Tamil New Year Rasi Palan in Tamil – தமிழ் புத்தாண்டு ராசி பலன்

On 2022-04-10 7:51:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் மேஷம் - Tamil New Year Rasi Palan for mesam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

மேஷ ராசி அன்பர்களுக்கு (Mesam rasi palan 2022 in tamil) துன்பங்கள் எல்லாம் விலகி இன்பங்கள் தரும் ஒரு அருமையான சுபகிருது தமிழ் வருடம் பிறக்கிறது. சில சுப செலவுகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. பணி செய்பவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு வேலை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணவரவு தாராளமாக இருக்கும்.  திருமண யோகம் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும்.

inraiya rasipalan rishbam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் ரிஷபம் - Tamil New Year Rasi Palan for rishbam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

ரிஷப ராசிக்காரர்களுக்கு (Rishaba rasi palan 2022 in tamil) இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உள்ளது. புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண யோகமும் கைகூடிவரும். நீண்ட காலமாக பிரிந்திருந்த கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் வாய்ப்பு உள்ளது. மாணவ மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும், நல்ல மதிப்பெண்களை பெற சிறந்த வருடமாக இருக்கும். சிலருக்கு திடீர் திருமணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் பேசும் போது சற்று கவனமாக பேச வேண்டும்.

inraiya rasipalan mithunam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் மிதுனம் - Tamil New Year Rasi Palan for mithunam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

மிதுன ராசிக்காரர்களே (Mithuna rasi palan 2022 in tamil) இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரதில் இருந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பிறருக்கு சாட்சி கையெழுத்து போடும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். மாணவ மாணவிகளின் படிப்பு சிறப்பாக இருக்கும்.

inraiya rasipalan kadagam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் கடகம் - Tamil New Year Rasi Palan for kadagam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

கடக ராசிக்காரர்களுக்கு (Kadaga rasi palan 2022 in tamil) இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்கும். வேலையில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய இடம் மற்றும் வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இருந்த நிதி நெருக்கடிகள் நீங்கி நல்ல லாபம் பெற முடியும். சில மருத்துவ செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண யோகம் கைகூடி வரும். 

inraiya rasipalan simmam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் சிம்மம் - Tamil New Year Rasi Palan for simmam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

சிம்ம ராசிக்காரர்களே (Simma rasi palan 2022 in tamil) இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு ஒரு உயர்வு தரும் புத்தாண்டாக அமையப் போகிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் செல்வச்சழிப்பு ஏற்படும். திருமண பேச்சுவர்த்தை சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். மற்றவர்களை நம்பி தொழில் வியாபாரத்தை ஒப்படைப்பது தவிர்க்கவும். சுப செலவுகள் சற்று அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கணவன்-மனைவி இருவரும் சற்று அனுசரித்துச் செல்லவும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

inraiya rasipalan kanni

தமிழ் புத்தாண்டு ராசி பலன் கன்னி - Tamil New Year Rasi Palan for kanni in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

கன்னி ராசிக்காரர்களே (Kanni rasi palan 2022 in tamil) இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சாதனை தரும் ஆண்டாக அமையப் போகிறது. குடும்பத்தில் இருந்த சிறு சிறு சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். பணி செய்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் மூலம் உதவிகள் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய வீடு மனை மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பணியில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் படிப்பு சிறப்பாக இருக்கும்.

inraiya rasipalan thulam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் துலாம் - Tamil New Year Rasi Palan for thulam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

துலாம் ராசிக்காரர்களே (Thulam rasi palan 2022 in tamil) இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டில் நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையப் போகிறீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் மாணவர்களுக்கு அவர்கள் நினைத்த படிப்பை படிக்கும் வாய்ப்பு வந்து சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெண்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உயர்ந்த நிலையைப் பெற போகிறீர்கள். காதல் திருமணம் கை கடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

inraiya rasipalan viruchigam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் விருச்சிகம் - Tamil New Year Rasi Palan for viruchigam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

விருச்சிக ராசிக்காரர்களுக்கு (Virutchigam rasi palan 2022 in tamil) இந்த தமிழ் புத்தாண்டு வெற்றி தரும் ஆண்டாக அமையப் போகிறது. சமுதாயத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. பணப்புழக்கம் அதிகரிக்கும் பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடிவரும். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாண்டு சாதனை படைக்க போகிறீர்கள். திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.  மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக அமையப்போகிறது. 

inraiya rasipalan thanus

தமிழ் புத்தாண்டு ராசி பலன் தனுசு - Tamil New Year Rasi Palan for thanus in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

தனுசு ராசிக்காரர்களே (Thanusu rasi palan 2022 in tamil) உங்களுக்கு இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு நிறைய மகிழ்ச்சியை அள்ளித் தரப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய சாதனைகள் படைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்திலிருந்த பிரச்சினகள் அனைத்தும் விலகும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தை நற்பலனைத் தரும். உங்களுடைய ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

inraiya rasipalan makaram

தமிழ் புத்தாண்டு ராசி பலன் மகரம் - Tamil New Year Rasi Palan for makaram in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

மகர ராசிக்காரர்களே (Makara rasi palan 2022 in tamil) இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு யோகம் தரும் ஆண்டாக அமையப் போகிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் கைகூடி வரும். கணவன் மனைவி இடையேயான பிரச்சனை முடிவுக்கு வரும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

inraiya rasipalan kumbam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் கும்பம் - Tamil New Year Rasi Palan for kumbam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

கும்ப ராசிக்காரர்களே (Kumbam rasi palan 2022 in tamil) இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சுபமான புத்தாண்டாக அமைந்துள்ளது. மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். செலவுகள் சற்று அதிகரித்தாலும் பணவரவு சரளமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் மூலம் நற்பலன் கிடைக்கும். உயர்கல்வி யோகம் கைகூடி வரும். கணவன்-மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையுடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்பு இருந்த தடங்கல்கள் சிக்கல்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கப் போகிறது.

inraiya rasipalan meenam

தமிழ் புத்தாண்டு ராசி பலன் மீனம் - Tamil New Year Rasi Palan for meenam in Tamil

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 | Subakiruthu Tamil New Year Rasi Palan 2022

மீன ராசிக்காரர்களே (Meenam rasi palan 2022 in tamil) இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பொன்னான ஆண்டாக அமைய போகிறது. நல்ல சந்தோஷமான செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது. பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரமும் மதிப்பும் உங்களுக்கு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடிவரும். புத்திரபாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவி இருவரும் அனுசரித்துச் செல்லவேண்டும். மாணவர்களுக்கு சிறந்த ஆண்டாக அமையப்போகிறது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

Click the links to get தமிழ் புத்தாண்டு ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore