Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

குரு பெயர்ச்சி ராசி பலன் தனுசு - Guru Peyarchi Rasi Palan for thanus in Tamil
நாள் -2023 - 2024தனுசு ராசிக்காரர்களே (Guru peyarchi palangal dhanusu rasi)
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் 22.04.2023 முதல் 01.05.2024 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் உன்னதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த கால சோதனைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு.
5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் ஜென்ம ராசி, 9, 11-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் தந்தை வழியில் அனுகூலங்கள், பெரிய மனிதர்களின் ஆதரவு, அதிகப்படியான பண வரவுகள் கிடைக்கும் வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மிக மிக நன்றாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் எல்லாம் ஒரு முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தையும் தரும். உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் கூட வருகின்ற நாட்களில் நிறைவேறி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் வருகின்ற நாட்களில் விடிவுகாலம் பிறந்து உங்களின் பொருளாதார நிலை மேம்படும். நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைத்து அனைத்து பிரச்சனைகளும் குறையும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். வெளியூர், வெளிநாடு தொடர்புகளால் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
இந்த தருணத்தில் சர்ப்ப கிரகமான ராகு 5-ல், கேது 11-ல் 30.10.2023 வரை சஞ்சாரம் செய்கின்றனர். அதன் பின்னர் 4-ல் ராகு, 10-ல் கேது என சஞ்சரிக்க உள்ளனர். உணவு விஷயத்தில் மட்டும் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. குரு, சனி சாதக சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் ஏற்ற மிகுந்த பலன்களை வரும் நாட்களில் அடைவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். செய்யும் பணிகளை ஒழுங்காக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். நெருங்கியவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைப்பதால் நிம்மதி நிலவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். இதுநாள் வரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறைந்து சேமிக்க முடியும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கமிஷன் ஏஜென்ஸி
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் கொடுத்த கடன்களை திரும்பப் பெற முடியும். பெரிய மனிதர்களின் நட்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம்
தொழில், வியாபார ரீதியாக சந்தை சூழ்நிலை மிகவும் சாதகமாக மாறுவதால் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி வெற்றி காண்பீர்கள். அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக நடப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். திறமைகளை வெளிப்படுத்தி நற்பெயரை எடுக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை எளிதில் பெற முடியும். பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேர்ந்தாலும் மறைமுக வருவாய்கள் பெருகும். அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய நவீன கருவிகளை வாங்க முடியும். விளை நிலங்களை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் வகையில் இருந்த தீர்க்க முடியாத சிக்கல்கள் தற்போது உங்களுக்கு சாதகமாக முடியும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். காய்கனி போன்றவற்றால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடிவரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பொன்பொருள் சேரும்.
மாணவ- மாணவியர்
கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு அதிகரிக்கும். ஞாபக சக்தி திறனும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல நடப்புகளாலும் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – மஞ்சள், பச்சை கிழமை – வியாழன், திங்கள்
கல் – புஷ்ப ராகம் திசை – வடகிழக்கு தெய்வம் – தட்சிணா மூர்த்தி
Click the links to get குரு பெயர்ச்சி ராசி பலன் for mesam rishbam mithunam kadagam simmam kanni thulam viruchigam thanus makaram kumbam meenam rasi palan