சாம்பிராணி தூபம் போடுவதால் தீரும் பிரச்சனைகள்

Updated On

நாம் தினந்தோறும் பூஜை செய்யும் போது சாம்பராணி தூபம் செய்வது வழக்கமாக வைத்துள்ளோம், ஆனால் இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. சாம்பராணி தூபம் அல்லாது இன்னும் நிறைய தூப முறைகள் உள்ளது, ஒவ்வொரு தூபத்திற்கும் ஒரு நன்மைகள் உள்ளது. எந்த தூபம் போட்டால் எந்த பிரச்சனைகள் தீரும் என்று கீழே பார்ப்போம்.

சந்தனதத்தில் தூபம் – தெய்வ கடாட்சம் உண்டாம்.

சாம்பிராணியில் தூபம் -கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

ஜவ்வாது தூபம் -திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

அகிலி தூபம் -குழந்தை பாக்கியம் உண்டாகும்.

துகிலி தூபம் -குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.

துளசி தூபம் – காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

தூதுவளை தூபம் -எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

வலம்புரிக்காய் தூபம் -பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

வெள்ளைகுங்கிலியம் தூபம் -துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.

வெண்கடுகு தூபம் -பகைமை எதிர்ப்புகள் விலகும்.

நாய்கடுகு தூபம் -துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

மருதாணிவிதை தூபம் -சூனிய கோளாறுகளை நீக்கும்.

கரிசலாங்கன்னி தூபம் -மகான்கள்அருள்கிட்டும்.

வேப்பம்பட்டை தூபம் -ஏவலும் பீடையு நீங்கும்.

நன்னாரிவேர் தூபம் -இராஜவசியம் உண்டாக்கும்.

வெட்டிவேர் தூபம் -சகல காரியங்களும் சித்தியாகும் .

வேப்பஇலைதூள் தூபம் – சகலவித நோய் நிவாரணமாகும்.

மருதாணிஇலைதூள் தூபம் -இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அருகம்புல்தூள் தூபம் – சகல தோஷமும் நிவாரணமாகும்.

மேலே குறிப்பிட்டுருக்கும் அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும். !



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore