சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

Updated On

சொக்கப்பனை கொளுத்துவதற்கான காரணம்

கார்த்திகை கூம்பு என்றால் என்ன?

சொக்கப்பனை என்பது பனை மரத்தின் துண்டு மற்றும் பனை ஓலையால் செய்யப்படும் ஒரு நிகழ்வு. கார்த்திகை தீபத்தன்று பனை மரத்தின் ஒரு துண்டை வெட்டி எடுத்து வந்து, அதனை சுற்றி பனை ஓலைகளை கட்டி அதில் தீ மூட்டுவது தான் சொக்கப்பனை ஆகும். இதனை கார்த்திகை கூம்பு என்றும் அழைப்பர்.

பனை மரம் என்பது மிகவும் சிறப்பான ஓன்று. பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்தும் நாம் பயன்படுத்தும் ஒன்று. அது போல தான் சிவனும், நமக்கு எல்லாமுமாம் இருக்கும் ஒரு கடவுள் ஆவார்.

சொக்கன் என்றால் சிவன், சிவனுக்காக பனை மரத்தில் தீ மூட்டுவதால் சொக்கப்பனை என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. சிவன் மற்றும் முருகன் கோவில்களில் கார்த்திகை தீபத்தன்று இரவு வேளையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

கார்த்திகை தீபம் 2023

கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம், கார்த்திகை மாதத்தில் பயிர்கள் நன்றாக வளர்ந்து செழிப்பாக இருக்கும், அந்த தருணத்தில் பூச்சிகள் அதிகமாக பாதிக்கும். அந்த பூச்சிகளில் இருந்து பாதுகாக்க வீடுகளில் விளக்கேற்றி, பூச்சிகளை விளக்கு வெளிச்சத்தில் கவர்ந்து கொல்லப்படுவதால், பூச்சி பாதிப்புகளை குறைக்க முடியும் என்று முன்னோர்கள் நம்பினார்கள். இதன் காரணமாக கார்த்திகை மாதம் முழுதும் வீடுகளில் விளக்கேற்றியும், சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றியும் வழிபாடு செய்தனர்.

சொக்கப்பனை என்பது மருத்துவ குணம் நிறைந்த பனை மரத்தின் கட்டை மற்றும் பனை ஓலையினை வைத்து செய்யப்படும் ஒரு செயல்.

மனிதர்களும் பனை மரத்தின் பாகங்களை போல அனைவருக்கும் உபயோகமாக இருந்தால், இந்த ஜென்மத்திலே முக்தி பெற்று சுவர்க்கத்தை அடைய முடியும் என்று தெரிவிப்பதற்காக சொர்க்கப் பனை என்று சொல்லக்கூடிய சொக்கப்பனை வைக்கப்படுகிறது.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore