Rahu Ketu Peyarchi Rasi Palan simmam in Tamil – ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் சிம்மம்

On 2022-03-17 2:48:13

Today's Horoscope For Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius and Pisces. Check out the Daily Rasipalan in Tamil for your Rasi. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்.

inraiya rasipalan simmam

ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் சிம்மம் - Rahu Ketu Peyarchi Rasi Palan for simmam in Tamil

மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்மராசி நேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு 4, 10-ல் சஞ்சரிக்கும் ராகு கேது தற்போது ஏற்படும் இடபெயர்ச்சி மூலம் திருக்கணிதப்படி வரும் 12-04-2022 முதல் 30-10-2023 வரை (வாக்கியப்படி 21-03-2022 முதல் 08-10-2023 வரை). ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் கேதுவும், 9-ஆம் வீட்டில் ராகுவும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பாகும். ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி வரும் 17-01-2023 முடிய உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உங்களுக்கு இதுநாள் வரை இருந்த அலைச்சல்கள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடந்த கால கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைபளு குறைந்து உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். சிலர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைவார்கள்.

ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு 8-ல் வரும் 13-04-2022 முதல் 22-04-2023 வரை சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சற்று தேக்கம், சுபகாரியங்கள் கைகூட இடையூறுகள் ஏற்படும் என்றாலும் சனி, கேது சாதகமாக இருப்பதால் எதையும் சிறப்பாக கையாண்டு நற்பலனை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

வரும் 22-04-2023 முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். இக்காலத்தில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் கைகூடுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்கள் தற்போது தடைப்பட்டாலும் 2023 ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும் குறையும்.

உத்தியோகம்

பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை அடைய முடியும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும்,

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். போட்டி பொறாமைகள் மறையும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்கள் சற்று தாமதமாக வசூலாகும். பெரிய தொகைகளை கையாளும் போது சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய அனுகூலத்தை அடைய முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

அரசியல்

பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகளில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு செய்யவும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. பங்காளிகளிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. கால் நடைகளால் எதிர்பாராத செலவுகளை எதிர் கொள்வீர்கள். கடன் சுமைகள் குறையும்.

கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடைபட்டு கொண்டிருந்த பணத்தொகைகள் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் வீடு போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். இசை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும் படிபடியாக குறையும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் கடந்த காலங்களில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரல் 2023க்கு பிறகு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ மாணவியர்

நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் ஏற்படும். படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

 

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 12-04-2022 முதல் 14-06-2022 வரை

ராகு சூரியன் நட்சத்திரத்தில் 9-ல், கேது குரு நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். உங்கள் செயல்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி அதிசாரமாக வரும் 29-04-2022 முதல் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். வேலையாட்களிடமும் கூட்டாளிகளிடமும் சற்று விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு கூடுதலாக இருக்கும். உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் சிறு வாய்ப்பை கூட தவற விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 15-06-2022 முதல் 17-10-2022 வரை

ராகு சுக்கிரன் நட்சத்திரத்தில் 9-ல், கேது விசாக நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் பல்வேறு வகையில் அனுகூலமான பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணி புரிய முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும்.

ராகு பரணி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 18-10-2022 முதல் 20-02-2023 வரை

ராகு பரணி நட்சத்திரத்தில் 9-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினை பெற்று விட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைத்து உங்களுக்கு இருந்த பொருட்தேக்கங்கள் குறையும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சுவாதி நட்சத்திரத்தில் 21-02-2023 முதல் 26-06-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் 9-ல், கேது சுவாதி நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு வரும் 22-04-2023 முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுபகாரியகங்ளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். பகைமை பாராட்டியவர்களும் நட்பு கரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். புதிய திட்டங்களை செயல்படுத்தி தொழிலில் லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழும் வாய்ப்பு ஏற்படும். வேலை தேடியவர்களுக்கு கௌவரமான இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

ராகு அசுவனி நட்சத்திரத்தில், கேது சித்திரை நட்சத்திரத்தில் 26-06-2023 முதல் 30-10-2023 வரை

ராகு அசுவனி நட்சத்திரத்தில் குரு சேர்க்கை பெற்று 9-ல், கேது செவ்வாய் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும். உங்களின் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால பண பிரச்சினைகள் விலகி மன நிம்மதியுடன் வாழ முடியும். வாங்கிய கடன்களை பைசல் செய்ய முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல வளர்ச்சி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

Click the links to get ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் for mesam  rishbam  mithunam  kadagam  simmam  kanni  thulam  viruchigam  thanus  makaram  kumbam  meenam   rasi palan

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore