Rahu Ketu Peyarchi Rasi Palan thanus in Tamil – ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் தனுசு

On 2022-03-17 2:48:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan thanus

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் தனுசு - Rahu Ketu Peyarchi Rasi Palan for thanus in Tamil

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6, 12-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள் தற்போது ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சி மூலம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). உங்கள் ராசிக்கு ராகு 5-லும், கேது 11-லும் சஞ்சரிக்க உள்ளனர். நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிந்தித்து பேசுவது நல்லது. எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள்.

உங்கள் ராசிக்கு தற்போது 2-ல் சனி சஞ்சரிப்பதால் சிறிது காலத்திற்கு பேச்சில் பொறுமையுடன் இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களால் தேவைற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் ராசியாதிபதி குரு 4-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தற்போது இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

தொழில் வியாபாரத்தில் தற்போது உள்ள வாய்ப்புகளை தக்க வைத்து கொண்டு நீங்கள் சற்று கடினமாக உழைத்தால் படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 29-04-2022 முதல் 12-07-2022 வரை 3-ல் அதிசாரமாக சஞ்சரிக்க இருக்கும் காலத்தில் உங்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அடையும் யோகம் உண்டு. வரும் 17-01-2023 முதல் சனி உங்கள் ராசிக்கு 3-ல் திருக்கணிதப்படி சஞ்சரிக்க இருப்பதால் ஏழரைச்சனி முழுமையாக முடிந்து உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அது மட்டுமில்லாமல் குரு 22-04-2023 முதல் 5-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும்.

வரும் 2023-ல் உங்கள் வாழ்வில் மிகபெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமாகன சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபரத்தில் நல்ல முன்னேற்றம், இருந்த நெருக்கடிகள் விலகி அனைத்து வகையிலும் லாபங்கள் கிடைக்கும். தற்போது உள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை மேன்மை அடையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோக ரீதியாக இருந்த பணி சுமைகள் விலகி உங்கள் திறமைகள் பாராட்டப்படும். உயர் பதவிகள் கிடைக்கும் யோகம், எதிர்பார்த்த இடமாற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த மன கவலைகள் விலகி சமுதாயத்தில் கௌரவமான நிலையை எட்ட முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். சிறு பாதிப்பு என்றாலும் உடனே அதற்கு சிகிச்சை எடுப்பது நல்லது. நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். ஜனவரி 2023 முதல் உங்கள் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். சிலருக்கு வயிறு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது.

குடும்பப் பொருளாதார நிலை

குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பக்குவமாக கையாளுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாக உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சற்று சாதகமாக இருக்கும். 2023 ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் விலகி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள்.

உத்தியோகம்

பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் சற்று தாமதமாக கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும் சக நண்பர்களிடம் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2023 ஜனவரிக்கு பிறகு மிக பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உங்கள் செயல்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்து செல்வது நல்லது. தற்போது சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் 2023 ஜனவரி முதல் தொழிலில் சிறப்பான நிலையை அடைவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். பெரிய தொகைகளை கையாள்வதை தற்போதிய காலத்திற்கு தள்ளி வைக்கவும். 2023 ஜனவரிக்கு பிறகு உங்கள் பிரச்சினைகள் குறைந்து நல்ல லாபத்தை அடைய முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக வசூலாகும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு உயர் பதவிகள் ஜனவரி 2023-ல் கிடைக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவு அதிகரிக்கும். பத்திரிக்கையாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கூலியாட்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். கால் நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்கள்

எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் உழைப்பிற்கான பலன் தற்போது கிடைக்காக விட்டாலும் விரைவில் நல்ல நிலை அடைவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு இடையூறு ஏற்படும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். படப்பிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். சிலருக்கு கர்பபை சம்மந்தபட்ட பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உடல் நலத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் சற்று அனுசரனையாக நடந்து கொள்வது நல்லது. 2023 ஜனவரிக்கு பிறகு அனைத்து வகையிலும் மகிழ்ச்சி குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். மேற்படிப்பிற்காக வெளியூர் செல்வீர்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறு பாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்வீர்கள்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

உங்கள் ராசிக்கு 5-ல் ராகு கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக சில ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் கேது 11-ல் ராசியாதிபதி குரு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், சனி 3-ல் வரும் 29-04-2022 முதல் அதிசாரமாக சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத அனுகூலங்களை அடைவீர்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும். உங்களின் கடன் பிரச்சினைகள் சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். பின்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை இருத்தாலும் பொருட் தேக்கங்கள் விலகி படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திப்பீர்கள்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

உங்கள் ராசியாதிபதி குரு நட்சத்திரத்தில் கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். சனி 2-ல், குரு 4-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. ராகு 5-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ஒரு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றாலும் பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

கேது 11-ல் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு நற்பலனை பெறுவீர்கள். குரு 4-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை அடைய முடியும். சனி 2-ல் சஞ்சரிப்பதாலும், ராகு 5-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். குடும்பத்தில் அடிக்கடி சிறு சிறு தேவையற்ற ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்து கொள்வார்கள் என்பதால் சிந்தித்து பேசுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தற்போது தள்ளி வைக்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். பணிசுமை காரணமாக அதிக அலைச்சலை எதிர் கொள்ள நேரிடும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

உங்கள் ராசிக்கு 11-ல் கேது சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும். 3-ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். எல்லா வகையிலும் அனுகூலங்கள் கிடைக்கும். ராகு 5-ல் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இயற்கை உணவுகளாக எடுத்து கொண்டால் உடல் நலம் நன்றாக இருக்கும். வரும் 22-04-2023 முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைவது மட்டுமில்லாமல் கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபம் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள். உங்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து நல்ல பதவியை அடையும் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக வராது இருந்த சம்பளபாக்கி வந்து மகிழ்ச்சி ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தேடி வரும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

உங்கள் ராசிக்கு கேது 11-ல் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும். சனி 3-ல், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் இருந்த அனைத்து விதமான சோதனைகளும் மறைந்து மிகபெரிய வளர்ச்சியை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும்.

Click the links to get ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore