Guru Peyarchi Rasi Palan in Tamil – குரு பெயர்ச்சி ராசி பலன் நாள் -2023 - 2024

On 2023-04-21 7:20:10

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan mesam

குரு பெயர்ச்சி ராசி பலன் மேஷம் - Guru Peyarchi Rasi Palan for mesam in Tamil

நாள் -2023 - 2024

மேஷம் ராசிக்காரர்களே (Guru peyarchi palangal for mesha rasi)

தன்னிடத்தில் அன்பும், பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே,          இது நாள் வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரித்த பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த கால வீண் செலவுகள் குறைந்து சேமிக்க கூடிய அளவிற்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 5, 7, 9 ஆகிய வீடுகளை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீக சொத்து வகையில் முடியாத பிரச்சினைகள் எல்லாம் தற்போது ஒரு முடிவுக்கு வரும். பல்வேறு பொது காரியங்களில் ஈடுபடக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும். அசையும், அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் படிப்படியான வளர்ச்சியையும் அடைவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்களை விரைவில் பெற்று குடும்பத்துடன் இணையக்கூடிய ஒரு உன்னதமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். சர்ப கிரகமான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் அக்டோபர் 2023 முடிய சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சில நேரங்களில் உங்களுடைய முன்கோபத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பொறுமையோடு செயல்பட்டால் சிக்கல்களை சமாளிக்க முடியும். 30.10.2023-க்கு பிறகு கேது 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்தது உங்களுடைய பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பாகும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனைவி மற்றும் நெருங்கியவர்களால் எதிர்பாராத வகையில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி விரோதிகள் கூட நண்பர்களாக செயல்படுவதால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். மற்றவர்களின் உதவிகள் தடையின்றி கிடைத்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை 

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது மிகவும் நன்றாக இருந்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதில் சிந்தித்து செயல்படவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்.

கமிஷன் ஏஜென்ஸி 

குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் பணவிஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி 11-ல் இருப்பதால் கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். முடிந்தவரை பெரிய முதலீடுகளில் கவனமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். எதிர்பார்த்த லாபங்களும், புதிய வாய்ப்புகளும் சற்று தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். அரசு மூலம் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் போன்ற யாவும் தடையின்றி கிட்டும். பணியில் நிம்மதியான நிலையிருக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் வேலைபளு குறையும்.

அரசியல்

அரசியல்வாதிகள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிட்டாலும் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

விவசாயிகள்

விவசாயிகள் பட்டபாட்டிற்கான பலனை தற்போது அடைந்து விடுவார்கள். விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப் பெற சிறு சிறு தடைகள் ஏற்படும்.  கால்நடைகளால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டு. புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் கிடைத்து மன நிம்மதி ஏற்படும்.

பெண்கள்

குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைகேற்ற படியிருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்த்து விட்டால் கடன்கள் ஏற்படுவதையும் குறைக்கலாம். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளும் நடைபெறும். பணிபுரிபவர்களுக்கும் உயர்வுகள் ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்து மகிழ்ச்சியடைவார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும், ஆதரவும் மேலும் மேலும் உற்சாகத்தை அளிக்கும். உல்லாசப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நண்பர்களின் நட்பு மகிழ்ச்சி தரும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,                 நிறம் – ஆழ்சிவப்பு                               கிழமை – செவ்வாய்

கல் – பவளம்               திசை – தெற்கு                          தெய்வம் – முருகன்

inraiya rasipalan rishbam

குரு பெயர்ச்சி ராசி பலன் ரிஷபம் - Guru Peyarchi Rasi Palan for rishbam in Tamil

நாள் -2023 - 2024

ரிஷப ராசிக்காரர்களே (Guru peyarchi palan rishaba rasi)  

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு உங்கள் ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். குரு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனிபகவான் தற்போது 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நேரமாகும். பண பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற இறக்கமான நிலை காணப்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

இந்த தருணத்தில் சர்ப கிரகமான கேது 6-ல் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதும், அதன் பின் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது, தொழில் விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலையாட்களை எல்லா விஷயத்திலும் நம்பாமல் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக செயல்படுகின்ற பொழுது வீண் இழப்புகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும் என்றாலும் கிடைக்க வேண்டிய சன்மானங்கள் கிடைக்கும். சக ஊழியருடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட நீங்கள் சிறப்பாக கையாள முடியும். குரு பார்வை 4, 6, 8 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள், எந்த பிரச்சினையையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய ஒரு பலம், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக கூட சுபச் செலவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் உடல் ஆரோக்கியமானது நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். தூக்கத்தில் கனவுத் தொல்லைகள் இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவற்றால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது, இயற்கை உணவுகளை உட் கொள்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை   

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்து விட முடியும். குரு 12-ல் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், வீண் செலவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நெருக்கடியான நேரத்தில் வாழ்க்கை துணையின் ஆறுதல் வார்த்தைகளும், தகுந்த உதவிகளும் கிடைப்பதால் எதையும் சமாளிக்க முடியும். வீடு, வாகனம் வாங்கும் விஷயத்தில் கவனமாக முடிவு எடுப்பது நல்லது.

கமிஷன் ஏஜென்ஸி 

குருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர்களுக்கு லாபம் சற்று குறையும். 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள் உண்டாகும். கொடுத்த கடன்களையும் திரும்ப பெற முடியாமல் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இதனால் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் கையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் எதிர்பாராத விரயங்களை சந்திப்பீர்கள். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகளும் சற்று தாமதப்படும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் செலவை ஏற்படுத்தும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் சற்று தாமதமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதனால் வேலை பளுவும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்க நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவது நல்லது. கட்சி பணிக்காகவும் நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை மந்தமடையும். மறைமுக வருவாய் குறையும். பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

விவசாயிகள்

விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற லாபத்தை அடைய முடியாமல் விளைபொருட்கள் தேக்கமடையும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகள் இடையே வீண் விரோதங்கள் ஏற்படும். பூமி, மனை வாங்கும் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கால்நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

பெண்கள்

பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் எதிர்பாராத வகையில் கடன் வாங்க நேரிடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சில மனகவலைகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக முயற்சி எடுத்து படித்தால் மட்டுமே எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் படிப்பில் கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் ஓரளவுக்கு வெற்றியினைப் பெறுவீர்கள். அரசு வழி உதவிகள் தாமதப்படும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8            நிறம் – வெண்மை, நீலம்,          கிழமை – வெள்ளி, சனி

கல் –  வைரம்              திசை – தென்கிழக்கு,                தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி

inraiya rasipalan mithunam

குரு பெயர்ச்சி ராசி பலன் மிதுனம் - Guru Peyarchi Rasi Palan for mithunam in Tamil

நாள் -2023 - 2024

மிதுன ராசிக்காரர்களே (Guru peyarchi palangal for mithuna rasi)

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு 7, 10-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இதுநாள் வரை இருந்த பல்வேறு விதமான நெருக்கடிகள் எல்லாம் குறைந்து பணவரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படும். தற்போது சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உங்களது உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபங்கள் கிடைக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். நீங்கள் வாங்கிய கடன்களை வருகின்ற நாட்களில் எளிதில் பைசை செய்ய முடியும்.

லாப ஸ்தானத்தில் சந்திக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 3, 5, 7-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் ஒரு அனுகூலங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய யோகம் உண்டாகும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் முழுமையாக மறையும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல வளர்ச்சியினை அடைவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக அரசு மூலம் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை தற்போது பெற முடியும். தொழிலுக்காக நவீன இயந்திரங்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வேலை பளுவானது குறையும். சக ஊழியர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இந்த தருணத்தில் சர்ப்ப கிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் 30.10.2023 முடிய சஞ்சாரம் செய்ய இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். வருகின்ற நாட்களில் நீங்கள் நீண்ட நாட்களாக எண்ணிய காரியங்களை தற்போது நிறைவேற்ற முடியும். சிலருக்கு அழகிய வீடு வாங்கக்கூடிய யோகமும், புதிய வாகனங்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்களும் ஏற்படும். கூட்டுத் தொழில் மூலமாக மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உறவினர்கள் ஆதரவும் மிகச் சிறப்பாக இருக்கும்.

 

உடல் ஆரோக்கியம் 

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி ஏற்படும். கடந்த கால அலைச்சல், டென்ஷன்கள் குறைவதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும். லஷ்மிகடாட்சம் உண்டாகும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் உங்களுக்கிருந்த கடன் பிரச்சினைகளும் குறையும். தடைப்பட்டு வந்த திருமண சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நிறைவேறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பதால் அனுகூலப் பலனைப் பெற முடியும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன் பொருள் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பர்.

கமிஷன்- ஏஜென்ஸி 

குரு- ராகு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையில் இருப்போருக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும்.

தொழில் வியாபாரம் 

தொழில் வியாபாரத்திலிருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உத்தரவுகளை பெற முடியும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் சப்ளை செய்வதால் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நவீன கருவிகளை வாங்குவீர்கள். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக செயல்படுவதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும்.

உத்தியோகம்

பணியில் இதுவரை இருந்த வந்த சோதனைகளும் வேதனைகளும் விலகி உற்சாகமான நிலை ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து வாழும் அமைப்பு ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பான பணி அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற்று அனைவரின் அபிமானத்தையும் பெறுவீர்கள். கட்சி பணிக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார நிலையும் உயர்வடையும்.

விவசாயிகள்

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைப்பதால் லாபமும் அதிகப்படியாகவே இருக்கும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறையும். புதிய விளை நிலங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். கால்நடைகள் வளர்ப்பதால் அனுகூலங்கள் உண்டு. குடும்பத்தில் பொருளாதாரநிலை உயர்வடைவதால் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கடன்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனைப் பெறமுடியும். பணவரவுகள் பஞ்சமின்றி இருப்பதால் கடன்கள் குறைவதுடன் பொன் பொருளும் சேரும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியிலிருந்த மந்த நிலைகள் விலகி உற்சாகத்துடன் படிக்க முடியும். உடல் சோர்வு மனம் அலைப்பாயக் கூடிய நிலை போன்ற யாவும் மறையும். நல்ல மதிப்பெண்களை பெறுவதால் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் பெருமையை தேடி தருவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளும் பாராட்டுதல்களும் மேலும் மேலும் உற்சாகத்தை உண்டாக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8,            நிறம் – பச்சை, வெள்ளை,       கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம்              திசை – வடக்கு                 தெய்வம் – விஷ்ணு

inraiya rasipalan kadagam

குரு பெயர்ச்சி ராசி பலன் கடகம் - Guru Peyarchi Rasi Palan for kadagam in Tamil

நாள் -2023 - 2024

கடக ராசிக்காரர்களே (guru peyarchi palangal kadagam rasi)

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு உறுதியாக பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6, 9-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த தருணத்தில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமச் சனி நடக்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு மிகவும் சிக்கனமாக இருப்பது தான் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது உத்தமம். மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீட்டுகள் எடுத்துக் கொள்வதும் நல்லது.

தொழில், வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்றாலும் அதிக அலைச்சல், டென்ஷன், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய ஒரு சூழல் ஏற்படும். அனைத்து விஷயத்திற்கும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக பணிபுரிந்தால் தான் நிலைமையை சமாளிக்க முடியும். கூட்டாளிகளை கலந்தாலோசித்து சில விஷயங்களில் செயல்படுவதன் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தாலும் உங்களது ஆரோக்கியமே உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். சில நேரங்களில் சக ஊழியர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உண்டாகும். உங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பது, முக்கிய விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

குரு பகவான் தனது சிறப்பு பார்வையாக 2, 4, 6-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஒரு சில ஆதாயங்களை அடைவீர்கள். நெருங்கிய உறவினர்கள் நெருக்கடியான நிலையில் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் சில தோன்றினாலும் அதனை உங்கள் தனித் திறமையால் எளிதில் சமாளித்து விடுவீர்கள். சர்ப கிரகமான ராகு 10-லும் கேது 4-லும் வரும் 30.10.2023 முடிய சஞ்சாரம் செய்வது உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு சின்ன சின்ன இடையூறுகள் ஏற்படும். 30.10.2023—ல் ஏற்படக்கூடிய ராகு, கேது பெயர்ச்சி மூலமாக கேது 3-லும் ராகு 9-லும் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகளும், பொருளாதார மேன்மைகளும் ஏற்படும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. வீண் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள மருத்து காப்பீடுகள் எடுத்து கொள்ளவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் வேலைபளு அதிகரிப்பதால் ஒய்வு நேரம் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை   

பணவரவுகளில் நெருக்கடிகள் இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பொருளாதார பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்களால் சுபசெலவு உண்டாகும்.

கமிஷன் ஏஜென்ஸி 

பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்பு தான் திரும்ப பெற முடியும். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுத்தால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் அரசு வழி உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதமாகும். தொழிலில் ஏற்படக்கூடிய போட்டிகளால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். குறித்த நேரத்தில் ஆர்டர்களை சப்ளை செய்ய இடையூறு ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சாதகமான பலன் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. நவீன கருவிகள் பழுதடைவதால் வீண் விரயங்களும் உண்டாகும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகள் ஏற்படும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் வேலைபளு அதிகரிப்பதுடன் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மன உளைச்சலை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொண்டால் விரைவில் நல்ல நிலையை அடைய முடியும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பணவிஷயங்களில் நெருக்கடிகள் ஏற்படும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகள் எதிர்பார்க்கும் மகசூலைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த கடனுதவிகளும் கிடைக்க தாமதம் ஆகும். குறித்த நேரத்திற்கு மழை பெய்யாததால் விளைச்சல் குறையும். கால்நடைகளுக்கு நோய்கள் தாக்குவதால் மருத்துவ செலவினை எதிர்கொள்ள நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களின்றி சமாளிக்க முடியும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புதிய வேலை வாய்ப்பானது சற்று தாமதமாகத் தான் அமையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டு வெற்றிகளை காண்பீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்ப்பதும் நல்லது. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9                   நிறம் – வெள்ளை, சிவப்பு              கிழமை – திங்கள், வியாழன்

கல் –  முத்து       திசை – வடகிழக்கு               தெய்வம் – வெங்கடாசலபதி

inraiya rasipalan simmam

குரு பெயர்ச்சி ராசி பலன் சிம்மம் - Guru Peyarchi Rasi Palan for simmam in Tamil

நாள் -2023 - 2024

சிம்ம ராசிக்காரர்களே (Guru peyarchi palangal simha rasi)

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5, 8-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளது அற்புதமான அமைப்பு ஆகும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்க கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மனைவி, பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். பண வரவுகள் மிகச் சிறப்பாக இருந்து பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு இருந்த கடன்கள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு பண வரவுகள் சிறப்பாக இருக்கும். வீடு, மனை போன்றவற்றினை வாங்க வேண்டும் என்று எண்ணிய உங்களுடைய எண்ணங்கள் வருகின்ற நாட்களில் நிறைவேறும்.

இந்த தருணத்தில் ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே சற்று விட்டு கொடுத்து செல்வது, நெருங்கிய உறவினர்கள் மற்றும் கூட்டாளியிடம் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. 9-ல் சஞ்சரிக்கும் குருபகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 5-ஆகிய பாவங்களை பார்வை செய்வதால் பெரியோர்கள் ஆசி கிடைக்கக்கூடிய அமைப்பு, எடுக்கும் முயற்சியில் வெற்றி, உங்கள் கனவுகள் நிறைவேற கூடிய ஒரு அற்புத நிலை, பூர்வீக சொத்து வகையில் ஒரு சில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை என கவலைப்பட்டவர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் தகுதியையும் தனித் திறனையும் உயர்த்திக் கொள்வதற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளும், பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும். சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறுவதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். தகுதி வாய்ந்த வேலை ஆட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும்.

சர்ப்ப கிரகமான ராகு 9-லும், கேது 3-லும் வரும் 30.10.2023 முடிய சஞ்சாரம் செய்வது உங்களுக்கு மிகவும் சாதகமான அமைப்பாகும். இதன் காரணமாக வெளியூர், வெளிநாடுகள் மூலமாக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய நல்ல செய்தி கிடைக்கும். அக்டோபர் 2023க்கு பிறகு கேது 2-க்கும் ராகு 8-க்கும் மாறுதல் ஆவதால் அதன் பின் உடல் நலத்தில் சற்று அக்கறை செலுத்துவது, பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் படிப்படியாக குறைந்து மன நிம்மதி ஏற்படும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி பூரிப்பு உண்டாகும். சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய தைரியம் இருக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை 

குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். முன்கோபத்தை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

கமிஷன்- ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் லாபம் திருப்பதிகரமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். இதுவரை இருந்த வந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். 

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறமுடியும். தொழிலாளர்களின் விடாமுயற்சி உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும். கூட்டாளிகளிடம் பேச்சில் மட்டும் சற்று நிதானத்தை கடைப்பிடித்தால் மேலும் பல முன்னேற்றங்களைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகம்

பணிபுரிவோருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடந்த கால அவபெயர்கள் விலகி உங்களது பெயர், புகழ் மேலோங்கும் காலமாக வருகின்ற நாட்கள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் அனைவரிடமும் சுமூகமாக இருக்க முடியும். கட்சி பணிகளுக்காக வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நீர்வளமும், நிலவளமும், மிக சரியாக இருப்பதால் குறிப்பிட்ட பயிர்களை விவசாயம் செய்து லாபத்தை காண முடியும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் விளை நிலங்களை வாங்கும் நோக்கம் நிறைவேறும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி நிம்மதியுடன் இருப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். பொன்பொருள் சேருவதுடன் நவீன பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். கடன்களும் நிவர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். பணிபுரிபவர்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வுகள் கிடைத்து வேலைபளுவும் குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் இருந்த மந்த நிலை விலகி ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். உடன் பழகுபவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மேலும் உற்சாகத்தை அளிக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9                      நிறம் – வெள்ளை, சிவப்பு               கிழமை – ஞாயிறு, திங்கள்

கல் –  மாணிக்கம்                   திசை – கிழக்கு                         தெய்வம் – சிவன்

inraiya rasipalan kanni

குரு பெயர்ச்சி ராசி பலன் கன்னி - Guru Peyarchi Rasi Palan for kanni in Tamil

நாள் -2023 - 2024

கன்னி ராசிக்காரர்களே (Guru peyarchi palangal kanni rasi)

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சர்ப்ப கிரகமான கேது 2-லும் ராகு 8-லும் வரும் 30.10.2023 முடியவும் அதன் பின் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு எனவும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உணர்ச்சிவசப்படாமல் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் நல்லது.

குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்றாலும் உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ஆம் வீட்டில் சனி வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு சிக்கனத்தோடு இருந்தால் எதையும் எதிர்கொண்டு அனுகூலமான பலன்களை அடைய முடியும். அசையும், அசையா சொத்து வகையில் எதிர்பாராத சுபச் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

குரு தனது சிறப்பு பார்வையாக 2, 4, 12-ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்ய இருப்பதால் எந்த பிரச்சினையையும் நீங்கள் உங்கள் தனித் திறமையால் எளிதில் கையாண்டு அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் திறமையோடு செயல்பட்டு நல்ல லாபங்களை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தொழில் ரீதியாக மறைமுக போட்டிகள் அதிகரித்தாலும் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. சில நேரங்களில் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதன் மூலம் பொருளாதார அனுகூலத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக உங்களது ஓய்வு நேரம் குறையும் என்றாலும் உங்கள் உழைப்புக்கான ஊதியங்களை பெற முடியும். வெளியூர், வெளிமாநிலங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியில் சென்று சிறிது காலம் தங்க வேண்டிய ஒரு சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்க முடியும். குரு 8-ல் சஞ்சரிக்கும் இந்த காலத்தில் சனி பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சாதகமான நிலை, எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு யோகம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய ஆதாயங்களை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அலைச்சல், உடல் சோர்வு இருந்தாலும் எதையும் சமாளித்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் மன நிம்மதி குறைவு, தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடு உண்டாகும் நேரம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். நல்லதே செய்தாலும் அவற்றால் வீண் அவபெயர் தான் வரும். சனி 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்ல பழகி கொள்வது நல்லது.

கமிஷன்- ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். பணவிஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொடர்புடைய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வங்கி கடன்களை தக்க நேரத்தில் திருப்பி செலுத்தி விடுவீர்கள். போட்டி இருந்தாலும் உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தக்க நேரத்தில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது உயர்வான நிலையை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் எதிர்பாராத உதவிகளும், லாபங்களும் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளால் நிம்மதி குறையும். எந்த வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதே அவர்களின் வேலையாக இருக்கும். தேவையற்ற வீண் பழிச்சொற்களை சுமக்க வேண்டியிருப்பதால் பணியில் நிம்மதி குறையும். சிலருக்கு வெளியூர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உங்கள் உழைப்பிற்கான பலனை அடைவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சற்று சாதகமாக இருந்து வேலைபளு குறையும். நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும்.

அரசியல் 

அரசியல்வாதிகள் எதிலும் நிதானத்தை கடைப்பிடித்தால் மட்டுமே பதவிகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். தலைவர்களிடம் பேசும் போது சற்று நிதானமாக பேசுவது மூலம் நற்பலனை அடைய முடியும். மக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற முடியும். மேடை பேச்சுகளில் வேகத்தை குறைப்பது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.

விவசாயிகள் 

பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலை எடுத்து விட முடியும். புழு பூச்சிகளின் தொல்லை மற்றும் நீர்வரத்து குறைவு போன்றவற்றால் எதிர்பார்த்த மகசூலைப் பெற முடியாது. பட்டபாட்டிற்கான பலனை அடைந்து ஒரளவுக்கு கடனை அடைக்க முடியும். பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்படும். கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படுவதால் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தட்டிப்போகும் என்றாலும் கடின முயற்சிக்கு பின் சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திரர்களால் சுப செலவுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். சேமிப்புகள் குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் மந்தநிலை, ஞாபகமறதி ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடுவதால் தகுந்த பாடங்களைப் படிக்க முடியாமல் போகும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,7,8                   நிறம் – பச்சை, நீலம்           கிழமை – புதன், சனி

கல் –  மரகத பச்சை                              திசை – வடக்கு          தெய்வம் – ஸ்ரீவிஷ்ணு

inraiya rasipalan thulam

குரு பெயர்ச்சி ராசி பலன் துலாம் - Guru Peyarchi Rasi Palan for thulam in Tamil

நாள் -2023 - 2024

துலாம் ராசிக்காரர்களே (Guru peyarchi palangal thulam rasi)

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு 3, 6-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களின் பொருளாதார நிலை உயர்வது மட்டுமில்லாமல் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் சுபிட்சமும், சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக முடிவுக்கு வந்து மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உடல் பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசி 3, 11-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் மன தைரியம், எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதிர்பாராத லாபங்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. பங்காளிகள் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியாக நீண்ட நாட்களாக இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். தந்தை மற்றும் மூதாதையர் வகையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்து மற்றும் பொருளாதார உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும்.

இந்த தருணத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்க கூடிய அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் கடந்த கால பொருட் தேக்கங்கள் எல்லாம் விலகி உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சிறப்பான லாபங்களை அடைய முடியும். தொழில் நிமித்தமாக நீங்கள் வாங்கிய கடன்களை அடைப்பது மட்டுமில்லாமல் கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு நிலுவையில் இருந்து வந்த சம்பள தொகை எல்லாம் தற்போது கிடைத்து உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். வெளியூர், வெளிநாடுகள் மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும்.

சர்ப்ப கிரகமான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் வரும் 30.10.2023 முடிய சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, சில நேரங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அக்டோபரில் ஏற்படக்கூடிய ராகு கேது பெயர்ச்சி மூலம் ராகு 6-ஆம் வீட்டுக்கும் கேது 12-ஆம் வீட்டுக்கும் மாறுதலாக இருப்பது அற்புதமான அமைப்பாகும். குறிப்பாக அக்டோபருக்கு பிறகு குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் கடந்த காலங்களில் இருந்த மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். பயணங்கள்  மூலம் ஏற்றமிகுந்த பலனை அடைய முடியும். எடுத்த பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குரு 7-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். கடந்த காலத்திலிருந்த பொருளாதார தடைகள் விலகி குடும்பத்தின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவதுடன், கடன்களும் படிப்படியாக குறையும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, நெருங்கிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூமி, வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கமிஷன், ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி  லாபங்களை அடைய முடியும். பணபரிமாற்ற விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் பெற முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி திருப்பி வரும். இதுவரை இருந்த வம்பு, வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகளும், போட்டி, பொறாமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைவதால் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவதால் உங்களின் பலமும், வலிமையும் கூடும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்புகளால் லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உத்தரவுகளை பெற்று தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். தடைப்பட்டுக் கொண்டிருந்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைத்து நிம்மதி ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதால் எதையும் சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்

உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மக்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். கட்சி பணிக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகப்படியாக இருக்கும். கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் கவனமாக இருக்கவும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைப்பதால் நல்ல நிலையை அடைய முடியும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்து உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். பூ, காய்கனி போன்றவற்றாலும், கால்நடைகளாலும் லாபம் உண்டு. புதிய பூமி, மனை வாங்கும் யோகம் ஏற்படும். பட்டபாட்டிற்கான பலனை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை எடுத்துக்கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள்களை வாங்கி சேமிப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது-.

மாணவ- மாணவியர்

கல்வியில் இருந்த மந்தநிலை சற்றே விலகும். பள்ளிப் படிப்பில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும், கல்லூரிகளில் பயிலுபவர்கள் சிறப்பான சாதனையை செய்ய முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைப்பீர்கள். நல்ல நட்புகளும் கிட்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4,5,6,7,8                               நிறம் – வெள்ளை, பச்சை               கிழமை – வெள்ளி, புதன்

கல் – வைரம்                               திசை – தென் கிழக்கு         தெய்வம் – லக்ஷ்மி

inraiya rasipalan viruchigam

குரு பெயர்ச்சி ராசி பலன் விருச்சிகம் - Guru Peyarchi Rasi Palan for viruchigam in Tamil

நாள் -2023 - 2024

விருட்சிக ராசிக்காரர்களே (Guru peyarchi palangal for viruchigam)

எவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியும், ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமுமான குருபகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் நீங்கள் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட்டால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும். இந்த தருணத்தில் உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் உங்களுக்கு அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய ஒரு சூழல் ஏற்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிப்பதில் இடையூறுகள் உண்டாகும். உங்களது தேக ஆரோக்கியத்திலும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது, தகுந்த இடைவேளையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 12–ல் கேது என 30.10.2023 முடியவும் அதன் பின் 5-ல் ராகு, 11-ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். குரு பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12-ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் நெருங்கியவர்கள் உதவியானது நெருக்கடியான நேரத்தில் கிடைத்து உங்களின் மனக்கவலைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அனுகூலங்களை அடைய முடியும்.

தொழில் விஷயங்களை வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் பணியில் சிறப்பாக செயல்பட தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். உங்கள் மீது வீண் பழிச் சொற்களை உடனிருப்பவர்கள் கூறுவார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நிலைமையை சமாளித்து அனுகூலங்களை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சினையும் சமாளிக்க கூடிய பலம் ஏற்படும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்  

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் மனநிம்மதியானது குறையக்கூடிய சூழ்நிலைகள் இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. மனைவி, பிள்ளைகள் வழியில் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறு ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படாது.

கமிஷன் ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்போர் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. பண பரிமாற்ற விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரத்தில் சில போட்டி, பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்ளும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவுவதால் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைத்து நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் உயர் பதவிகள் தேடிவரும். சமுதாயத்தில் கௌரவமான நிலையிருக்கும். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

அரசியல்

அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைக்கு பின் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் பொருளாதார நிலையில் இடையூறுகள் உண்டாகும் என்றாலும் மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்க சற்று தாமதமாகும். கால்நடைகளால் லாபங்கள் கிடைத்தாலும் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பங்காளிகள் மற்றும் அன்னிய இட உரிமையாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் குடும்பத்தில் சிக்கனத்தை மேற்கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தேவையற்ற இடையூறுகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் குடும்ப விஷயங்களில் மற்றவர் தலையீட்டை தவிர்ப்பது மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பணிபுரிபவர்களுக்கு சற்று வேலைபளு அதிகரிக்கும், சேமிப்பு குறையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோர் பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டு. திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். உல்லாச பயணங்களால் அனுகூலங்கள் உண்டு.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9                   நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள்,        கிழமை – செவ்வாய், வியாழன்

கல் – பவளம்,                              திசை – தெற்கு                          தெய்வம் – முருகன்

inraiya rasipalan thanus

குரு பெயர்ச்சி ராசி பலன் தனுசு - Guru Peyarchi Rasi Palan for thanus in Tamil

நாள் -2023 - 2024

தனுசு ராசிக்காரர்களே (Guru peyarchi palangal dhanusu rasi)

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் உன்னதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த கால சோதனைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு.

5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் ஜென்ம ராசி, 9, 11-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் தந்தை வழியில் அனுகூலங்கள், பெரிய மனிதர்களின் ஆதரவு, அதிகப்படியான பண வரவுகள் கிடைக்கும் வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மிக மிக நன்றாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் எல்லாம் ஒரு முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தையும் தரும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் கூட வருகின்ற நாட்களில் நிறைவேறி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் வருகின்ற நாட்களில் விடிவுகாலம் பிறந்து உங்களின் பொருளாதார நிலை மேம்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைத்து அனைத்து பிரச்சனைகளும் குறையும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

இந்த தருணத்தில் சர்ப்ப கிரகமான ராகு 5-ல், கேது 11-ல் 30.10.2023 வரை சஞ்சாரம் செய்கின்றனர். அதன் பின்னர் 4-ல் ராகு, 10-ல் கேது என சஞ்சரிக்க உள்ளனர். உணவு விஷயத்தில் மட்டும் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. குரு, சனி சாதக சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்களை வரும் நாட்களில் அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். செய்யும் பணிகளை ஒழுங்காக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். நெருங்கியவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைப்பதால் நிம்மதி நிலவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். இதுநாள் வரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறைந்து சேமிக்க முடியும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

கமிஷன் ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் கொடுத்த கடன்களை திரும்பப் பெற முடியும். பெரிய மனிதர்களின் நட்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபார ரீதியாக சந்தை சூழ்நிலை மிகவும் சாதகமாக மாறுவதால் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி வெற்றி காண்பீர்கள். அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக நடப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். திறமைகளை வெளிப்படுத்தி நற்பெயரை எடுக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை எளிதில் பெற முடியும். பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.  கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேர்ந்தாலும் மறைமுக வருவாய்கள் பெருகும். அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய நவீன கருவிகளை வாங்க முடியும். விளை நிலங்களை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் வகையில் இருந்த தீர்க்க முடியாத சிக்கல்கள் தற்போது உங்களுக்கு சாதகமாக முடியும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். காய்கனி போன்றவற்றால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பொன்பொருள் சேரும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு அதிகரிக்கும். ஞாபக சக்தி திறனும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல நடப்புகளாலும் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9          நிறம் – மஞ்சள், பச்சை              கிழமை – வியாழன், திங்கள்

கல் – புஷ்ப ராகம்   திசை – வடகிழக்கு                      தெய்வம் – தட்சிணா மூர்த்தி

inraiya rasipalan makaram

குரு பெயர்ச்சி ராசி பலன் மகரம் - Guru Peyarchi Rasi Palan for makaram in Tamil

நாள் -2023 - 2024

மகர ராசி அன்பர்களே! (Guru peyarchi palangal magaram rasi)

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரித்த குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை சுகஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த தடங்கல்கள் எல்லாம் விலகி எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப்புழக்கம் சற்று சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு 2-ல் சனி சஞ்சரித்து ஏழரைச் சனியில் பாத சனி நடப்பதால் ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. குருபகவான் தனது சிறப்பு பார்வையாக 8, 10, 12-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து தேக ஆரோக்கிய நிலையில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும். மனைவி, பிள்ளைகள் வகையில் இருந்து வந்த கவலைகள் எல்லாம் கூட ஓரளவுக்கு குறைந்து மன நிம்மதி ஏற்படும். உங்கள் உழைப்புக்கான பலனை வருகின்ற நாட்களில் அடைய முடியும். பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் சிக்கல்களை தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையலாம். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த வீண் செலவுகள் குறைந்து சேமிக்கும் அளவிற்கு உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். அரசு வழியில் சில சட்ட சிக்கல்கள் இருக்கும் என்றாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய ஒரு பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதியுடன் பணி புரிய முடியும். சக ஊழியரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. தேவையற்ற நெருக்கடிகள் சில ஏற்பட்டாலும் உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதால் நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது அக்டோபர் 2023 முடிய சஞ்சரிப்பதால் அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள், ஒவ்வொரு செயலிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். 30.10.2023-க்கு பிறகு ராகு 3-லும் கேது 9-லும் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறைந்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். தற்போதைக்கு சற்று பொறுமையோடு செயல்பட்டால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்குத்தான் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை, சிலருக்கு எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை போன்றவை ஏற்படும். சுகவாழ்வில் இடையூறுகள் உண்டாகும். மனைவி, பிள்ளைகளால், ஒரளவுக்கு மன நிம்மதி ஏற்படும். பயணங்களால் எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளை கட்டுக்குள் வைத்து கடன்களின்றி சமாளித்து விடுவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். வண்டி, வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கமிஷன் ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண் அலைச்சலை எதிர்கொள்வீர்கள். போட்டி பொறாமைகளால் சில வாய்ப்புகள் தட்டி செல்ல நேர்ந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது, பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது மிகவும் உத்தமம்.

உத்தியோகம்

பணியில் ஓரளவுக்கு நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். சிலருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் உடல்நிலை சோர்வடையும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் வேலைபளுவை குறைக்க உதவும். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அரசியல்

எதிர்பார்க்கும் பெரிய பதவிகள் கிடைக்கப் பெற்று பெயர், புகழ் உயரும் என்றாலும் பணவரவுகளில் இடையூறுகள் உண்டாகும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தோடு சேர்ந்திருக்க முடியாத நிலை, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு எதிர்பார்க்கும் மகசூல் கிடைத்தாலும் அதற்காக அதிகம் பாடுபட வேண்டி இருக்கும். லாபமும் சுமாராகவே இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே விரயங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் உடல் நிலையானது மந்தமாக இருக்கும். மருத்துவ செலவுகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பதால் அவர்கள் மூலம் சற்று ஆதாயப் பலனை பெற முடியும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் மந்தநிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்படுவதால் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் குறையும். உடல்நிலையில் ஏற்பட கூடிய பாதிப்புகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு எடுக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் –  5,6,8     நிறம் – நீலம், பச்சை           கிழமை – சனி, புதன்

கல் – நீலக்கல்            திசை – மேற்கு           தெய்வம் – விநாயகர்

inraiya rasipalan kumbam

குரு பெயர்ச்சி ராசி பலன் கும்பம் - Guru Peyarchi Rasi Palan for kumbam in Tamil

நாள் -2023 - 2024

கும்ப ராசி அன்பர்களே!(Guru peyarchi palangal kumbha rasi)

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சாரம் செய்ய உள்ளார். ஏழரைச் சனியில் ஜென்ம சனி தற்போது நடைபெறுவதால் எடுக்கும் முயற்சியில் தேவையற்ற நெருக்கடிகள், எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். அலைச்சல், டென்ஷன், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய நிலை உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். உங்களது ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நீங்கள் மிகவும் நம்பியவர்களே உங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.

3-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு பார்வையாக 7, 9, 11-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் திருமண வயது அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய அமைப்பு, ஒரு பெரிய மனிதனின் ஆதரவால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். நீங்கள் கடினமான நெருக்கடியில் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் உங்கள் தேவைக்கேற்ப தக்க நேரத்தில் நல்ல உதவிகள் கிடைத்து அனைத்து பிரச்சினையும் சமாளிக்க முடியும். உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. நீங்கள் எதிர்பாராத மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீட்டுகள் எடுத்துக் கொள்வது மிக மிக உத்தமம்.

தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். பண பரிமாற்ற விஷயங்களில் போட்ட முதலீட்டை எடுத்தால் போதும் என்ற அளவிற்கு கடுமையான சிக்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் தேவையில்லாத வீண் பழிச் சொற்களை எதிர் கொள்ளக்கூடிய ஒரு நிலை உண்டாகும். உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருப்பது, அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வது மிகவும் நல்லது. தற்போது 3-ல் சஞ்சரிக்க கூடிய ராகு 30.10.2023-க்கு பிறகு 2-ல் ராகு, 8-ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது சற்று பொறுமையோடு செல்வது, இரவு பயணங்களை தள்ளி வைப்பது மிகவும் நல்லது.

 

உடல் ஆரோக்கியம்  

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றி கொண்டே இருக்கும். ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றிற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை   

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். முன்கோபத்தை குறைத்து கொள்வது மிகவும் உத்தமம்.

கமிஷன் ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடை, தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். பெரிய தொகைகளை கையாளும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் நெருக்கடியான நேரத்தில் வசூலாகி மன நிம்மதி அடைவீர்கள்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும், பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வதே நல்லது. தொழிலில் உண்டாகக்கூடிய போட்டி பொறாமைகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடியான நிலையினை சந்திப்பீர்கள். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பழிச்சொற்களை ஏற்க வேண்டிவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாவதால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலையும் அதனால் மன உளைச்சலும் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்

அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலமாகும். பெயர், புகழுக்கு பஞ்சம் இருக்காது என்றாலும் வருவாய் குறைவடையும். செய்யாத தவறுகளுக்காக தேவையற்ற அவப்பெயரை சம்பாதிப்பீர்கள். மக்களின் ஆதரவைப் பெற மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராகத்தான் இருக்கும். பட்டபாட்டிற்கு ஏற்ற பலனைப் பெற முடியும். பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பங்காளிகளின் ஆதரவு மன நிம்மதியை தரும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடமுடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8             கிழமை – வெள்ளி, சனி                             திசை – மேற்கு

கல் – நீலக்கல்            நிறம் – வெள்ளை, நீலம்                    தெய்வம் – ஐயப்பன்

inraiya rasipalan meenam

குரு பெயர்ச்சி ராசி பலன் மீனம் - Guru Peyarchi Rasi Palan for meenam in Tamil

நாள் -2023 - 2024

மீன ராசிக்காரர்களே (Guru peyarchi palangal meena rasi)

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, ராசியாதிபதி குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களின் பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். அனைத்து குடும்ப தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நல்ல லாபம் உண்டாகும். 2-ல் சஞ்சரிக்கக் கூடிய குருபகவான் 6, 8, 10-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் நீங்கள் வாங்கிய கடன்களைப் பைசல் செய்ய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவானது சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடப்பதால் சில விஷயங்களில் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். குறிப்பாக ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். கூட்டாளிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான நெருக்கடிகளை கூட எளிதில் சமாளித்து அடைய வேண்டிய லாபத்தை அடைய முடியும். சில நேரங்களில் வேலையாட்கள் சிறு சிறு நெருக்கடிகளை கொடுத்தாலும் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் அனைத்தையும் சமாளித்து வளமான பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு பெரிய வாய்ப்பினை அடைய முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது என 30.10.2023 முடியவும், அதன் பின்பு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, உடல் நலத்திற்கும் சற்று முக்கியத்துவம் தருவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய ஒரு காலம் என்பதால் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது.

 

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். அவ்வப்போது கை, கால்களில் வலி, உடல்சோர்வு, மந்தநிலை ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளால் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். நெருங்கியவர்களுக்கு இருந்த உடல் நிலை  பாதிப்புகள் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை 

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் தனகாரகன் குருபகவான் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத திடீர் தன வரவுகள் உண்டாகி குடும்பத்தில் மேன்மை ஏற்படும். திருமண சுபகாரியங்களும் தடையின்றி கைகூடும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். சர்ப்ப கிரக சஞ்சாரத்தால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை பெற முடியும். சிலருக்கு அசையும், அசையா சொத்து சேர்க்கைகளும், ஆடை, ஆபரணம் சேர்க்கைகளும் உண்டாகும்.

கமிஷன்- ஏஜென்ஸி 

கமிஷன், ஏஜென்ஸி மற்றும் காண்டிராக்ட் துறையிலிருப்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி பல பெரிய மனிதர்களின் தொடர்பையும், நட்பையும் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வருவதால் லாபங்கள்  பெருகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட பதவி உயர்வுகள் எளிதில் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைவார்கள். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு ஏற்றத்தை அளிக்கும் காலமாக இருக்கும். பல பெரிய பதவிகள் தேடி வரும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து பல பெரிய மனிதர்களின் தொடர்பையும், மக்களின் ஆதரவையும் அமோகமாகப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமைவதால் லாபம் தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கால்நடைகளால் லாபத்தை பெற முடியும். கூலியாட்களால் சிறு சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் எதையும் சமாளித்து அனைத்து வேலையையும் எளிதில் முடித்துவிடுவீர்கள். விளை நிலங்களை வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

பெண்கள்

குடும்பத்தில் இருந்த மன கசப்புகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உற்றார் உறவினர்களால் அனுகூலமானப் பலன்கள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் சிறு சிறு பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள். சிலருக்கு பூமி, மனை யோகமும். ஆடை, ஆபரண சேர்க்கைகளும் தாராளமாக இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9                   கிழமை – வியாழன், ஞாயிறு      திசை – வடகிழக்கு

கல் – புஷ்ப ராகம்   நிறம் – மஞ்சள், சிவப்பு    தெய்வம் –  தட்சிணாமூர்த்தி

Click the links to get குரு பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore