தாடிக்கொம்பு கோவிலில் செய்யும் பரிகாரமும்: தீரும் பிரச்சனையும்

Updated On

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் எந்த வழிபாட்டு பரிகாரங்களை செய்தால் எந்தெந்த பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ ஹயக்ரீவர் : கல்வி ஞானம் மேம்பட ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ஸ்ரீ தன்வந்திரி : தேக ஆரோக்கியம் ஏற்பட, சகல வியாதிகளும் நீங்க அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

ஸ்ரீ லெஷ்மி நரசிம்மர் : கடன்களில் இருந்து விடுபட, மனசஞ்சலம் நிவர்த்தி கிடைக்க, பதவி உயர்வு பெற பவுர்ணமி, சுவாதி, பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

ஸ்ரீ ஆண்டாள் ரதி மன்மதன் : திருமண தடை நீங்க வியாழன் தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

ஸ்ரீ வேணு கோபால சுவாமி : குழந்தை பாக்கியம் கிடைக்க ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் : திரும்பி வராத கடன், பொருளாதார சிக்கல் நீங்க தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை நடைபெறும்.

ஸ்ரீ தாயார் : மகாலெட்சுமியின் அருள் கிடைக்க உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

ஸ்ரீ சவுந்தரராஜபெருமாள் : வேண்டுதல் அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore