அதிஷ்டம் தரும் ஆடி பெருக்கு
ஆடி 18 2023 English Date – 03-08-2023
ஆடிப்பெருக்கு என்றால் என்ன? | Aadi Perukku 2023
பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவ மழை நன்றாக பொழியும், இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆடி மாதத்தில் தான் மக்கள் விதை விதைப்பார்கள். ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் உண்டு. அதற்க்கு காரணம் ஆடி மாதத்தில் தான் பருவ மழை பொழியும். ஆடி மாதத்தில் ஆற்றில் வெள்ளம் வருவதால் அதை ஆடி பெருக்கு என்று அழைக்கின்றனர். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவர்.
ஆடி பெருக்கு வரலாறு | Aadi Perukku History
ஆடி பெருக்கு உருவானதற்கு காரணம், நம் பயிர்களுக்கு நீர் கொடுத்து உயிரழிக்கும் காவிரி ஆற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொடங்கப்பட்டது. இப்போது இந்த விழா ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். பொதுவாகப் பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும். இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவார்.
ஆடி பெருக்கு என்ன செய்ய வேண்டும் | What to do on Aadi Perukku
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி 18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். அங்கு பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவார்கள். பின்னர் அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். இந்த விழாவில் சிறப்பு அம்சமாக ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள்.