Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

மாத ராசி பலன் மேஷம் - Monthly Rasi Palan for mesam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் சனி, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலில் தொழிலாளர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். பைரவரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் – 12-06-2022 மாலை 06.33 மணி முதல் 14-06-2022 மாலை 06.32 மணி வரை.

மாத ராசி பலன் ரிஷபம் - Monthly Rasi Palan for rishbam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம் – 14-06-2022 மாலை 06.32 மணி முதல் 16-06-2022 மாலை 05.55 மணி வரை.

மாத ராசி பலன் மிதுனம் - Monthly Rasi Palan for mithunam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு 11-ல் ராகு, 10, 11-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பணவரவுகள் ஒரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் சூரியன் மாத முற்பாதியில் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சிவனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 16-06-2022 மாலை 05.55 மணி முதல் 18-06-2022 மாலை 06.42 மணி வரை.

மாத ராசி பலன் கடகம் - Monthly Rasi Palan for kadagam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும். வீண் செலவுகள் குறையும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 18-06-2022 மாலை 06.42 மணி முதல் 20-06-2022 இரவு 10.35 மணி வரை.

மாத ராசி பலன் சிம்மம் - Monthly Rasi Palan for simmam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு 9, 10-ல் சுக்கிரன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் பல்வேறு வகையில் வளமான பலன்களை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆன்மீக, பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 20-06-2022 இரவு 10.35 மணி முதல் 23-06-2022 காலை 06.15 மணி வரை.

மாத ராசி பலன் கன்னி - Monthly Rasi Palan for kanni in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பெரிய தொகைகளை சிறப்பாக கையாண்டு லாபங்களை அடையும் யோகம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து உங்களின் நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்படலாம். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 23-06-2022 காலை 06.15 மணி முதல் 25-06-2022 மாலை 05.02 மணி வரை.

மாத ராசி பலன் துலாம் - Monthly Rasi Palan for thulam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் நற்பலனை அடைய எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கடன்கள் சற்று குறையும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் வேலைபளுவை குறைத்து கொள்ள முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்து நல்லது.
சந்திராஷ்டமம் – 25-06-2022 மாலை 05.02 மணி முதல் 28-06-2022 அதிகாலை 05.32 மணி வரை.

மாத ராசி பலன் விருச்சிகம் - Monthly Rasi Palan for viruchigam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 28-06-2022 அதிகாலை 05.32 மணி முதல் 30-06-2022 மாலை 06.23 மணி வரை.

மாத ராசி பலன் தனுசு - Monthly Rasi Palan for thanus in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, மாத முற்பாதியில் 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். விஷ்ணுவை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 03-06-2022 பகல் 12.20 மணி முதல் 05-06-2022 இரவு 12.24 மணி வரை மற்றும் 30-06-2022 மாலை 06.23 மணி முதல் 03-07-2022 காலை 06.30 மணி வரை.

மாத ராசி பலன் மகரம் - Monthly Rasi Palan for makaram in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 4, 5-ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலப் பலன் கிடைக்கும். குரு 3-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் குறையும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 05-06-2022 இரவு 12.24 மணி முதல் 08-06-2022 காலை 10.03 மணி வரை.

மாத ராசி பலன் கும்பம் - Monthly Rasi Palan for kumbam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். பண வரவுகள் நன்றாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும் சக ஊழியர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 08-06-2022 காலை 10.03 மணி முதல் 10-06-2022 மாலை 04.06 மணி வரை.

மாத ராசி பலன் மீனம் - Monthly Rasi Palan for meenam in Tamil
June Month Rasi Palan 2022 in Tamil
உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். பேச்சில் கவனமாக இருந்தால் கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் இருந்தாலும் கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வதால் எதையும் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு இருந்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 10-06-2022 மாலை 04.06 மணி முதல் 12-06-2022 மாலை 06.33 மணி வரை.
Click the links to get மாத ராசி பலன் for mesam rishbam mithunam kadagam simmam kanni thulam viruchigam thanus makaram kumbam meenam rasi palan