குழந்தை பிறந்தவுடன் வீறிட்டு அழுவது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

Updated On

பிரசவம் முடிந்து, வலியால் அன்னை அழுகிறாளோ இல்லையோ பிறக்கும் குழந்தை வீறிட்டு அழுது கொண்டு பிறக்கிறது. இவ்வாறு பிறந்தவுடன் குழந்தை அழுவது எதனால் என்று என்றேனும் யோசித்து பார்த்ததுண்டா? குழந்தை தாயின் பிரசவ வலியை எண்ணி கண்ணீர் சிந்துகிறதா?

கருவறை போன்ற தூய்மையான பாதுகாப்பான இடத்தை விட்டு, பாதகர்கள் நிறைந்த இந்த உலகில் வாழப்போவதை எண்ணி அழுகிறதா? எதன் காரணமாக குழந்தையின் கண்கள் கண்ணீர் சிந்துகின்றன? அந்தக் கண்ணீரின் உண்மையான காரணம் என்ன என்று இந்த பதிப்பில் படித்தறிவோம் வாருங்கள்!

அப்கார் சோதனை

குழந்தை பிறந்த அடுத்த நிமிடம் அப்கார் சோதனை எனும் ஒரு டெஸ்ட் நடத்தப்படுகிறது; அது குழந்தை பிறந்த அடுத்த நொடி, இந்த அப்கார் சோதனை ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை நடத்தப்படுகிறது. இந்த சோதனை குழந்தையின் ஆரோக்கியத்தை பற்றி அறிவதற்காக நடத்தப்படுகிறது. குழந்தையின் நிறம் அதாவது மெலனின் அளவு, மூச்சுப்பாதை மற்றும் மூச்சு உறுப்புகளின் சக்தி, இதயத்துடிப்பு வீதம், தசைகளின் ஆரோக்கியம் போன்றவை பரிசோதிக்கப்பட்டு அதற்கு மார்க் – ஸ்கோர் அதாவது மதிப்பெண் வழங்கப்படுகிறது; இந்த மதிப்பெண் 0-2 மதிப்பெண்கள் வரை வழங்கப்படுகிறது.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மதிப்பெண்

இந்த மதிப்பெண்கள் அதிகப்படியாக பத்து வரை அளிக்கப்படுகிறது; குழந்தையின் அழுகைக்கு 7-10 வரை அளிக்கப்பட்டால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்; 4-6 வரை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டால் குழந்தையின் மூச்சுப்பாதைக்கு கொஞ்சம் சிகிச்சை தேவை என்று பொருள்; நான்கிற்கும் குறைவான மதிப்பெண்கள் அளிக்கப்பட்டால் அது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தும். பொதுவாக குழந்தைக்கு நடத்தப்படும் அப்கார் சோதனை ஏழிற்கும் குறைவாக இருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு கட்டாயம் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.

நஞ்சுக்கொடி

பிறந்தவுடன் குழந்தை நன்கு வீறிட்டு அழுவது, முக்கியமாக ஆக்சிஜனை பெற, சுவாசிக்க தான்; அழுகையின் மூலம் குழந்தையால் எப்படி சுவாசிக்க முடியும்? என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழுகிறதா? ஆம் இது உண்மை தான். குழந்தை தாயின் வயிற்றில் நஞ்சுக்கொடி மூலமாக சுவாசித்து வாழ்ந்து வந்திருக்கும்; குழந்தை பிறக்கும் பொழுது அந்த நஞ்சுக்கொடியின் திரவம் குழந்தையின் நுரையீரலில் நிறைந்திருக்கும்; பின் பிரசவத்தின் போது இந்தக்கொடி அறுக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கும். எனவே, குழந்தை பிறந்தவுடன் மூச்சுவிடத் திணறும்.

உண்மைக் காரணம்!

பிறந்ததும் குழந்தை வீறிட்டு அழுதால், குழந்தையின் நுரையீரல்கள் விரிவடைந்து, புவியின் ஆக்சிஜனை சுவாசிக்க ஆயத்தமாகும். இந்த காரணத்தால் தான் குழந்தை பிறந்ததும் முதல் வேலையாக நன்கு வீறிட்டு அழுகிறது; அப்படி அழுதால் தான் அதனால் மூச்சுவிட்டு உயிர் வாழ முடியும். மேலும் குழந்தை மூச்சு வழியாக உள்ளிழுக்கும் காற்று, நுரையீரலில் மற்றும் குழந்தையின் சுவாச உறுப்புகளில் நிறைந்திருக்கும் இந்த திரவத்தை வெளியேற்றி நம்மை போல் மாற்றிவிடும்.

ஆரோக்கியத்தின் அறிகுறி

குழந்தை பிறந்தவுடன் கட்டாயமாக அழுக வேண்டும்; அந்த அழுகை குழந்தை ஆரோக்கியமாக தான் பிறந்துள்ளது என்று குழந்தையின் ஆரோக்கியத்தை குறிக்கிறது. குழந்தை அழுகும் போது வெளிப்படும் அந்த வீறிடல் குழந்தையின் மூளையின் மூலச்செல்களால் நிச்சயிக்கப்பட்டு வெளிவருகிறது; இந்த அழுகை அறிகுறி குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக தான் இயங்குகிறது என்று தெரிவிப்பதற்காக ஏற்படுகிறது.

உங்களுக்கு தெரிவிக்க..!

குழந்தைகள் பிறந்ததும் சரியாக அழுகை வெளிப்படவில்லை என்றால், அது குழந்தையின் வளர்ச்சி அன்னையின் தகாத செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. அன்னை கர்ப்பகாலத்தின் போது குடிப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்களை மேற்கொண்டிருந்தாலோ, சரியான உணவு முறையை பின்பற்றாமல் இருந்திருந்தாலோ அது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதித்திருக்கும். அதை குழந்தையின் அழுகை பிறந்தவுடனேயே உணர்த்துகிறது.

குழந்தை பிறந்தவுடன் அழுவது தன் அன்னைக்கு தான் நலமாக தான் உள்ளேன் என்பதை உணர்த்தவே! குழந்தையின் ஒரு அழுகையில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் உள்ளன என்று பாருங்களேன்..! குழந்தையின் அழுகையின் அர்த்தத்தை அறிந்து, குழந்தையின் ஆரோக்கியம் காக்க முயலுங்கள் தாய்மார்களே! பெற்றோர்களே!திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore