Rahu Ketu Peyarchi Rasi Palan meenam in Tamil – ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மீனம்

On 2022-03-17 2:48:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan meenam

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மீனம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for meenam in Tamil

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை 3, 9-ல் சஞ்சரித்த ராகு, கேது தற்போது ஏற்படும் மாறுதலால் திருக்கணிப் பஞ்சாங்கப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). சர்ப கிரகங்களான ராகு உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டிலும், கேது 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளதால் வரும் நாட்களில் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது, சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது உத்தமம்.

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சனி 17-01-2023 வரை சஞ்சரிப்பதால் சனியின் சாதக சஞ்சாரத்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலனை அடைய முடியும். புதிய உக்திகளை பயன்படுத்தி சமுதாயத்தில் நல்ல நிலையை எட்ட முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல நிலையும், கௌரவ பதவியை அடையும் வாய்ப்பும் உண்டாகும்.

சனி வரும் 17-01-2023 முதல் 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்குவதால் சனி மாற்றத்திற்கு பிறகு ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

உங்கள் ராசியாதிபதி குரு வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5, 7, 9- ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் சுப காரியங்களில் நிலவிய தடைகள் விலகி நல்லது நடக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் எதிலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

வரும் 22-04-2023 முதல் குரு 2-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் அக்காலத்தில் ஏழரைச்சனி நடைபெற்றாலும் பண வரவுகளில் அனுகூலங்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்க கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றங்களை அடைய முடியும். உத்தியோகத்தில் உள்ள பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும் இயற்கை உணவுகளை எடுத்து கொள்வதும் நல்லது. தூர பயணங்களை தவிர்க்கவும்.

குடும்பம் பொருளாதார நிலை

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப்பலன்களை அடைய முடியும்.

உத்தியோகம்

எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய நபர்களிடம் பேசும் போது பேச்சில் சிந்தித்து பேசுவது உத்தமம். தொழிலில் படிப்படியான வளர்ச்சியை அடையும் யோகம் உங்களுக்கு இருந்தாலும் உடல் நலத்திற்கு சற்று நேரம் ஒதுக்குவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம்.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் வசூல் செய்து விட முடியும். வம்பு வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி கிடைக்கும்.

அரசியல்

மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொது இடங்களில் பேசும் போது பேச்சில் கவனமாக இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். தக்க நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் எதையும் எதிர் கொள்ள முடியும்.

கலைஞர்கள்

உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து திறமைகளை வெளிபடுத்த முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்களது சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். கடன்களை பைசல் செய்ய முடியும். போட்டிகள் அதிகம் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும்.

பெண்கள்

கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, கணவர் வழி உறவினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்

கல்வியில் கவனமாக செயல்பட்டால் தான் முன்னேற்றத்தை அடைய முடியும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றாலும் படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். தனி திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் மனது அலைபாய கூடிய சூழ்நிலை உண்டாகும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 2-ல், கேது குரு நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது உடல் ஆரேக்கியத்திற்கு முக்கியதும் தருவது நல்லது. குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பண வரவில் சற்று நெருக்கடிகள் இருக்கும் என்பதால் சிக்கனமாக செயல்படவும். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய வாய்ப்பு உண்டு. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது சிறப்பு. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தொழிலில் அனுகூலங்களை அடைய முடியும். வங்கி மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 2-ல், கேது குரு நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு பார்வை 7-ம் வீட்டிற்கு இருப்பதால் சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் பொறுமையுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சனி 11-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தற்போது கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் சுப செலவுகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில்- வியாபாரத்தில் இருந்த நெருக்கடி குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமாராக இருந்தாலும் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் கடந்த கால பொருட் தேக்கங்கள் குறையும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 2-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க முடியும். சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் சுப செலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் இல்லாமல் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு கூடுதலாக இருக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 2-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் பிரச்சினைகள் ஏற்படும். குரு வரும் 22-04-2023 முதல் 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் விலகி படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். எந்த நெருக்கடிகளையும் எதிர்கொண்டு நற்பலன்களை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமல் இருப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அலைச்சல் டென்ஷன்களால் உடல் சோர்வு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. தொழில்- வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை மாறி லாபங்களை அடைய முடியும். கொடுத்த கடன் தக்க நேரத்தில் திரும்பி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். வெளியூர் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய ஒற்றுமை குறைவுகள் விலகி நிம்மதி ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் உங்கள் கஷ்டங்கள் விலகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு புது வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கேது சித்திரை நட்சத்திரத்தில் 8-ல், சனி 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. இயற்கை உணவுகளை எடுத்து கொண்டால் ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்கலாம். தொழில்- வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய திட்டங்களை செயல்படுத்தி தொழிலை விரிவுபடுத்த முடியும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த வேலைபளு குறைந்து பதவி உயர்வுகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் பணியை சிறப்பாக செய்து நற்பெயர் எடுப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் நீங்கள் மன நிம்மதியுடன் பணி புரிய முடியும்.

Click the links to get ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore