Sani Peyarchi Rasi Palan in Tamil – சனி பெயர்ச்சி ராசி பலன்

On 2023-12-21 1:36:45

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

சனி பெயர்ச்சி ராசி பலன் மேஷம் - Sani Peyarchi Rasi Palan for mesam in Tamil

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி  17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11–ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். சனி 11-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். இது நாள் வரை 10-ல் சஞ்சாரம் செய்ததால் தொழில், உத்தியோக ரீதியாக உங்களுக்கு தேவையற்ற இடர்பாடுகள் இருந்தது. தற்போது அவை எல்லாம் விலகி எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்து கடன்களை பைசல் செய்ய முடியும். புதிய தொழில் தொடங்க வேண்டும், இருக்கும் தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு வரும் நாட்கள் ஒரு பொற்காலம் எனலாம். பெரிய முதலீடு செய்து நினைத்த காரியத்தை நிறைவேற்ற முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் பல்வேறு வளமான பலன்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வுகளையும், விரும்பிய இடம் மாற்றங்களையும் அடைய முடியும். உங்கள் தகுதிக்கான வேலை வாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு மனமகிழ்ச்சி தரக்கூடிய பதவியினை எட்ட முடியும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பியவர்களுக்கு நல்லது நடக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை உயரும். சனிபகவான் சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 01-05-2024 முதல் 14-05-2025 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கக்கூடிய காலமானது மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து வகையில் அனுகூலங்கள் போன்றவை ஏற்படும் யோகம் உண்டு. சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை சஞ்சரிக்கும் காலத்தில் மேலும் சிறப்பான பலன்களை அடைவதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டு. உடல் ஆரோக்கியம் உங்களது உடல்நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டர்களுக்கு தற்போது வீண் செலவுகள் குறைந்து சேமிக்க முடியும். உங்கள் செயல்களுக்கு வெற்றி கிடைப்பதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் நிறைவேறி உங்களின் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் பொருளாதார நிலை குடும்பத்தில் சுபிட்சம், தாராள தன வரவு மகிழ்ச்சி உண்டாகும். சர்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் அக்டோபர் 2023 வரை கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமானது உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் கனவுகள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் பண பரிவர்த்தனைகளில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி அனுகூலமான நிலை உண்டாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண முடியும். கடன்கள் படிப்படியாக குறையும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்டு நட்புடன் பழகுவார்கள். வம்பு, வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பங்காளிகளின் ஆதரவானது சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் தொழில், வியாபாரத்தில் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் படிப்படியாக நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவுகளையும், பொருளாதார உதவிகளையும் பெற முடியும். ஜெனன ஜாதகத்தில் சொந்த தொழில் யோகமும் சிறப்பாக இருந்தால் புதிய தொழில் தொடங்கி வெற்றி காண முடியும். வேலையாட்கள் உதவியாக இருப்பது மட்டுமில்லாமல் திறமை வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகம் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் வருகின்ற நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும். நீங்கள் செய்த பணிக்கான தக்க சன்மானம் தற்போது கிடைத்து கடன்களை பைசல் செய்ய முடியும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள், சம்பள பாக்கிகள் எல்லாம் வருகின்ற நாட்களில் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். அரசியல் உங்களின் பெயர், புகழ் மேலோங்ககூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இருக்கும் இடத்தில் மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு பொதுகாரியங்களில் ஈடுபட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். அரசு அதிகாரிகளுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட முடியும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். விவசாயிகள் உங்கள் உழைப்பு வீண் போகாமல் பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன் மூலம் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்வது மட்டுமில்லாமல் புதிய விளைநிலங்களை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த மானிய உதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நவீன யுக்திகளை பயன்படுத்தி உங்கள் விவசாயத்தை அபிவிருத்தி செய்வீர்கள். பெண்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சார்ந்த குடும்பத்தின் பொருளாதார நிலை மிக திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மத்தியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். ஆடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் மனம் மகிழும் இனிய நிகழ்வுகள் நடக்கும். மக்கள் மத்தியில் நீங்காத பெயரை வாங்கித் தரக் கூடிய அளவிற்கு நல்ல கதாபாத்திரம் உங்களுக்கு கிடைக்கும். நடிப்பில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்து மக்கள் மத்தியில் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பது மட்டுமில்லாமல் ஆதரவு பெருகும். மாணவ மாணவியர் உங்களின் ஞாபக சக்தி சிறப்பாக இருந்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு நல்ல பெயர் வாங்கி தருவீர்கள். திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற முடியும். உங்களுக்கு இருந்த தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்கள் உங்களுடன் இணைவார்கள்.

inraiya rasipalan rishbam

சனி பெயர்ச்சி ராசி பலன் ரிஷபம் - Sani Peyarchi Rasi Palan for rishbam in Tamil

கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள்

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி  17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) ஜீவன ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். உங்கள் ராசிக்கு சனி 9, 10-க்கு அதிபதியாகி தர்மகர்மாதிபதி என்ற காரணத்தால் இயற்கையிலேயே பல்வேறு நற்பலன்களை வழங்கக்கூடிய அமைப்பைக் கொண்டவர் என்றாலும், 10-ல் சஞ்சரிக்க உள்ளதால் அனைத்து செயலிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை இருக்கும். சனி ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் ரீதியாக நீங்கள் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் கால நேரம் பார்க்காமல் கடினமாக உழைத்தால் மட்டுமே தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். சில வேலைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து தருவதன் மூலமாக உங்களுக்குள்ள வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும். அதிகப்படியான அலைச்சலால் உங்களின் ஓய்வு நேரம் குறைவது மட்டுமில்லாமல் மனதளவில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தேவையற்ற எதிர்ப்புகள் காரணமாக தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டிப் போகும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களில் யோசித்து செயல்படுவது, முதலீடுகளை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நன்மையை தரும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் கவனமாக செயல்பட வேண்டிய நேரமாகும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் சில இடையூறுகள் இருந்தாலும், எடுத்த பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும் என்றாலும் அதற்கான சன்மானங்கள் கிடைக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும். உங்களது உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்கள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். சனி ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டுக் கோளான குருபகவான் 22-04-2023 முதல் 01-05-2024 வரை விரைய ஸ்தானத்திலும், 01-05-2024 முதல் 14-05-2025 வரை வரை ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் என்றாலும் உடனிருப்பவர்களே தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். உங்கள் ராசிக்கு 6-ல் சர்ப்ப கிரகமான கேது 30-10-2023 வரை சஞ்சரிப்பதும், அதன் பின் 11-ல் ராகு 30-10-2023 முதல் 18-05-2025 வரை சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.    உடல் ஆரோக்கியம் உங்களது உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும் என்றாலும் நிதானமாக செயல்படுவதன் மூலமாக வீண் மருத்துவ செலவுகளை குறைக்க முடியும். அதிக அலைச்சல் காரணமாக உங்களுக்கு ஓய்வு நேரம் குறையும் என்பதால் அதன் காரணமாக உடல் அசதி ஏற்படலாம். ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது நிதானம் தேவை. குடும்பம் பொருளாதார நிலை கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின் காரணமாக உங்களுக்கு உள்ள பெரிய நெருக்கடிகளை கூட எளிதில் சமாளிக்க முடியும். பொருளாதார நிலையானது திருப்திகரமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, சிக்கனமாக இருக்கவும். கொடுக்கல்- வாங்கல் பணப்பரிமாற்ற விஷயங்களில் ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துகின்ற பொழுது உங்கள் பெயரில் மட்டும் செய்யாமல் மனைவி, பிள்ளைகள் பெயரில் செய்வது கூட நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும் என்றாலும் உங்களின் தனித்திறனால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் தொழில், வியாபார ரீதியாக நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். மறைமுக போட்டிகள் காரணமாக நல்ல வாய்ப்புகளில் சில சுனக்கங்கள் ஏற்படும். பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் லாபங்கள் சற்று குறையும். வேலையாட்களை அனைத்து விஷயத்திலும் நம்பாமல் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் சில சிக்கல்களை சமாளிக்க முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் பொருளாதார உதவிகள் தாமதப்படும். உத்தியோகம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். அதிக பணிச்சுமை காரணமாக அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு ஓய்வு நேரம் குறைவதால் உடல் சோர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடந்து கொண்டால் நிலைமையை சமாளிக்க முடியும். தற்போது நீங்கள் இருக்கும் நிலையே உங்களுக்கு நல்லது என்பதால் பிறர் சொல்வதை எல்லாம் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல் அரசியல்வாதிகள் நல்ல உயர்வினை அடையும் வாய்ப்பு இருந்தாலும் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற சில நேரங்களில் உங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கும். அரசியல் தலைவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் பொறுமையோடு செயல்பட்டால் சிறு தடைக்குப் பிறகு அடைய வேண்டிய பதவிகளை அடைய முடியும். விவசாயிகள் விவசாயிகளுக்கு விளைச்சல் சாதகமாக இருந்தாலும் உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல வேலை கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். புழு, பூச்சிகள் தொல்லை, கூலியாட்களுடைய நெருக்கடிகள் காரணமாக பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு வழியில் கிடைக்கக்கூடிய மானிய தொகைகள் மூலமாக மன அமைதி ஏற்படும். பங்காளியிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. நிலத் தொடர்பான வம்பு, வழக்குகளில் பேச்சை குறைத்தால் சாதகமான தீர்ப்பை அடைய முடியும். பெண்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் உற்றார் உறவுகளிடம் பேச்சில் கவனத்தோடு இருந்தால் சிறு தடைக்குப் பிறகு மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு பணியில் வேலைபளு இருந்தாலும் அதற்கான ஊதியத்தை அடைய முடியும். மற்றவர்களுடைய பணியையும் சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். கலைஞர்கள் நல்ல கதாபாத்திர வாய்ப்பு கிடைத்து உங்களின் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். வாய்ப்புகள் அதிகம் கிடைத்தாலும் அதற்கான ஊதியம் சற்று குறைவாக இருக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதால் உங்களது சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிக்கும். வெளி நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிராமல் இருப்பது நல்லது. மாணவ மாணவியர் மாணவ, மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் பழகக் கூடிய நபர்களால் சிறு சிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, கவனத்தோடு பழகுவது நல்லது. போட்டி தேர்வுகளில் முனைப்புடன் செயல்பட்டால் பரிசுகளை வெல்ல முடியும். மேற்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும்.

inraiya rasipalan mithunam

சனி பெயர்ச்சி ராசி பலன் மிதுனம் - Sani Peyarchi Rasi Palan for mithunam in Tamil

மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை 8-ல் சஞ்சரித்த சனி பல இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்தார். தற்போது ஏற்படும் மாற்றத்தால் திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்ற காரணத்தால் வருகின்ற நாட்களில் வளமான பலன்கள் ஏற்பட்டு குடும்பத்தில் சுபிட்சங்கள் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மன நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து செல்வம், செல்வாக்கு உயரும் யோகம், நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வீடு வாங்கக்கூடிய யோகமும், புதிதாக வீடு கட்டக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் கடந்த கால மருத்துவ செலவுகள் எல்லாம் படிப்படியாக குறையும். பண பரிவர்த்தனை விஷயங்களில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான லாபத்தை அடையும் யோகமும், தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகளும், சிலருக்கு புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த கால வேலை பளு எல்லாம் குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமும், விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்களுக்கு தற்போது கிடைக்கும் இடமாற்றத்தின் காரணமாக குடும்பத்தோடு இணைந்து மன நிம்மதியுடன் இருக்க முடியும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலங்களும், நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். சனி 9-ல் சஞ்சரிக்கும் இக்கால கட்டத்தில் ஆண்டுக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் 22-05-2023 முதல் 01-05-2024 வரை சஞ்சாரம் செய்ய எடுப்பது மிகவும் அற்புதமான ஒரு அமைப்பாகும். இக்காலங்களில் திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், குழந்தை பாக்கியம், உங்களின் நீண்ட நாளைய கனவுகள் நிறைவேற கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும். சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் 30-10-2023 முடிய சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது ஏற்பட இருக்கக்கூடிய சனிப்பெயர்ச்சியின் மூலமாக நீங்கள் எதிலும் தெம்போடும் சுறுசுறுப்போடும் செயல்படுவது மட்டுமில்லாமல் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.   உடல் ஆரோக்கியம் உங்களுக்கு இருந்த உடல் ரீதியான பிரச்சினைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கியத்தோடு இருப்பதால் மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பம் பொருளாதார நிலை பொருளாதார ரீதியாக உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறுவது மட்டுமில்லாமல் கடந்த கால கடன்கள் குறையும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உற்றார்- உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ்ச்சி தரக்கூடிய சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் உங்களுக்கு இருந்த தேக்க நிலை விலகி கொடுக்கல்- வாங்கல் ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். உங்களுக்கு வரவேண்டிய பண பாக்கிகள் அனைத்தும் தற்போது தக்க நேரத்தில் வந்தடைந்து அனைத்து விதமான நெருக்கடிகளும் குறையும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது நல்ல பலன் கிடைக்கப் போகிறது. தொழில் அபிவிருத்தி செய்யக்கூடிய யோகமும், தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் திறமை வாய்ந்த வேலை ஆட்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் விலகக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள், நிலுவைத் தொகைகள் தற்போது கிடைத்து கடன்களை குறைத்துக் கொள்ள முடியும். சக ஊழியர்களுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் மன அமைதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர் மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும். அரசியல் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடமான நிலை விலகி சமுதாயத்தில் உங்களது பெயர், புகழ் மேலோங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கக்கூடிய யோகமும், மக்கள் மத்தியில் உங்களது செல்வாக்கு அதிகரிக்க கூடிய சூழ்நிலையும் ஏற்படும். விவசாயிகள் விளைச்சல் சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை அடைவீர்கள். கூலியாட்களுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும். அதிகப்படியான பணவரவால் விளைநிலங்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் கிடைக்கும். விவசாய நிலங்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது உங்களுக்கு சாதகமாக மாறி நல்ல தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை, ஆடை, அணிகலன்களை வாங்கக் கூடிய யோகம், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். உடல் ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உயர் பதவிகளை அடையும் வாய்ப்பு உண்டாகும். கலைஞர்கள் உங்கள் தகுதிக்கான நல்ல வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த கவலைகள் எல்லாம் மறைந்து உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கக்கூடிய அளவிற்கு சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடிய யோகமும், அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவ மாணவியர் உங்களுக்கு இருந்த உடல் சோர்வுகள் விலகி படிப்பில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று நல்ல பெயர் எடுக்க முடியும். மேற்படிப்புக்காக ஒரு சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர் ஆசிரியரின் ஆதரவு மன மகிழ்ச்சியை உண்டாக்கும்.

inraiya rasipalan kadagam

சனி பெயர்ச்சி ராசி பலன் கடகம் - Sani Peyarchi Rasi Palan for kadagam in Tamil

புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெற இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. உடல் சோர்வு அதிக அலைச்சல் ஏற்படும். உற்றார்- உறவினரிடம் பேச்சை குறைப்பது நல்லது. நேரத்திற்கு சாப்பிடுவது, சிறு பாதிப்பு என்றாலும் உடனே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பண பரிமாற்ற விஷயங்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம் கூட தக்க நேரத்தில் திரும்பி வராத காரணத்தினால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்றாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. சில நேரங்களில் நீங்கள் நேரடியாக பணி புரிந்தால் மட்டுமே எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். அதிக முதலீடுகளை தவிர்ப்பது, அப்படி அவசியம் என்றால் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் உங்கள் உடல் உபாதைகள் காரணமாக பணியில் கவனம் செலுத்த முடியாத ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவரிடம் வீண் பேச்சை தவிர்த்து விட்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். சனி அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டு கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு 22-04-2023 வரை பாக்கிய ஸ்தானத்திலும், 01-05-2024 முதல் 14-05-2025 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு சிறப்பான அமைப்பு என்பதால் இக்காலங்களில் தாராள பண வரவுகள் ஏற்பட்டு உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். குருவின் சாதக நிலையால் பல்வேறு வளமான பலன்களை இக்காலங்களில் அடைய முடியும். வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞ்சரிக்க இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் நீங்கள் செய்யக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.   உடல் ஆரோக்கியம் உங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. முடிந்தவரை குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, தேவையில்லாத மன அமைதி குறைவு ஏற்படும். சிலருக்கு பயணங்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பம் பொருளாதார நிலை கணவன்– மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் வீண் செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பண பரிமாற்ற விஷயங்களில் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் மன நிம்மதி குறைவு ஏற்படும். பங்காளியிடம் பேச்சை குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நியாயப்படி நடந்து கொண்டாலும் உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தாமதப்படும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, பிறரை நம்பி ஒரு காரியத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தேவையில்லாத வம்பு, வழக்குகளால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. அனைத்து செயலிலும் நீங்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உங்களுக்கு தொழில் நிமித்தமாக வேலை பளு அதிகரிப்பதால் ஓய்வு நேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாது. சில விஷயங்களை தியாகம் செய்தால்தான் தொழிலில் உங்கள் பெயரை நிலை நாட்ட முடியும். உத்தியோகம் உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரம் என்றாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் சில இடையூறுகள் ஏற்படும். சக ஊழியர்கள் சரியாக பணிபுரியாததால் அவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய இருக்கும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் உங்கள் பணியில் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது ஒரு புத்திசாலித்தனமான செயலாகும். அரசியல் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அரசு அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. பொருளாதார நிலை சாதகமாக இருந்தாலும் வீண் செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். விவசாயிகள் பயிர் விளைச்சல் நன்றாக இருந்தாலும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் குறையும். பங்காளிகள் மூலமாக வீண் பிரச்சினை வம்பு வழக்குகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் கவனத்தோடு இருப்பது நல்லது. விவசாய பணிகளுக்கு குறித்த நேரத்தில் வேலையாட்கள் கிடைக்காத காரணத்தினால் மன நிம்மதி குறையும். பெண்கள் உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக எடுத்துக் கொள்வார்கள். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, பண உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதை தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கான ஊதியத்தை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். சில வாய்ப்புகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையும் அதன் மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். தொழில் போட்டி காரணமாக சில நேரங்களில் தேவையற்ற இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ மாணவியர் நீங்கள் சரியாக படித்தாலும் ஞாபக மறதி காரணமாக அடைய வேண்டிய மதிப்பெண்களை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தேவையற்ற பொழுதுபோக்குகளையும், வீண் சகவாசத்தையும் குறைத்துக் கொண்டு தற்போது படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

inraiya rasipalan simmam

சனி பெயர்ச்சி ராசி பலன் சிம்மம் - Sani Peyarchi Rasi Palan for simmam in Tamil

மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்

சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வதும் சிறப்பு. சனி தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 4, 9-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும். நெருங்கியவரிடம் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான ஆதாயங்களை அடையக்கூடிய யோகம் இருந்தாலும் கூட்டாளிகளாலும் சக நண்பர்களாலும் சில மனக்கவலைகள் ஏற்படலாம் என்பதால் உடனிருப்பவர்களிடம் பார்த்து பழகுவது நல்லது. எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்றாலும் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய அனுகூலத்தை அடைய முடியும். பணப்பரிமாற்ற விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் உண்டாகும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உடன் வேலை செய்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சனி 7-ல் சஞ்சரிக்கும் இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு பகவான் 22-04-2023 முதல் 01-05-2024 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது உன்னதமான அமைப்பாகும். இக்காலத்தில் பொருளாதார அனுகூலங்களும், சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்பும், அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய ஒரு யோகமும் உண்டாகும். ஒரு சிலருக்கு வீடு வாசல் போன்றவை அமையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் ஏற்படும். சர்ப்ப கிரகமான கேது தற்போது வரும் 30-10-2023 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பது உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். ராகு 9-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பயணங்களில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் உங்கள் தேக ஆரோக்கியத்தில் சற்று சோர்வான நிலை ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்கள் செயலால் உங்களது மனநிலை பாதிக்கப்பட்டு வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பம் பொருளாதார நிலை பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய யோகம் உண்டாகும். வீடு, மனை போன்றவற்றினை புதிதாக வாங்கக்கூடிய யோகம், பொன், பொருள் சேரக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. திருமண சுபகாரியங்கள் சிறு தடைக்கு பிறகு கைகூடும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, உற்றார்- உறவினர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிறப்பான அனுகூலங்களை பெறக்கூடிய யோகம் இருந்தாலும் கணக்கு வழக்கு இல்லாமல் மற்றவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடிய விஷயங்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளையும், இழப்புகளையும் தவிர்க்க முடியும். தொழில் வியாபாரம் தொழில் வியாபாரத்தில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். மறைமுக போட்டிகள் இருந்தாலும் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்வீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக ஆதாயங்களை பெறுவீர்கள். சில விஷயங்களில் வேலையாட்களை எதிர்பார்க்காமல் நீங்களே நேரடியாக செயல்பட்டால் லாபங்களை அடைய முடியும். கூட்டாளிகளிடம் சற்று கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும். உத்தியோகம் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் என்றாலும் உங்களது உடல் ஆரோக்கியம் பணியில் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்காது. உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அரசியல் மக்கள் மத்தியில் உங்கள் பெயர், புகழ், செல்வாக்கு மேலோங்கும். பண வரவுக்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. நண்பர்கள் மூலமாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் பேச்சை குறைப்பது நல்லது. கட்சி பணிக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய ஒரு சூழ்நிலையும் அதன் மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். விவசாயிகள் பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பங்காளிகள் மற்றும் நெருங்கிய இட உரிமையாளரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொண்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. நவீன கருவிகளை வாங்கக்கூடிய அமைப்பும் அதற்காக கடன் வாங்க கூடிய நிலையும் உண்டாகும். பெண்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். நவீன ஆடைகளையும், ஆபரணங்களையும் வாங்கும் யோகம் உண்டு. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது, சில நேரங்களில் முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நல்லது நடக்கக்கூடிய யோகம் இருந்தாலும் உற்றார் உறவினர்களின் செயல்களால் சில இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். கலைஞர்கள் உங்களுக்கு ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நல்ல கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் அலைச்சல் காரணமாக ஓய்வு நேரம் குறைய கூடிய நிலையில் உடல் உபாதைகளும் உண்டாக்கலாம். நேரத்திற்கு சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. சக நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். மாணவ மாணவியர் படிப்பில் கவனமாக செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முடிந்தவரை தேவையற்ற பழக்க வழக்கங்களையும், தவறான நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. பெற்றோரிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருந்தால் நல்ல பெயர் எடுக்க முடியும். உயர் படிப்பிற்காக மேற் கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும்.

inraiya rasipalan kanni

சனி பெயர்ச்சி ராசி பலன் கன்னி - Sani Peyarchi Rasi Palan for kanni in Tamil

உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமும் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு சகல விதத்திலும் ஏற்ற மிகுந்த பலன்கள் நடக்கும். நீண்ட நாளைய கனவுகள் தற்போது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அனைத்து செயலிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் சிறப்பான நிலை ஏற்பட்டு உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீராத வம்பு, வழக்குகளில் கூட உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். புதிய வீடு, மனை வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் வரும் நாட்களில் பூர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்க கூடிய அமைப்பு, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பண பரிமாற்ற விஷயங்களில் அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஆதாயங்களை அடைவீர்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளையும், உதவிகளையும் பெற முடியும். தொழில் அபிவிருத்திக்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தகுதி வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருவது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு ஏற்படும். வெளியூர் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். சனி 6-ல் சஞ்சரிக்கக்கூடிய இந்த தருணத்தில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு வரும் 22-04-2023 வரை 7-ஆம் வீட்டிலும், 01-05-2024 முதல் 14-05-2025 வரை பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய உள்ளது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பு என்பதால் இக்காலங்களில் உங்களின் பொருளாதார நிலை மேலும் சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும், குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும். இந்த தருணத்தில் சர்ப்ப கிரகமான ராகு, கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் குறிப்பாக வரும் 30-10-2023 வரை 2-ல் கேது, 8-ல் ராகுவும் அதன் பின்பு வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகுவும் சஞ்சரிப்பது நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடு ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பதும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது.   உடல் ஆரோக்கியம் உங்களது உடல்நிலை மிகச் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகளும் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். குடும்பம் பொருளாதார நிலை பொருளாதார ரீதியாக தாராள தன வரவுகள் ஏற்பட்டு எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகளை தற்போது குறைத்துக் கொள்ள முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்ற முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் பண பரிமாற்ற விஷயங்களில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பகை பாக்கிகள் தற்போது கிடைத்து கடன்கள் குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அதிக லாபத்தை ஈட்ட முடியும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெற முடியும். வெளியூர், வெளி மாநில தொடர்புகள் மூலமாக ஒரு மிகப்பெரிய அனுகூலத்தை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் உங்களுக்கு கடந்த கால மனக்கவலைகள் எல்லாம் விலகி பல்வேறு வளமான பலன்களை பெரும் நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகி சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். வேலை ஆட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். வெளி நபர்களால் இருந்த தொந்தரவுகள் எல்லாம் தற்போது முழுமையாக விலகும். உத்தியோகம் உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவியை அடையக்கூடிய யோகம், விரும்பிய இடமாற்றத்தை அடையும் வாய்ப்பு ஏற்படும். புதிய வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி பணியில் ஒரு சுமூகமான நிலையும், மன நிம்மதியுடன் பணி புரியக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். அரசியல் நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக குறைந்து, இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தலைவர்களுடைய ஆதரவு உங்களுக்கு இருப்பதால் மக்கள் மத்தியில் உங்களின் பெயர், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் செயல்களை குறித்த நேரத்தில் எளிதில் செய்து முடிக்க முடியும். விவசாயிகள் பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். சந்தையில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கி விவசாயத்தில் புதிய உக்தியை கையாள்வீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பு கிட்டும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கடந்த கால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய கடன் தொல்லைகள் எல்லாம் விலகி சுபிட்சமான நிலை உண்டாகும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கலைஞர்கள் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து உங்கள் திறமைகளை வெளிக்காட்ட முடியும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் தற்போது சிறப்பான ஒரு விடிவு காலம் கிடைக்கும். போட்டி, பொறாமைகள் விலகி நீங்கள் ஒரு நல்ல நிலையை அடையும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவ மாணவியர் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு அதிக மதிப்பெண்களை பெறக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. போட்டி தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லும் யோகம் உண்டு. பெற்றோர் ஆசிரியர் ஆதரவு சிறப்பாக இருக்கும். உயர்கல்வியில் நீங்கள் எதிர்பார்த்த கல்வி வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

inraiya rasipalan thulam

சனி பெயர்ச்சி ராசி பலன் துலாம் - Sani Peyarchi Rasi Palan for thulam in Tamil

சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோண ஸ்தானமான 4, 5-க்கு அதிபதியான சனி இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தினார். திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் மறைந்து சுபிட்சமான நிலை உண்டாகும். வேலைபளு குறைந்து எதிலும் மனநிம்மதியுடன் செயல்பட முடியும். கடந்த கால மருத்துவ பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நல்ல முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் பொருள் தேக்கங்கள் விலகி போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்ய முடியும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைவது மட்டுமில்லாமல் நீங்கள் எடுக்கும் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து நல்ல பெயர் எடுக்க முடியும். சக ஊழியருடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் பங்காளியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் பிள்ளைகள் விஷயத்தில் பக்குவமாக நடப்பது உத்தமம். சனி 5-ல் சஞ்சரிக்கும் இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குரு 22-04-2023 முதல் 01-05-2024 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலத்தில் பொருளாதார அனுகூலங்கள், மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி, அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய யோகம் ஏற்படும். தற்போது ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகுவும் வரும் 30-10-2023 வரை சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள், வெளியூர் மூலமாக அனுகூலங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும்.   உடல் ஆரோக்கியம் உங்களுக்கு இருந்த அலைச்சல்கள் எல்லாம் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீண் மருத்துவ செலவுகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலமாக பொருளாதார ஆதாயங்களை பெறுவீர்கள். உணவு விஷயத்தில் கவனத்தோடு இருந்தால் ஏற்படும் சிறுசிறு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை சமாளிக்க முடியும். குடும்பம் பொருளாதார நிலை உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். பங்காளி வகையில் தேவையற்ற கவலைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிறப்பான அனுகூலங்களை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பெரிய முதலீடு ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடைய முடியும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகள் தற்போது வந்தடைந்து கடன்கள் குறையும். தொழில் வியாபாரம் தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் விலகி நல்ல முன்னேற்றத்தையும் போட்ட முதலீட்டை எடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். அதிநவீன கருவிகளை வாங்கி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களால் இருந்த தொந்தரவுகள் எல்லாம் முழுமையாக மறைந்து உங்களுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கூட்டாளிகள் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகம் உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் விலகி உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை பெறுவது மட்டுமில்லாமல் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைத்து உங்களின் பொருளாதார நெருக்கடிகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் புதிய ஆட்கள் அமைந்து சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வதால் உங்களின் பணிச்சுமை குறையும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமைந்து மன மகிழ்ச்சி உண்டாகும். அரசியல் உங்களது பெயர், புகழ் மேலோங்கும் நேரமாகும். வெளியூர் நபர்கள் மூலமாக மன மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். உங்களுடைய செயல்களால் மக்களிடம் உங்கள் மீதிருந்த அவப்பெயர்கள் எல்லாம் விலகி உங்களது செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் குறைந்து மன நிம்மதி உண்டாகும். விவசாயிகள் பயிர் விளைச்சல் நன்றாக இருந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பண வரவுகள் மிகச் சிறப்பாக இருந்து உங்களது கஷ்டங்கள் எல்லாம் குறையும். நவீன கருவிகளையும், கால்நடைகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பங்காளியிடம் மட்டும் குறிப்பாக பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு பொறுமையோடு நடப்பது நல்லது. பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க கூடிய அமைப்பு, உறவினர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய யோகம் உண்டாகும். ஆடை, அணிகலன்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டு. மங்களகரமான சுப காரியங்கள் கைக்கூடும். இயற்கை உணவுகளை உட்கொள்வதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் உங்களை நாடி வரும். உங்களது பணிக்காக வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு அதன் மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். சின்னத்திரை கலைஞர்கள், இசைத்துறையில் இருப்பவர்களுக்கு உங்கள் கனவுகள் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு சொகுசு வாகனங்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். மாணவ மாணவியர் கல்வியில் நல்ல நிலை, நல்ல மதிப்பெண் எடுக்கக் கூடிய வாய்ப்பு, போட்டி தேர்வுகளில் சாதிக்கக்கூடிய ஒரு யோகம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் மேற்படிப்பு விஷயங்களில் அனுகூலங்களை பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க முடியும்.

inraiya rasipalan viruchigam

சனி பெயர்ச்சி ராசி பலன் விருச்சிகம் - Sani Peyarchi Rasi Palan for viruchigam in Tamil

விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

செவ்வாயின் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலே எதிலும் துணிவோடு செயல்படக்கூடிய குணம் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்க இருப்பதால் அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறையும் நிலை, உடல் அசதி ஏற்படும். அசையும், அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். உங்களது உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறருடைய உதவி எதிர்பார்க்காமல் எதிலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால்தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பண பரிமாற்ற விஷயங்களில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் குறையும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளும், பொருளாதார நிலை சிறப்பாக இருக்கக்கூடிய நிலை இருக்கும் என்றாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். மற்றவர்களுடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படலாம். ஒரு சிலருக்கு ஏற்படும் இடமாற்றங்களால் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு வேறு இடங்களில் தங்க வேண்டிய நிலை உண்டாகும். வரும் நாட்களில் அர்த்தாஷ்டமச் சனி நடைபெற இருப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இக்காலங்களில் 22-04-2023 முடிய குரு பஞ்சம ஸ்தானமான 5-லும், 01-05-2024 முதல் 14-05-2025 வரை சமசப்தம ஸ்தானமான 7-லும் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்களுக்கு மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் சிறப்பான பொருளாதார நிலை, திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். இந்த தருணத்தில் வரும் 30-10-2023 முடிய ராகு 6-லும் அதன் பின்னர் வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை கேது 11-லும் சஞ்சாரம் செய்ய உள்ள அமைப்பானது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம், எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள், உற்றார் உறவினரின் ஆதரவால் உங்களின் தேவைகள் பூர்த்தியாக கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும்.   உடல் ஆரோக்கியம் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள் என்றாலும் அலைச்சல் காரணமாக உடல் அசதி, சோர்வு உண்டாகும். உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். தேவையில்லாத பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. குடும்பம் பொருளாதார நிலை குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. மற்றவரிடம் பேசுகின்ற பொழுது சிந்தித்துப் பேசுவது உத்தமம். சுபகாரிய முயற்சிகள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். அசையும், அசையா சொத்துக்காகவும் சுபகாரியத்திற்காகவும் ஏற்படும் செலவுகள் காரணமாக உங்கள் கையிருப்பு குறையும் நிலை, கடன் வாங்கும் நிலை உண்டாகும். ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். பெரிய தொகைகளை கையாளுகின்ற பொழுது கவனத்தோடு ஈடுபடுவது நல்லது. உடனிருப்பவர்கள் செய்யும் செயல்களால் மன உளைச்சல் ஏற்படும் என்றாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கணக்கு வழக்கு இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்வதினை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் மறைமுக போட்டிகளும், எதிர்ப்புகளும் அதிகரிப்பதால் அடைய வேண்டிய லாபங்களில் சிறிது சுணக்கம் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அதன் காரணமாக உங்களின் ஓய்வு நேரம் குறையும் நிலை, உடல் அசதி ஏற்படும். உத்தியோகம் பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலை பளு அதிகப்படியாக இருக்கும். உடன் வேலை செய்பவருடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நிலை உண்டாகும். எடுக்கும் பணிகளில் திறன் பட செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையும் அதன் காரணமாக உடல் அசதியும் ஏற்படும். அரசியல் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். பேச்சில் பொறுமையோடு இருப்பது, பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தலைவர்களின் ஆதரவு கிடைத்தாலும் தேவையற்ற நெருக்கடிகளால் மன நிம்மதி குறையும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் பயிர் விளைச்சல் சாதகமாக இருந்தாலும் அதற்கான விலை சந்தையில் கிடைப்பதில் சிறிது தடைகள் ஏற்படும். போட்ட முதலீட்டை எடுக்க சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். புழு, பூச்சிகளின் தொந்தரவு காரணமாக பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத காரணத்தினால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. பெண்கள் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலைச்சல் காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். வீடு, வாகனங்களை பராமரிப்பது காரணமாக செலவுகள் அதிகரிக்கும். வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். கலைஞர்கள் உங்களுக்கு வரும் நாட்களில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளில் இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கையில் இருக்கும் வாய்ப்புகளை நழுவி விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் அதிகம் உழைத்தால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதில் இழுபறி நிலை ஏற்படும். ரசிகர்களின் ஆதரவு சாதகமாக இருக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். மாணவ மாணவியர் தேவையற்ற பொழுதுபோக்கையும், வீண் நட்புகளையும் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர் பெற்றோர் சொல்படி நடந்து கொண்டால் நல்ல பெயர் எடுக்க முடியும். போட்டி தேர்வுகளில் பங்கேற்கின்ற பொழுது முழு ஈடுபாட்டுடன் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

inraiya rasipalan thanus

சனி பெயர்ச்சி ராசி பலன் தனுசு - Sani Peyarchi Rasi Palan for thanus in Tamil

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் 

குரு பகவானின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள் வரை ஏழரைச் சனி நடைபெற்று வந்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். தற்போது ஏற்படக்கூடிய சனிப்பெயர்ச்சியால் திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) சனி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க உள்ளதால் ஏழரைச் சனி முழுவதுமாக முடிவடைவதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களை பெற்று உங்களுக்கு இருந்த கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும் அமைப்பும், சிறப்பான குழந்தை பாக்கியமும் ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் வரும் நாட்களில் மறையும். நீங்கள் கடந்த காலங்களில் சந்தித்த அவமானங்கள் எல்லாம் மாறி ஒரு கௌரவமான நிலையினை வரும் நாட்களில் அடைவீர்கள். சிலருக்கு வீடு, வாசல், பூமி, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில், உத்தியோக ரீதியாக கடந்த கால பொருள் தேக்கங்கள் விலகி உங்களது பொருட்களுக்கு நல்ல வேலை கிடைப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தை அடைய முடியும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் உங்களின் கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த வேலைப்பளு எல்லாம் குறைந்து பதவி உயர்வினை அடையும் யோகம், உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு நல்ல வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வரும் நாட்களில் ஒரு உயர்வான இடத்தில் இருந்து அழைப்பு வரும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் தற்போது விலகி மகிழ்ச்சியும் மனநிம்மதியும் ஏற்படும். சக ஊழியர்களும், அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சனி 3-ல் சஞ்சரிக்கும் இந்த தருணத்தில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் வரும் 22-04-2023 முதல் 01-05-2024 வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் மேலும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கக் கூடிய யோகம், பொருளாதார ரீதியாக ஒரு உயர்வான நிலையினை எட்டும் வாய்ப்பு ஏற்படும். வரும் 30-10-2023 வரை சர்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பது உங்களுக்கு சாதகமான அமைப்பு ஆகும். ராகு 5-ல் சஞ்சரித்தாலும் சனியின் சாதக சஞ்சாரத்தால் நீங்கள் வாழ்வில் ஒரு உயர்வான நிலையை வரும் நாட்களில் எட்ட முடியும்.   உடல் ஆரோக்கியம் உங்களது ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். கடந்த கால உடம்பு பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். குடும்பம் பொருளாதார நிலை கடந்த கால பண பற்றாக்குறை எல்லாம் விலகி தாராள தன வரவுகள் உண்டாகி உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் சேமிக்கும் அளவிற்கு பணப்புழக்கம் அமைவது மட்டுமில்லாமல் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத வம்பு, வழக்குகளுக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகும். கொடுக்கல்- வாங்கல் உங்களுக்கு இருந்த பொருளாதார பிரச்சினைகள் விலகுவது மட்டுமில்லாமல் கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கடந்த காலங்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் ஒரு தேக்க நிலை இருந்திருக்கும். தற்போது அந்த தேக்க நிலை எல்லாம் விலகி எதிலும் தைரியத்தோடு அதிக முதலீடுகள் செய்து அதில் லாபம் காண முடியும். மற்றவர்களுக்கு கொடுத்த பணம் எல்லாம் கூட தற்போது திரும்பி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில் வியாபாரம் தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்களது பொருட்களுக்கு அதிகப்படியான விலை கிடைப்பதால் நல்ல லாபத்தை அடைய முடியும். தொழில் ரீதியாக கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை தற்போது பெற்று எதிலும் துணிவோடு செயல்பட முடியும். உத்தியோகம் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட அவமானங்கள் எல்லாம் விலகி பணிபுரியும் இடத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை தற்போது பெறுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த கடன் தொல்லைகள் எல்லாம் தற்போது குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையும் யோகம், விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு வரும் நாட்களில் உண்டு. உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் விலகக் கூடிய ஒரு சூழலும், உயர் அதிகாரியிடம் சுமூகமான நிலையும் ஏற்படும். அரசியல் கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து நல்ல நிலையினை நீங்கள் அடைவீர்கள். கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும். மக்கள் மத்தியில் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி மன நிம்மதி ஏற்படும். பெருந் தலைவருடைய ஆதரவு கிடைப்பதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். விவசாயிகள் பயிர் விளைச்சல் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் சந்தையில் நல்ல விலை கிடைத்து அதிகப்படியான லாபங்களை பெறுவீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட நவீன யுக்திகளுக்கு தற்போது நற்பலன் கிடைக்கும். பங்காளியிகள் மற்றும் அயல் நில உரிமையாளர்களிடம் இருந்து வந்த வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். புதிய விலை நிலங்களை வாங்கக்கூடிய யோகம் உண்டு. பெண்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கடந்த கால பொருளாதார நெருக்கடிகள் விலகுவதால் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பங்களும் கிடைக்கும். கலைஞர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படும். நல்ல கதாபாத்திரம் கிடைத்து உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். வெளியூர் செல்லும் யோகம் ஏற்படும். மாணவ மாணவியர் படிப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். கடந்த கால உடல் சோர்வுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

inraiya rasipalan makaram

சனி பெயர்ச்சி ராசி பலன் மகரம் - Sani Peyarchi Rasi Palan for makaram in Tamil

உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்

நவகிரகங்களில் சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கு ராசியாதிபதி சனி இதுநாள் வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெற்றதால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளானீர்கள். தற்போது ஏற்படக்கூடிய சனி மாற்றத்தின் மூலம் திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) சனி உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் ஏழரைச் சனியின் ஜென்மச் சனி முடிந்து பாதச் சனி தொடங்குகிறது. சனி மாற்றத்தின் மூலமாக ஏழரைச்சனியில் முதல் ஐந்து வருடங்கள் முடிகிறது. இயற்கையிலேயே சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் உங்களுக்கு அதிக கெடுதிகளை தர மாட்டார். இதுநாள் வரை உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து எதிலும் தைரியத்தோடு செயல்படக் கூடிய அமைப்பு, சுறுசுறுப்புடன் அனைத்து காரியங்களிலும் செயல்படக்கூடிய பலம் ஏற்படும். கடந்த காலங்களில் இருந்து வந்த நெருக்கடிகள் மறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார ரீதியாக பண வரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பண பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சனி 2-ல் சஞ்சரித்து இருப்பதால் யோசித்துப் பேசுவது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குறிப்பாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபார ரீதியாக படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் யோசித்து செயல்படுவது, கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவது நன்மையை தரும். சில நேரங்களில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கக் கூடிய பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் பணி சுமை சற்று கூடுதலாக இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் சரியாக ஒத்தழைக்காத காரணத்தினால் அனைத்து வேலையும் உங்கள் தலையில் விழும். சில நேரங்களில் உங்களுக்கு ஓய்வு நேரம் குறையும். பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் கவனத்தோடு செயல்பட்டால் ஒரு உயர்வான நிலையை அடைய முடியும். உங்கள் உழைப்புக்கான சன்மானத்தை பெற சிறு சிறு இடையூறுகள் நிலவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும தகுதிக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும். கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. சனி 2-ல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 01—–05-2014 முதல் 14-05-2025 வரை பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். உங்களுக்குள்ள அனைத்து விதமான நெருக்கடிகளும் குறைந்து பல்வேறு வளமான பலன்களை பெறக்கூடிய யோகம் உண்டு. தற்போது 4, 10-ல் சஞ்சரிக்க கூடிய சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகளை ஏற்படுத்தினாலும் வரும் 30-10-2023 முதல் 18-05-2025 வரை ராகு 3-ல், கேது 9-ல் சஞ்சரிக்க உள்ளதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினைகள் குறையும் அமைப்பு, எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும்.   உடல் ஆரோக்கியம் உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மனைவி மற்றும் பிள்ளைகள் வழியில் வீண் மருத்துவ செலவுகள், தேவையற்ற மனக்கவலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது நல்ல முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் காரணமாக உடல் அசதி இருக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். குடும்பம் பொருளாதார நிலை நீங்கள் பேச்சில் நிதானத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முடியும். பண வரவுகள் சாதகமாக இருப்பதால் உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. சுப காரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பிறகு நல்லது நடக்கும். கொடுக்கல்- வாங்கல் பண பரிமாற்ற விஷயங்களில் முன்பிருந்த நெருக்கடிகள் சற்று குறைந்து படிப்படியான வளர்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துகின்ற பொழுது கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொழில் வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றத்தை அடையும் வாய்ப்பு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் அனைத்து செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க நேரிடும். வெளி நபர்கள் மூலம் தொழிலில் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நன்மையை தரும். கால நேரம் பார்க்காமல் கடினமாக உழைத்தால் உயர்வான நிலையை எட்ட முடியும். உத்தியோகம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீது இருந்த வீண் பழிச்சொற்கள் விலகி நல்ல பெயர் எடுக்க முடியும். எதிர்பார்க்கின்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு கூடுதலாகும் என்ற காரணத்தினால் உங்களது ஓய்வு நேரம் குறையும். ஒரு சிலருக்கு ஏற்படக்கூடிய இடம் மாற்றத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று வெளியூர், வெளி மாநிலங்களில் பணிபுரிய நேரிடும். அரசியல் உங்களுக்குள்ள கடந்த கால சோதனைகள் சற்று குறையும் என்றாலும் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதையும் யோசித்துப் பேசுவது, முடிந்தவரை விவாதங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதில் ஒரு சில இடையூறுகள் ஏற்படும். தலைவர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவசாயிகள் பயிர் விளைச்சல் சாதகமாக இருந்தாலும் சந்தையில் நல்ல விலை கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். பராமரிப்பு செலவு அதிகரிப்பதால் போட்ட முதலீட்டை எடுக்க அரும்பாடு பட வேண்டி இருக்கும். கூலி ஆட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொருளாதார ரீதியாக ஒரு சில அனுகூலங்கள் ஏற்பட்டு கடந்த கால கடன் பிரச்சினைகள் குறையும். பங்காளியிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. பெண்கள் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் மனக்கவலையை தரும். சுப காரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பிறகு நல்லது நடக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தற்போதைக்கு தவிர்க்கவும். கலைஞர்கள் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் தொழில் போட்டி காரணமாக ஒரு சில தேவையற்ற இடையூறுகளை சந்திப்பீர்கள். பணவரவுகள் சாதகமாக இருக்கும். பட வாய்ப்பு காரணமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாக கூடிய நேரமாகும். மாணவ மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் மற்றவரிடம் பழகுகின்ற பொழுது கவனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்கள் சொல்படி கேட்டு நடந்து கொள்வதும், வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.

inraiya rasipalan kumbam

சனி பெயர்ச்சி ராசி பலன் கும்பம் - Sani Peyarchi Rasi Palan for kumbam in Tamil

அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கு இதுநாள் வரை 12-ல் சஞ்சரித்த சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது. ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடக்க இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்தோடு மிகவும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுவது, தகுந்த இடைவேளையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கொள்வது நல்லது. நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் பொறுப்புகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து தருவது தற்போதைக்கு நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு இருப்பது வீண் பிரச்சினைகளை தவிர்க்க உதவும். தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்காது. தொழில் ரீதியாக அதிக முதலீடுகள் செய்யாமல், இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். பொதுவாக தொழில் அபிவிருத்திகளை தற்போதைய நேரத்திற்கு தவிர்ப்பது உத்தமம். அப்படி அவசியம் என்றால் உங்கள் பெயரில் செய்யாமல் மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் செய்வது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் நல்லது. அரசு வழியில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் உங்களது ஓய்வு நேரம் குறையும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் உண்டாகும். பெரிய வாய்ப்பு எதிர்பார்க்காமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. மேலதிகாரியிடம் பேசுகின்ற பொழுதும் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் நிதானத்தோடு இருப்பது உத்தமம். மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். வம்பு, வழக்குகளில் மிகவும் நிதானத்தோடு கையாள்வது நல்லது. ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் வரும் 22-04-2023 வரை 2-ல் சஞ்சரிக்கக்கூடிய காலம் மட்டுமே உங்களுக்கு சாதகமான நேரமாகும். ஜென்மச்சனி நடக்கும் இக்காலத்தில் ஏப்ரல் 2023-க்கு பிறகு குரு 3, 4-ஆம் வீடுகளில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் உடனிருப்பவர்களே சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் முயற்சியால் நல்லது நடக்கும். சர்ப்ப கிரகமான ராகு வரும் 30-10-2023 வரை 3-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான அமைப்பாகும். இதன் காரணமாக ஒரு சில விஷயங்களில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். அக்டோபர் 2023-க்கு பிறகு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்று.   உடல் ஆரோக்கியம் உங்களது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தர வேண்டும். அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரண கோளாறுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. முன் கோபத்தை குறைத்துக் கொள்வதும், எதிலும் பொறுமையோடு செயல்படுவதும் நல்லது. குடும்பம் பொருளாதார நிலை கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, எந்த ஒரு செயலிலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்களால் மன நிம்மதி குறையும். பொருளாதார நெருக்கடிகள், சக்திக்கு மீறிய செலவுகளால் உங்களின் கையிருப்பு குறையக்கூடிய நிலை ஏற்படும். பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும். கடன்கள் அதிகரிக்க கூடிய நேரம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிறு தடைக்கு பிறகு சுப காரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பிறருக்கு நீங்கள் கொடுத்த பணத்தை வாங்குவதில் தேவையற்ற சுணக்கங்களும், வீண் மனஸ்தாபங்களும் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டிய நேரமாகும். அதிக தொகையை கையாளுகின்ற பொழுது மிகவும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள் என்றாலும் அதிகப்படியான போட்டிகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். சந்தை சூழ்நிலை சாதகமற்று இருப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. வேலையாட்கள் ஒரு புறம் வீண் பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். நீங்கள் செய்யும் பணிகளில் கவனத்தோடு இல்லாவிட்டால் தேவையற்ற சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உத்தியோகம் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அதிகப்படியான அலைச்சல், மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். பொறுப்புகள் அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலை அதனால் ஓய்வு நேரம் குறைய கூடிய சூழ்நிலை ஏற்படும். உங்கள் உடல் உபாதைகளால் பணியில் சரிவர கவனம் செலுத்த முடியாத நிலை, அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் பிறர் சொல்வதைக் கேட்காமல் முடிந்தவரை பணியில் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல் உங்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளால் மக்கள் மத்தியில் நீங்கள் தேவையற்ற அவப்பெயர்களை எதிர்கொள்ள நேரிடும். மக்களின் ஆதரவை பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் ஆகும். கட்சி பணிகளுக்காக வீண் செலவுகள் ஏற்படும். அரசு அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. விவசாயிகள் பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது. போதிய நீர் இல்லாமலும் வேலையாட்கள் தரும் பிரச்சினையாலும் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் நீங்களே நேரடியாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். பங்காளியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்களுடைய அத்தியாவசிய செலவுக்காக கடன் வாங்கக் கூடிய நிலை உண்டாகும். கால்நடைகள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படும். பெண்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்று. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். பிள்ளைகள் வழியில் மனக்கவலைகள் உண்டாகும். அசையும், அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படும். சிலருக்கு கடன்கள் அதிகரிக்கும். கலைஞர்கள் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள முடியும். போட்டிகள் காரணமாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கூட கடைசி நேரத்தில் தடைப்படும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையும் அதன் மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். மற்றவரிடம் பேசுகின்ற போது நிதானத்தோடு இருப்பதும், கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் இருப்பதும் நல்லது. மாணவ மாணவியர் கல்வியில் மந்த நிலை ஏற்பட்டு நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் அடைவதில் தடைகள் உண்டாகும். வீண் சகவாசத்தை குறைத்துக் கொண்டு ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே அனுகூலமான பலன்களை அடைய முடியும். பெற்றோர், ஆசிரியரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நல்லது.

inraiya rasipalan meenam

சனி பெயர்ச்சி ராசி பலன் மீனம் - Sani Peyarchi Rasi Palan for meenam in Tamil

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

நவகிரகங்களில் பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருவீன் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரித்தார். தற்போது ஏற்படும் சனி மாற்றத்தின் மூலம் திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முதல் 29-03-2025 வரை (வாக்கியப்படி 29-03-2023 முதல் 06-03-2026 வரை) விரய ஸ்தானமான 12-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். சனி 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் விரையச்சனி தொடங்குவதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். கடினமாக உழைத்தால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். எதிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அனைத்தையும் சமாளிக்க முடியும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் காரணமாக உங்கள் கையிருப்பு குறையும். பண விஷயத்தில் மிக மிக சிக்கனமாக இருக்க வேண்டிய நேரமாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மந்த நிலை, அலைச்சல் காரணமாக உடல் அசதி, அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட இடையூறுகள் உண்டாகும். கடினமான வேலைபளு காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய ஒரு ஆற்றல் உண்டாகும். பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதாலும் வேலையாட்களுடைய தொந்தரவுகள் காரணமாகவும் உங்களுக்கு லாபங்கள் குறையும். தொழிலை அபிவிருத்தி செய்யும் விஷயங்களில் கவனத்தோடு கையாள்வது நல்லது. முடிந்தவரை அதிக முதலீடுகளை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் என்றால் அதாவது முதலீடு செய்ய வேண்டிய ஒரு அவசரம் என்றால் அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. பொதுவாக பொறுப்புகளை பகிர்ந்து அளித்தால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதால் அவர்களுடைய பணியையும் சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். உங்களுடைய பணியில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் யார் என்ன செய்தாலும் உங்களை யாராலும் அசைக்க முடியாது. வெளியாட்கள் பேச்சைக் கேட்காமல் அதிகாரிகளுடைய சொல்படி நடந்து கொண்டால் நல்ல வாய்ப்புகளை பெற முடியும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சன்மானங்கள் தக்க நேரத்தில் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கான ஊதியத்தை கண்டிப்பாக அடைவீர்கள். சனி 12-ல் சஞ்சரிக்க கூடிய இக்காலத்தில் ராசியாதிபதி குரு பகவான் வரும் 22-04-2023 முதல் 01-05-2024 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களின் பொருளாதார நிலையானது மிக மிக நன்றாக இருந்து அனைத்து விதமான நெருக்கடிகளும் குறையும். மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, தொழில், உத்தியோக ரீதியாக அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். வரும் அக்டோபர் 2023 முடிய 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதும் அதன் பிறகு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஆகும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.   உடல் ஆரோக்கியம் உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டு உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும். தேவையற்ற வகையில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தருவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். குடும்பம் பொருளாதார நிலை பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண பரிமாற்ற விஷயங்களில் பண வரவுகள் நன்றாக இருந்தாலும் வீண் செலவுகளால் மன நிம்மதி குறைவு ஏற்படும். எதிர்பாராத சுபச்செலவுகள் காரணமாக உங்களுக்கு கடன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கவும். கொடுக்கல்- வாங்கல் பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஒரு விஷயத்தில் முதலீடு செய்கின்ற பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். நம்பிக்கை கூறிய நபர்களே தக்க நேரத்தில் பணத்தை தராமல் தாமதப்படுத்துவார்கள். எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும் என்றாலும் வீண் வம்பு, வழக்குகளால் மன நிம்மதி குறைவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொழில் வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள் என்றாலும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் குறையும். எந்திரங்கள் பழுதாவதால் எதிர்பாராத வகையில் செலவுகளை எதிர்கொள்வீர்கள். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது சிந்தித்து செயல்படுவது, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. கூட்டாளிகள் ஆதரவால் ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறன்பட செயல்பட்டு நல்ல பெயரை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். ஆரோக்கிய குறைபாட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு தடங்கல்கள் உண்டாகும். சில நேரங்களில் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் சிறு வாய்ப்பையும் தவற விடாமல், கிடைக்கும் வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. அரசியல் உங்களுக்கு சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலை உண்டாகக்கூடிய நேரமாகும். மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நீங்கள் அதிகப்படியாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் யோசித்து செயல்படுவது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசு அதிகாரிகளுடைய ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. வெளியூர் பயணங்களால் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். விவசாயிகள் பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு இருந்தாலும் அதற்கான விலை சந்தையில் கிடைக்காது. கூலி ஆட்களுடைய ஒத்துழைப்பு சரியில்லாத காரணத்தால் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக சில பணிகளை செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். பங்காளிகள் மற்றும் அயல் நில உரிமையாளர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் கவனத்தோடு செயல்படுவது நல்லது. பெண்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் மன அமைதி குறையும். கணவன்- மனைவியிடையே பேச்சில் சற்று கவனத்தோடு இருப்பது, வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது உத்தமம். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகமும் அதன் மூலம் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். கலைஞர்கள் உங்கள் திறமைக்கேற்ற சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்புக்கான பலனை அடைவதில் தேவையற்ற தடங்கல்கள் இருக்கும். போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தாமதப்படும். வெளியூர், வெளிநாடுகள் செல்லக்கூடிய யோகம் உண்டு. வீண் செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். சிக்கனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவியர் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் தருவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. போட்டி தேர்வுகளில் பங்கு பெறுகின்ற பொழுது சற்று கவனத்தோடு இருக்கவும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம்.

Click the links to get சனி பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore