நீங்கள் பிறந்த ஆண்டு இதுவா? அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்

Updated On

எண்களை வைத்தும் சிலரது வாழ்க்கை, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் பிறந்த வருடத்தின் கடைசி எண்ணை வைத்து ஒருவரது பொதுவான குணாதியங்கள் எப்படி எல்லாம் இருக்கலாம் என்று கணித்து கூறுவது தான் இது.

1ல் முடிவடையும் ஆண்டுகள்

(1951, 61, 71, 81, 91, 01,11.. )

ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 1ல் முடிந்தால், அவர் போட்டி மனப்பான்மை மற்றும் என்ன நடந்தாலும் சரி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பும் கொண்டிருப்பார்கள். ஊக்கம், பேரார்வம், போர்குணம், கனவை வெல்ல வேண்டும் என்ற ஆற்றல் இருக்கும். எதையும் எளிதாக விட்டுகொடுத்து விடமாட்டார்கள். தங்கள் கடைசி மூச்சுள்ளவரை போராடி வெல்ல முயற்சி செய்வார்கள்.

இரண்டில் முடிவடையும் ஆண்டுகள்

(1952, 62, 72, 82, 02, 22..)

ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 2ல் முடிந்தால். இவர்கள் ரெட்டை குணம் கொண்டிருப்பார்கள். ரெட்டை வாழ்க்கை வாழ்ந்து வருவார்கள். பொதுவானவர்கள் மத்தியில் ஒரு மாதிரியும், தங்களுக்கு பிடித்தவர்கள் மத்தியில் வேறு மாதிரியும் வாழும் குணம் கொண்டிருப்பார்கள். தங்கள் வாழ்வில் யார் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எல்லை வகுத்து வைத்திருப்பார்கள். இவர்கள் முழுமையாக எப்படிப்பட்ட நபர் என்று அறிவது கொஞ்சம் கடினமானது.

மூன்றில் முடிவடைந்தால்

(1953, 63, 73, 83, 93, 03, 13 etc.) ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 3ல் முடிந்தால். பல்வேறு கோணங்கள் கொண்ட குணாதியம் தென்படும். அனைவருக்கும் ஒரு நபர், பொருள், சூழல் மீது ஒரு தனி பார்வை இருக்கும். ஆனால், இவர்கள் ஒரே விஷயத்தில் பல்வேறு கோணங்கள் கொண்ட பார்வை வைத்திருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவுக்கு வரும் முன்னர், பலரிடம், பலதரப்பட்ட கருத்துக்களை கேட்டபிறகே முடிவு எடுப்பார்கள். மேலும், இவர்கள் எடுக்கும் முடிவுகள் நபர்களை பொருத்து வேறுபடவும் வாய்ப்புகள் உண்டு.

நான்கில் முடிவடைந்தால்

(1954, 64, 74, 84, 94, 04, 14 etc.) ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 4ல் முடிந்தால்… மிகவும் கவனமாக இருக்கும் நபர். நான்கு புறங்களில் இருந்தும் எப்படியான தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, ஆராய்ந்து கவனமாக செயற்படுவார்கள். தங்களை எது ஊக்கவிக்கும், எது தடுத்து நிறுத்தும் என்று அறிந்து வைத்திருப்பார்கள். இவர்களது சொந்த கருத்தே, இவர்களது பெரிய சொத்து.

ஜந்தில் முடிவடைந்தால்

(1955, 65, 75, 85, 95, 05, 15 etc.) ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 5ல் முடிந்தால். மனித நேய குணம் கொண்டிருப்பார்கள். இவர்களது குணாதியங்கள் நெருப்பு, நீர், பூமி, மனது, காற்று என்ற இயற்கையின் ஐந்து கூறுகளையும் கொண்டிருக்கும். இவர்களால் எதையும் செய்து முடிக்க முடியும், தாங்கள் நினைக்கும் எந்த நிலையையும் அடைய முடியும்.

எண் ஆறு

(1956, 66, 76, 86, 96, 06, 16 etc.) இவர்கள் வாழ்க்கையின் கரும் பகுதியை விரும்பி கையாளும் நபர்கள். இவர்கள் குணாதிசயத்தின் ஒரு பகுதி இருளை / தீமையை / எதிமறை செயலை வளர்த்தெடுக்கும். இதனால் இவர்கள் கெட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், எதையும் அழிக்கும் சக்தி இவர்களுக்கு உண்டு. இதை தீயவர்கள் மீதும் கூட இவர்கள் செலுத்தலாம். அல்லது தங்களுக்கு விருப்பமான நபர்களை மிரட்டும் நபர்களுக்கு எதிராக கூட பயன்படுத்தலாம்.

எழு

(1957, 67, 77, 87, 97, 07, 17 etc.) ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 7ல் முடிந்தால்… இவர்கள் இயல்பாகவே கொஞ்சம் புதிரானவர்களாக தான் இருப்பார்கள். சிரித்த முகத்துடன் காணப்படும் இவர்கள் கொஞ்சம் ஸ்மூத்தானவர்களும் கூட. இவர்கள் பெரும் இரகசியங்களை மறைத்து வைத்திருப்பார்கள். இவர்கள் புன்னைகைக்கு பின்னால் இரகசியங்கள் குவிந்திருக்கும். அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. புதிரான இவர்களை பற்றி சுற்றி இருப்பவர்கள் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

எட்டு என்ற எண்ணில் உங்கள் பிறந்த வருடம் முடிவடைந்தால்

(1958, 68, 78, 88, 98, 08, 18 etc.) ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 8ல் முடிந்தால்… ஆழமான கருத்துக்கள் கொண்டிருப்பார்கள். நல்ல ஐடியாக்கள் வைத்திருப்பார்கள். பெரும் திருப்புமுனைகள் கொண்டிருப்பார்கள். வெறுமென மொக்கை பேச்செல்லாம் இவர்களிடம் செல்லுபடி ஆகாது. ஏதாவது அர்த்தமுள்ளதாக இருந்தால் மட்டுமே பேசுவார்கள். இல்லையேல் எழுந்து போய்விடுவார்கள். அதே போல தங்களுக்கு இணையான அறிவு, கருத்தியல் கொண்டிருப்பவர்கள் உடன் மட்டுமே அதிகம் பேச விரும்புவார்கள்.

ஒன்பது

(1959, 69, 79, 89, 99, 09, 19 etc.) ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 9ல் முடிந்தால்… எதையும் நுணுக்கமாக பார்ப்பார்கள், மேலோட்டமாக பார்த்து எதையும் தேர்வு செய்யும் வழக்கம் இவர்களிடம் இருக்காது. அது பொருளாக இருக்கட்டும் அல்ல மனிதராக இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என கருதுவார்கள். சிறந்த ரிசல்ட் மட்டுமே இவர்களை திருப்தி படுத்தும். இதுவே நன்றாக இருக்கிறதே என்று நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். ஒருவேலையின் சிறந்த ஆவுட்புட் வரும் வரை காத்திருப்பார்கள்.

பத்து

(1950, 60, 70, 80, 90, 00, 10 etc.)

ஒருவேளை நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி எண் 0ல் முடிந்தால்… எந்த வேலையாக இருந்தாலும் அதற்குள் தங்களை பொருத்தி கொள்வார்கள். வளைந்துக் கொடுத்து இடத்திற்கு, சூழலுக்கு ஏற்ப மாறிக் கொள்வார்கள். ஸ்மார்டான இவர்கள் எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஜீரோ என்பது இடத்திற்கு ஏற்றார் போல தன் மதிப்பை மாற்றிக் கொள்ளும் அல்லவா. அதே போல தான் இவர்களும். ஆற்றல் மிகுந்த இவர்கள் கொஞ்சம் புதிரானவர்களும் கூட.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore