிள்ளைகளின் வழியில் இருந்து மன கவலைகள் நீங்கி மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறும். புதிய சொத்துக்கள் மற்றும் புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் ஒரு சில சாதகமான பலன்களை பெறுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த பங்காளி சண்டைகள் அனைத்தும் தீர்ந்து சிறப்பான பலனை தரும். நீண்ட காலமாக இருந்து சொத்து பிரச்சினைகள் நீங்கி உங்களுக்கு வர வேண்டிய சொத்துக்கள் அனைத்தும் உங்களிடம் வந்து சேரும். நீண்ட காலமாக இருந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வெளியூர் தொடர்பு மூலம் சாதகமான பலன்களை பெறுவீர்கள். 

சனிபகவானுக்கு தீபம் ஏற்றுவது பைரவர் வழிபாடு நல்லது.

inraiya rasipalan kumbam

புத்தாண்டு ராசி பலன் கும்பம் - New Year Rasi Palan for kumbam in Tamil

கும்ப ராசி பலன் 2024 (Kumbam Rasi Palan 2024 in tamil), ராசி மண்டலத்தின் 11 வது ராசியான கும்ப ராசிக்காரர்களுக்கு, ஏழரைச் சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. இரண்டில் ராகு எட்டில் கேது சஞ்சரிக்கிறது அதனால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். மனைவி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் அதில் நேர்மையாக செயல்பட்டால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மட்டும் கவனமாக இருந்தால் நல்ல பலனை பெற முடியும். தொழில் செய்பவர்கள் பெரிய முதலீடு கொண்டு செய்யும் தொழிலை, தங்களது பெயரில் செய்யாமல் தங்கள் குடும்பத்தாரின் பெயரில் செய்தால் நல்ல அணுகலமான பலன் கிடைக்கும். வீடு மனை வாங்கும் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொலைதூர பயணங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வருடம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முதல் நான்கு மாதங்களில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். 

ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மற்றும் அம்மன் கோவிலுக்கு செல்வது சிறப்பான பலனை தரும். 

inraiya rasipalan meenam

புத்தாண்டு ராசி பலன் மீனம் - New Year Rasi Palan for meenam in Tamil

மீன ராசி பலன் 2024 (Meenam Rasi Palan 2024 in tamil) , ராசி மண்டலத்தில் கடைசி ராசியான மீன ராசிக்காரர்களுக்கு, இந்த 2024 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாத காலங்கள் பொற்காலமாக இருக்கும். ராசிக்கு அதிபதியான குரு பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அற்புதமான பலனை தரும். தொழில் வியாபாரம் மற்றும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வளம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும். மே 1ம் தேதிக்கு பிறகு தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வருடம் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும் அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களது ராசிக்கு விறையச் சனி நடப்பதால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்பட வேண்டும் மற்றும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.  உங்களுக்கு முதல் நான்கு மாதங்கள் வெற்றி தரும் மாதங்களாக இருக்கும். 

அம்மன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும்.

Click the links to get புத்தாண்டு ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore