கார்த்திகையில் தீபம் ஏற்றினால் என்னென்ன புண்ணியம் தெரியுமா?

Updated On

திருக்கார்த்திகை தீபம் நன்மைகள்

கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் முருகரை அதிகம் வழிபாடு செய்வர்.

கார்த்திகை தீபம் கொண்டாடுவது ஏன்?

தமிழ் பாரம்பரியத்தில் தீப வழிபாடு என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். கார்த்திகை மாதத்தில் வீட்டினை சுத்தம் செய்து இரண்டு வேளையும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தீய சக்திகள் விலகி, இல்லத்தில் லட்சுமி கடாட்ச்ம் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் (நவம்பர் 26 )கார்த்திகை 10 – ஆம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கார்த்திகை மாத சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கார்த்திகை தீபம் பலன்கள்

 • கார்த்திகை தீபத்தன்று வீட்டில் நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும் என்று பெரியோர் கூறுவர். அதற்க்கு காரணம் பசு நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
 • கார்த்திகை மாதம் முழுவதும் கோவில் மற்றும் இல்லத்தில் விளக்கேற்றி பூஜை செய்வதன் மூலம், பெரிய யாகத்திற்கு சமமான பலனை பெறமுடியும்.
 • மாதம் முழுவதும் விளக்கேற்ற முடியாதவர்கள் பவுர்ணமி, சதுர்த்தசி மற்றும் துவாதசி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது வீடு மற்றும் வாசலில் விளக்கேற்றி பூஜை வேண்டும்.
 • கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை எழுந்து புனித நீராடி சிவனை வழிபாடு செய்வதன் மூலம் சிவனருள் பெற முடியும்.
 • திருக்கார்த்திகை தீபத்தன்று அவல் பொரியும், நெல் பொரியும் ஒன்றாக சேர்த்து வெல்லப்பாகு சேர்த்து கலந்து சிவபெருமானுக்கு படைப்பது வழக்கம். இவ்வாறு படைப்பதன் மூலம் சிவனருள் கிடைக்கும்.
 • கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்கு காரணம், நமது உடல் மற்றும் உள்ளம் இந்த மாதத்தில் தான் சீராக இருக்கும். அதனால் நமது விரத முறை சிறப்பாக நடைபெறும்.
 • இந்த மாதத்தில் அசைவ உணவு மற்றும் மது தவிர்த்து, விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவர்.
 • நவகிரக தோஷங்கள் நீங்க, கார்த்திகை ஞாயிறு அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
 • கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 • தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
 • கார்த்திகை பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்றால் அனைத்து தேவர்களின் ஆசியும் கிடைக்கும்.
 • திருமணமாகாத பெண்கள், கார்த்திகை ஏகாதசி அன்று துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு கிளையை வைத்து பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
 • கார்த்திகை ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெய் தீபமேற்றி வணங்கினால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
 • கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
 • கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 • கார்த்திகை மாதத்தில் விஷ்ணுவிற்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தேவர்களுக்கு நிகரான அருளை பெற முடியும்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் அறிய: கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2023திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore