சூரசம்ஹாரம் வரலாறு | Soorasamharam Story in Tamil

Updated On

முருகன் சூரசம்ஹாரம் | Murugan Soorasamharam

முருகப்பெருமான் சூரபத்மனை தனது ‘வேல்’ மூலம் கொன்றார் என்பது பிரபலமான நம்பிக்கை, இந்த தெய்வீக செயல் சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது.

அன்றைய தினம், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி மற்றும் தர்மத்தை மீட்டெடுப்பதை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு மறுநாள் முருகனுக்கும் தேவசேனாவுக்கும் தெய்வீக திருக்கல்யாணம் நடைபெறும்.

சூரசம்ஹாரம் கதை

சூரபத்மன் எனும் அரக்கனின் அட்டகாசங்கள் எல்லை மீற, அவனது கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டி சிவன் முருகனை படைத்தார்.

தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை படைத்த சிவன், அந்த தீ பொறிகளை கங்கை ஆற்றில் சேர்க்க வாயுவை படைத்தார். அவர்களும் அந்த நெருப்புத் துண்டுகளை கங்கையில் சேர்த்தனர். கங்கையாறு அவற்றை சரவணப்பொய்கைக்கு எடுத்துச் சென்றது.

சரவண பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறின அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததனர். அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி கட்டியணைத்து ஒரு குழந்தையாக மாற்றினாள்.

ஆறுமுகங்களுடன் இருந்த அந்த குழந்தைக்கு முருகன் எனப் பெயரிட்டாள். இந்த சமயத்தில் சூரபத்மன் அளவிலாத கொடுமைகளை செய்துகொண்டிருந்தான்.

சூரபத்மனை வதம் செய்ய முடிவு செய்த சிவன், முருகனை தனது படைகளுக்கு தளபதியாக நியமித்தார். அன்னை பார்வதி தனது சக்தியை வேலில் உருவேற்றி முருகனுக்கு ஆயுதமாக அளித்தார். முருகன் வேலோடும், படையொடும் சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார்.

முதலில் சிங்கமுகனையும், தாரகாசுரனையும் அளித்தார். இறுதியில் சூரபத்மனை அழித்தார். தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மரமாக மாறினான். முருகன் அந்த மரத்தை தனது வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார்.

இறக்கும் தருவாயில் சூரபத்மன் தனது உடலின் ஒரு பகுதியை மயிலாகவும்,  மற்றொரு பகுதியை சேவலாகவும் மாறி அவை முருகனின் வாகனமாகவும் கொடியாகவும் திகழ வேண்டும் என வரம் கேட்டான். முருகனும் அவ்வண்ணமே வரம் வழங்கினார்.

இந்த போர் நடந்த நாட்களை சஷ்டி விரத தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டு முருகன் சூரனை வதம் செய்த நாளன்று முருகன் கோயில்களில் பொம்மை அசுரனை அழிக்கும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது.

சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் – தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

அறுபடை வீடுகளின் இரண்டாவது வீடான திருட்ச்செந்தூர் முருகன் கோவிலில் மிகவும் பிரசித்திபெற்ற சூரசம்ஹாரம் விழா வருடம் வருடம் கொண்டாடபடுகிறது. அன்று ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கின்றனர்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore