இறந்த குழந்தையை புதைக்க குழி தோண்டிய போது 3 அடியில் மண்பானையில் உயிருடன் இருந்த மற்றொரு குழந்தை.!

Updated On

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையை புதைக்க குழி தோண்டினார்கள், அப்போது மண்பானையில் வைத்து உயிருடன் புதைக்கப்பட்டிருந்த பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி அருகில், ஹித்தேஷ் குமார் சிரோஹி அவரின் மனைவிக்கு 7 மாதத்திலேயே பெண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவத்தில் பிறந்ததால், சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து குழந்தையை புதைப்பதற்காக கொண்டு சென்ற சிரோஹி, அதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

அப்போது குழியிலிருந்து கிடைத்த மண்பாணையில், பச்சிளம் பெண் குழந்தை ஒன்று மூச்சு விடத் திணறியபடி இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிரோஹி, அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சுமார் 3 அடி ஆழத்தில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார் என்பது குறித்தும், குழந்தையின் பெற்றோர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மீட்கப்பட்ட பெண் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், குழந்தையின் மருத்துவ செலவுகளை பிதாரி செய்ன்பூர் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா ஏற்றுள்ளதாகவும், மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

குழந்தையை உயிருடன் புதைத்தது யார், அந்த குழந்தையின் பெற்றோர் யார்? அவர் எங்கு சென்றனர்? மேலும் எப்போது புதைக்கப்பட்டது, புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பது எப்படி என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore